AstroVed Menu
AstroVed
search
search

பூஜை அறை குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

dateJuly 11, 2023

பூஜை அறையில் மஞ்சள் குங்குமம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் குங்குமம் இருக்கும் டப்பாவில் கற்பூரம் போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் பாதுகாத்துக் கொள்ள இயலும்.

திரியைத் தூண்ட  அல்லது விளக்கை குளிர வைக்க காய்ந்த துளசி குச்சிகளை பயன்படுத்த வேண்டும்.

தினமும் சாம்பிராணி தூபம் போட வேண்டும்.

தீபம் ஏற்றும் போது திரி எரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காமாட்சி விளக்கை காலை மாலை என இரு வேளையும் ஏற்ற வேண்டும். பூஜை சாமான்களை தினமும் சுத்தம் செய்ய இயலாவிட்டால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுத்தம் செய்ய வேண்டும்.

விளக்கை ஏற்ற நல்லெணெய், நெய் அல்லது இலுப்பெண்ணெயை பயன்படுத்த வேண்டும். கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றக் கூடாது.

வீட்டில் காலை மாலை என இரு வேளையிலும் சாமி பாடல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் வேண்டுதல் செலுத்தும் போது அமர்ந்தவாறு வணங்க வேண்டும்.

யாராவது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தால் வீட்டில் விளக்கு ஏற்றுதல் கூடாது. அவர்கள் எழுந்த பின் விளக்கு ஏற்ற வேண்டும். சிறு குழந்தைகள் விதிவிலக்கு.

பூஜையின் போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது

காலையில் நாராயணனையும் இரவில் சிவ பெருமானையும் வணங்க வேண்டும்.

பூஜை அறையில் குபேரர் தவிர மற்ற படங்களை வடக்கு பார்த்து  வைக்கக் கூடாது

ஈர உடை,  ஒராடையுடன்  தலையில் துண்டுடன்  வழிபாடு செய்யக் கூடாது

கலசம் ஒன்றில் நீரை வைத்து பின்னர் தான் பூஜையை துவங்க வேண்டும்.

தாம்பூலம் என்பது மங்களகரமான ஒரு முக்கிய பொருள் ஆகும். பூஜை செய்யும் போது கண்டிப்பாக தாம்பூலம் இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பொருள் கற்கண்டு ஆகும். இனிப்பான பொருட்களை வைத்து வேண்டுதல் வைக்கும் பொழுது அந்த வேண்டுதல்களும் இனிப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை.


banner

Leave a Reply