AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Viruchigam Rasi Palan

dateSeptember 11, 2020

விருச்சிக ராசி பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில், ஆட்சி வக்கிரம் பெற்றிருப்பது நல்லவை மற்றும் அல்லாதவை என இருவகைப் பலன்களையும் கலந்தே தரும் எனலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. எந்த விஷயத்திலும், எதிர்த்துப் போராடியே வெற்றி பெரும் சூழ்நிலை ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்களிடம் பொறுமையும், நிதானமும் அவசியம். பேச்சிலும் கவனம் தேவை. எனினும், மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். முயற்சி திருவினையாக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. வேலையில், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் உணர்வுகள் சுகம் தரும். காதலர்களுக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். புதிய காதல் முயற்சிகளும் சாதகமாகும் வாய்ப்புள்ளது. எனினும், கணவன், மனைவிக்குள் சிறு பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். எனவே, தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

நிதி:

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்கு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம், கைக்கு வந்து சேரலாம். உங்கள் பொருளாதாரத் தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னரும், சேமிப்பதற்கான பணம், உங்களிடம் இருக்கும். இதன் மூலம், வருங்காலத்திற்கான சேமிப்பை, நீங்கள் அதிகப் படுத்திக்கொள்ள முடியும்.  

வேலை:

பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் சிறு பிரச்சனைகளையும், தடைகளையும் சந்திக்க நேரலாம். சக ஊழியர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். இருப்பினும், இவை அனைத்தையும் நீங்கள் திறமையாகக் கையாண்டு, இறுதி வரை போராடி, வெற்றி பெறுவீர்கள் எனலாம்.

தொழில்:

பொதுவாக, வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படக்கூடும். இருப்பினும், அதில் நீங்கள் சிறு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். கூட்டாளிகளால் தடைகளும், விரயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களைக் கூர்ந்து கண்காணித்து வழி நடத்திச் செல்வது நல்லது. புதிய முதலீடுகளைத் தவிர்ப்பதும் நல்லது.

தொழில் வல்லுநர்கள்:

இந்த மாதம், விருச்சிக ராசி தொழில் வல்லுநர்களின் செயல்திறன் அதிகரிக்கும். தொழிலில் வருமானம் பெருகும். உங்கள் துறையில் நீங்கள் பிரபலமடைவீர்கள். புதிய அறிமுகங்களும், வாடிக்கையாளர்களும் கிடைக்கக் கூடும். இப்பொழுது, உங்கள் புகழ் பரவவும், அந்தஸ்து, செல்வாக்கு அதிகரிக்கவும் கூட வாய்ப்புள்ளது. 

ஆரோக்கியம்:

உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கக் கூடும். இந்தக் காலகட்டத்தில், உங்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். வீண் கோபம், வெறுப்பு, மன உளைச்சல் போன்றவற்றைத் தவிர்ப்பதும் நல்லது. தினமும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வது, எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

மாணவர்கள்:

இந்த மாதம் மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் நினைவாற்றலும் கூடும். எனவே, நீங்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு, தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். எனினும், நண்பர்களிடம் பகைமை உணர்வு கொள்ள வேண்டாம். சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். 

சுப தினங்கள் : 1,3,4,5,7,8,12,13,14,15,17,18,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் :  2,6,9,10,11,16,20,24,25,30

பரிகாரம்:

ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் அன்னை துர்க்கை வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல். 
செவ்வாய், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
ஏழை, எளியோருக்கு உதவுதல், பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்
 


banner

Leave a Reply