பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. அப்படி சிறப்பு வாய்ந்த புதன்கிழமை அன்று புதன் பகவானை வணங்குவதன் மூலம் உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க புதனுக்கு செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் உலகம்.. என்றாலும் தமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கும். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் பள்ளி தொடங்கிய நாள் முதலில் இருந்தே அவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். அவர்கள் நன்றாக படிக்கும் அளவிற்கு வீட்டுச் சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உணவு முறையில் அக்கறை காட்ட வேண்டும். அவர்களது ஆர்வம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களது நண்பர்கள் யார் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் முழு கவனமும் குழந்தைகள் மீது இருக்க வேண்டும். அவர்களிடம் அன்பு கலந்த கண்டிப்புடன் பழக வேண்டும். அதை விடுத்து சும்மா படி படி என்று கூறினால் மட்டும் போதாது.
ஒரு சில குழந்தைகள் இயற்கையிலேயே சிறப்பாக படிப்பார்கள். அவர்களுக்கு என்று தனிப்பட்ட அக்கறை எதுவும் காட்ட வேண்டிய தேவை இருக்காது. ஒரு சில குழந்தைகள் நன்றாக படிக்கும்.ஆனால் அவர்களிடம் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இதனால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். எனவே அவர்கள் மீது சிறிது அக்கறை காட்ட வேண்டியிருக்கும். ஒரு சில குழந்தைகள் படிப்பில் மந்தமாக சோம்பலாக இருக்கும். அவர்களை படிக்க வைப்பதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும்.
ஜாதக ரீதியாக ஒரு குழந்தையின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் தான் அந்தக் குழந்தையின் கல்வி சிறப்பாக அமையும். கேதுவும் புதனும் தொடர்பு கொண்டால் அவர்களின் படிப்பில் தடைகள் இருக்கும். பரம்பரை ரீதியாக கண்டால் முன்னோர்கள் படிப்பாளியாக இருந்தால் அவர்களைப் போல இவர்களும் படிப்பில் சிறந்து விளங்கலாம். அல்லது ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தால் இவர்களும் அவர்களைப் போல ஆர்வம் இல்லமால் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் பெற்றோர்கள் என்ன பரிகாரம் இதற்கு செய்யலாம் என்று யோசிப்பார்கள்.
கல்விக்கு அதிபதி சரஸ்வதி . அந்த சரஸ்வதிக்கு குருவாக விளங்குபவர் ஹயக்ரீவர். இந்த இருவரையும் வணங்குவது சாலச் சிறந்தது.
குழந்தைகளை கீழ்கண்ட இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்கச் சொல்லவும்.
சரஸ்வதி மந்திரம் :
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா
ஹயக்ரீவர் மந்திரம்
“ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”
தாய்மார்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை காலை பச்சைப்பயறு சுண்டல் செய்து புதனுக்கு நைவேத்தியமாக வைத்து 21 முறை புதனை சுற்றி வரவும்.
அதே போல பச்சைப்பயறு சுண்டல் செய்து வீட்டில் நிவேதனம் படைத்து உங்கள் குழந்தைகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் சாப்பிடக் கொடுக்கவும்.
இவ்வாறு நீங்கள் செய்து வர புதனின் சாதகமான பலனாக உங்கள் குழந்தையின் புத்தி கூர்மை அதிகரிக்கும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். அனைத்து பாடங்களிலும் சிறப்புற திகழ முடியும்.

Leave a Reply