Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | Pallikattu Sabarimalaikku lyrics

May 18, 2023 | Total Views : 634
Zoom In Zoom Out Print

சபரிமலை ஐயப்பன் கோவில் கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ளது. மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது எனவும் மரகதக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துகள் உள்ளன.

இந்தக் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து பய பக்தியுடன் செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் முதலில் குரு சாமி கையால் ருத்ராட்ச மாலையை அணிவார்கள். இந்த மாலை 54, 108 என்ற கணக்கில் அமைந்திருக்கும். 41 நாட்கள் கடுமையான விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்கு செல்வார்கள். காலணிகளை அணிய மாட்டார்கள். ஒரு பொழுது இருப்பார்கள். காவி, கருப்பு மற்றும் நீல நிற உடைகளை மட்டுமே அணிவார்கள்.

Pallikattu Sabarimalaikku lyrics

சபரிமலை யாத்திரையில் முக்கியமானது இருமுடி கட்டுவது. ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு செலுத்துவதற்காக எடுத்துச் செல்லும் பச்சரிசி, நெய் தேங்காய் போன்றவற்றை ஒரு முடியாகவும், வழியில் தங்களுக்கான உணவை மற்றொரு முடியாகவும் கட்டி எடுத்துச் செல்வார்கள். சிவனின் அம்சமான தேங்காயில், மகாவிஷ்ணுவின் அம்சமான நெய்யை நிரப்பி ஒரு முடியில் வைத்து செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது சரண கோஷமிட்டுக் கொண்டே செல்வார்கள். தங்கள் மனதை ஒருமுகப்படுத்த ஐயப்பனை நினத்து பாடல்களை பாடிக் கொண்டே செல்வார்கள். அந்தப் பாடல்களுள் ஒன்றை இங்கே காண்போம்.

பாடல்: பள்ளிக்கட்டு சபரிமலைக்கு

பாடியவர்: K.வீரமணி பாடல்

ஆசிரியர்: சிவமணி

இருமுடி தாங்கி ஒரு மனதாகி

குருவெனவே வந்தோம்

இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே ஐயப்போ

ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!

நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே

கற்பூர தீபம் ஸ்வாமிக்கே

ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு

ஐயனை நாடி சென்றிடுவார்

சபரி மலைக்கு சென்றிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து

நேர்த்தியாகவே விரதம் இருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே

உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே

உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து

இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி

அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!

அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்

வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்

கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!

கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி

சங்கரன் மகனை கும்பிடுவார்

சஞ்சலமின்றி ஏறிடுவார்

நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்

காலமெல்லாம் நமக்கே அருட்

காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா என்றால் அவரும்

தேகத்தை தந்திடுவார்

பாத பலம் தா என்றால் அவரும்

பாதத்தை தந்திடுவார்

நல்ல பாதையைக் காட்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!

சபரி பீடமே வந்திடுவார் சபரி

அன்னையை பணிந்திடுவார்

சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்

சபரி மலைதனில் நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்

கதியென்று அவனை சரணடைவார்

மதி முகம் கண்டே மயங்கிடுவார்

ஐயனைத் துதிக்கையிலே

தன்னையே மறந்திடுவார்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!

banner

Leave a Reply

Submit Comment