செல்வ வளம் அளிக்கும் புவனேஸ்வரி அன்னை வழிபாடு

இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து நாம் வெற்றியைப் பெற புவனம் என்னும் உலகத்தை ஆளும் புவனேஸ்வரி அருளைப் பெற வேண்டும். அன்னை புவனேஸ்வரி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முப்பெரும் சக்தியை நமக்கு அருள்பவள். அவளை வணங்குவதன் மூலம் இந்த உலகத்தில் நாம் வெற்றியைப் பெற இயலும். நமது ஆற்றல் வெளிப்படும்.
இந்த புவனத்திற்கு அதிபதி புவனேஸ்வரி. அவளது மந்திரத்தை நாம் ஜெபித்தால் பேர், புகழ், அந்தஸ்து கிட்டும். அவளது நாமத்தைச் சொல்லி வழிபடுவதன் மூலம் நமக்குள் நல்ல மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிட்டும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
புவனம் என்றால் உலகம். நாம் இந்த புவனத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த புவனத்தை ஆளும் அன்னையே புவனேஸ்வரி. அததகைய சக்தி கொண்ட அன்னையை நாம் வணங்குவதன் மூலம் நமக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
ஜெகன்மாதா புவனேஸ்வரியின் பரிபூரண அருள் கிட்ட வேண்டும் எனில் மூன்று குணங்களிலும் இருக்கும். மூன்று உலகத்திலும் ஆட்சி செய்யும் அன்னையை பய பக்தியுடன் வணங்கினாலே போதும். இந்த அன்னைக்கு திரிபுர சுந்தரி என்ற பெயரும் உண்டு.
எங்கும் வியாபித்து இருக்கும் அன்னை நமக்குள்ளேயே வாசம் செய்கிறாள். ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் அவளை நாம் அறிந்து கொள்ளலாம். அவளை உணர்வதன் மூலம் நமது வாழ்வில் நேர்மறை ஆற்றல் பெருகும். அதன் மூலம் நாம் செல்வச் செழிப்புடன் செழுமையாக வாழலாம்.
அம்பாளின் திருப்பெயரே பீஜ மந்திரமாக சக்தி பெறுகிறது. ஸ்ரீம் ஸ்ரீம் என்று அவளை சிரத்தையுடன் போற்றிப் பாடுவதன் மூலம் பிரதி தினம் அவளை நினைப்பதன் மூலம் நல்ல பலன்களை அடைவோம்.
செல்வம் சேர அம்பிகை வழிபாடு
தினமும் இந்த அன்னைக்கு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.இந்த வழிபாட்டிற்கு இரண்டு சிறிய அளவிலான பித்தளை கிண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் தேனும், மற்றொன்றில் வெற்றிலையும் வைக்க வேண்டும். இந்த வெற்றிலையின் முனையானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அந்த வெற்றிலையின் மேல் இரண்டு பச்சை கற்பூரத்தை வைத்து பூஜை அறையில் அப்படியே வைத்து விடுங்கள். தேனை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நெய்வேத்தியமாக கொடுத்து விடுங்கள். பச்சை கற்பூரத்தை எடுத்து கால் படாத இடம் அல்லது ஓடையில் போட்டு விடலாம். பச்சை கற்பூரத்தை தூக்கி போடும் முன்பு உங்களை திருஷ்டி சுற்றுவது போல் சுற்றிக் போடும் போது அனைத்து கெட்ட சக்திகளும் உங்களை விட்டு நீங்கி விடும். வெற்றிலையை செடிகளுக்கு போட்டு விடுங்கள். இப்படி தினமும் இந்த அம்பிகையை வழிபட்டு வர உங்களுக்கு செல்வம் பேர் புகழ் அந்தஸ்து ஞானம் என அனைத்து கிடைத்து நல்ல நிலையில் வாழும் அருளை பெறலாம்.
அன்னையை இவ்வாறு வணங்குவதன் மூலம் ராஜ போகம் கிட்டும். அவரவர் சக்திக்கேற்ப பதவி அந்தஸ்து கிட்டும். ஒரு சிலர் தங்கள் மனதை ஆளலாம், ஒரு சிலர் பதவியில் இருந்து ஆளலாம். பூமா தேவியின் அம்சமான புவனேஸ்வர் அருளால் உலகத்தில் உயர்த்த இடத்தில் இருக்கலாம்.
