குபேர முத்திரை பலன் | Kubera Mudra benefits in Tamil

முத்ரா என்ற சொல்லுக்கு இறை வழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருளாகும். இந்த முத்திரைகளை செய்வாதற்கு கை விரல்கள் பிரதானம் ஆகும். இந்த முத்திரைகள் பற்றி தன்வந்திரி 1000 என்ற நூலில் தேவ மருத்துவரான தன்வந்திரி குறிப்பிட்டுள்ளார்.
நமது கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஐம்பூதங்களைக் குறிக்கின்றன.
கட்டை விரல் அல்லது பெரு விரல் – நெருப்பு
சுட்டுவிரல் – காற்று
நடுவிரல் ஆகாயம்
மோதிரவிரல் – நிலம்
சுண்டு விரல் – நீர்
குபேர முத்திரை எவ்வாறு செய்ய வேண்டும்:
யோக முத்திரைகள் செய்வதற்கு தூய்மையும், அமைதியும் நிறைந்த இடத்தில் உடலை தளர்த்தி இரண்டு கைகளையும் முழங்கால் மீது தளர்வாக வைத்து யோக முத்திரைகளை பிடிக்க வேண்டுமென தன்வந்திரி குறிப்பிடுகிறார்.
மேலும் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை வேளையில் இந்த முத்திரை செய்வது நல்லது. இந்த முத்திரை செய்வதற்கு முன் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி பூஜை அறையில் அல்லது ஒரு தூய்மையான இடத்தில் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் கண்களை மென்மையாக மூடவேண்டும்.தரையில் அமர இயலாதவர்கள் ஓரு நாற்காலியில் அமர்ந்து கூட இந்த முத்திரையை செய்யலாம்.
இந்த முத்திரையில் கட்டை விரல் ஆள்காட்டி விரல் நடு விரல் நுனிகளை சேர்த்து வைத்து மோதிர விரல் மற்றும் சிறு விரல் மடக்கி உள்ளங்கையில் வைக்க வேண்டும்.
இந்த முத்திரையை 5 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். இதனை செய்யும் போது குபேர மந்திரம் ஜெபித்தல் நல்லது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் செய்து வர சிறந்த பலன்களைக் காண இயலும்.
குபேர முத்திரையின் பலன்கள்:
இந்த முத்திரை மூலம் உடலில் நீர் சக்தி மற்றும் மண் சக்தி குறைக்கப்பட்டு ஆகாய சக்தி அக்னி சக்தி மற்றும் காற்று சக்தி அதிகரிக்கப்படுகிறது. இம்முத்திரையில் நீர் சக்தி குறைக்கப்படுவதால் சைனஸ் போன்ற பிரச்சினைகள் அகலும். மூக்கில் அடைப்பு சளி நீங்கும். தன்னம்பிக்கையை வளர்க்கும்.கண் பிரச்சினைகள் நீங்கும். நாளமில்லா சுரப்பிகளை தூண்டும். ஆழ்மனதில் இருக்கும் நல்ல எண்ணங்களை வளர்க்கும். மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். குறிக்கோளை அடைய வழி வகை செய்கிறது. பஞ்ச பூதங்களின் அருளை பெற்றுத் தருகிறது. குபேரன் நவ நிதிகளுக்கு அதிபதி என்பதால் இந்த முத்திரை செல்வத்தை ஈர்க்கும். உடல் பிரச்சினைகள் தீரும் போது மனம் அமைதியுடன் செயல்பட ஆரம்பிக்கும். நமது எண்ணங்கள் சீராகும் போது தியான நிலையில் நமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும். தொடர்ந்து குபேர முத்திரையில் தியானம் இருக்கும் போது உடல் மற்றும் மனதில் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். வாழ்வில் வளம் பெருகும். கோடீஸ்வர யோகம் உண்டாகும். பணக்காரராக ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்கள் ஆழ் மனதில் தூய்மையாக பதிவாகும். இந்த பதிவு தொடர்ந்து செயல்படும் போது அது உண்மையில் நிகழும் சாத்தியம் உள்ளது. எண்ணம் சொல் செயல் அனைத்தும் ஒன்றை நோக்கியே பயணிக்கும் போது அதன் மூலம் கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும். இந்த முத்திரை நவநிதிகளை அளிக்கும் குபேர முத்திரை என்பதால் உங்கள் தியானத்திற்கான பலனாக செல்வம் பெருகும். நீங்களும் பணக்கரார் ஆகலாம்.
