பல பேரின் சந்தேகம் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பதா? அலங்காரக் கோலத்தில் தரிசிப்பதா? என்று. ஆண்டிக் கோலத்தில் தரிசித்தால் நாமும் அவரைப் போல ஆகி விடுவோம் என்று ஒரு சிலருக்கு அச்சம் கூட உண்டு எனலாம். ஆனால் உலக வாழ்க்கையின் பாடத்தை நமக்கு போதிக்க வந்த ஞான பண்டிதன் முருகன் எந்தக் கோலத்திலும் நமக்கு நல்லதையே செய்வான் என்று நம்புங்கள்.
முற்றும் துறந்த தவ நிலையில், ஞானப் பிழம்பாக முருகன் பழனியில் குடிகொண்டான். ஞானப்பழம் வேண்டி கோபித்துக் கொண்டு ஆண்டி வேடம் பூண்டாலும் இது நமக்கு படிப்பினையை போதிக்கும் கோலம் ஆகும். அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் முருகனைக் காணும் போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். அதற்காக நாம் முற்றும் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. காமம் குரோதம், மோகம், பேராசை போன்ற தேவையற்ற குணங்களைத் துறக்க வேண்டும்.
நமது வினைகளை தீர்க்கும் முருகனை நாம் ஆண்டிக் கோலத்தில் தரிசிக்கலாம். நமது கர்ம வினைகளால் தானே நாம் கஷ்டத்தினை அனுபவிக்கிறோம். அந்த கஷ்டங்களும் சங்கடங்களும் தீர அவனையே நாடுவது சிறப்பு.
அனைவரும் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிக்கலாம் என்றாலும் குறிப்பாக கடன் பிரச்சினைகளை சந்திப்பவர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு எதிர்கொள்பவர்கள், வருமானம் இல்லாதாவர்கள், எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திப்பவர்கள் போட்டி பொறமை கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்
அதுமட்டுமில்லாமல்தீராத நோய் உள்ளவர்கள், மனக்குழப்பத்தில் இருப்பவர்கள், பேச இயலாதவர்கள், மன சஞ்சலம் உள்ளவர்கள், கோபத்தின் உச்சியிலேயே இருப்பவர்கள் உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்கள் சாத்வீக குணத்தை தரக்கூடிய, மனதிற்கு நிம்மதி அளிக்கும் ஆண்டி கோலத்தை தரிசனம் செய்வது அவசியம். வழக்குகளில் வெற்றி விரும்புவோர் ஆண்டி முருகனை தரிசிப்பது நல்லது.
திங்கள் கிழமையில் காலை நேரத்தில் மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி படிப்படியான முன்னேற்றம் மாற்றம் ஏற்படும்.

Leave a Reply