பொருளாதார ஏற்றம் காண வேண்டுமா?

இல்லம் என்பது நமக்கு இதம் தரும் இடம் ஆகும். ஆனால் நாம் நாள் முழுவதும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதில்லை. பல்வேறு காரணங்களுக்காக நாம் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. வீட்டில் நிம்மதி நாடும் நாம் வெளியிடங்களில் நமக்கென்று ஒரு இமேஜ் வேண்டும் என்று கருதுவோம். சமூகத்தோடு ஒத்து வாழும் போது பலவிதமான அனுபவங்களை நாம் சந்திப்போம். வெளியிட நிகழ்வுகள் யாவும் பெரும்பாலும் நமது அந்தஸ்தை வைத்து தான் இருக்கும். அதற்கேற்ப தான் நாம் செயல்பட முடியும். இந்த அந்தஸ்து என்பது வெளியிடம் மட்டும் இன்றி நமது உறவினர், அக்கம்பக்கத்தினர் என அனைவரிடமும் பராமரிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இவை அனைத்தும் நமது பொருளாதார நிலையின் அடிப்படையில் தான் அமையும். நமது பொருளாதார நிலையை வைத்து தான் நம்மை பிறர் நடத்தும் விதம் அமையும் என்ற உண்மையை நம்மால் மறுக்க இயலாது.
இளம் வயதில் நல்ல கல்வி, வாலிப வயதில் நல்ல ஆடை, ஆபரணம், வண்டி வாகனம்,நல்ல வேலை திருமணம், பிறகு குழந்தை செல்வங்கள் மத்திம வயதில் வீடு மனை நிலம், முதிய வயதில் நிம்மதியான வாழ்வு என அனைத்தும் இருந்தால் தான் நம்மை பிறர் மதிப்பார்கள். இதற்கெல்லாம் பணம் தான் காரணம். அந்த பணத்தை நோக்கித் தான் நாம் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதுவே நமது பொருளாதார நிலையை நிர்ணயிக்கிறது.
பொருளாதார நிலை மேம்பட
என்ன தான் நமது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள நாம் வேண்டிய முயற்சிகளை எடுத்தாலும் கடவுள் அருள் இருந்தால் தான் அதனை அடைய இயலும். அதற்கு என்ன செய்வது? உங்கள் கவலையை விடுங்கள். கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாக இருக்கும் முருகப் பெருமானை பிடித்துக் கொள்ளுங்கள். முருகன் அருள் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும்.
முருகன் இருக்க பயமில்லை, அவன் வேலிருக்க வினை இல்லை. எனவே நீங்கள் முருகனை சரண் அடைந்து விடுங்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு நாள் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். அந்த வகையில் முருகனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். முருகனை வழிபட எவ்வளவோ விசேஷ நாட்கள் உள்ளன. அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுபவர்களும் உண்டு. அவ்வாறு முக்கியமான நாட்கள் மட்டும் இன்றி பிரதி செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடலாம்.
இந்த வழிபாடு மிகவும் எளிமையாது. செவ்வாய்க்கிழமை காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். முதல் நாளே பூஜை அறையை தயார் செய்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து குளித்து தூய ஆடை அணிந்து வழக்கமான பூஜை மேற்கொள்ளுங்கள். பிறகு முருகனின் திருவுருவப் படத்திற்கு முன் இரண்டு நெய் விளக்கு ஏற்றி அரளிப் பூவை சாற்றி உங்கள் வேண்டுதலை வையுங்கள். “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை 108 முறை ஜெபியுங்கள்.இவ்வாறு தொடர்ந்து செய்து வர உங்கள் பொருளாதார முன்னேற்றத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். உங்கள் அந்தஸ்து உயரும்.
நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டு முருகன் அருளால் பொருளாதார ஏற்றத்தைக் காணுங்கள்.
