தனுசு அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Dhanusu Rasi Palan

தனுசு ராசி பொதுப்பலன்கள்:
தனுசு ராசி அன்பர்களின் ராசி நாதனான குரு பகவான், இந்த மாதம் அவர்கள் ராசியில் சஞ்சரிப்பது நன்மை தரும். இவர் ஜென்ம குருவாக இருந்தாலும் கூட, உங்கள் ராசியில் இருப்பது, உங்களுக்குச் சாதகமாகவே அமையும் எனலாம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றல், உங்களிடம் தோன்றும். எந்த நிலையிலும், நன்கு சிந்தித்து, பொறுமையுடனும், நிதானத்துடனுன் செயல்படுவது, நன்மை விளைவிக்கும். எனினும், பேச்சில் கவனம் தேவை. இல்லறம் இனிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் பொருளாதார நிலையும், குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு அதிகரிக்கும். எனினும், தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. குழந்தைகளின் உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படலாம். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். உங்களில் சிலருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் விவகாரங்களில், கவனம் தேவை. காதலர்களுக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். இந்த நேரத்தில், புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், கணவன், மனைவிக்குள் அன்பும், ஆதரவும் பெருகும். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வாழ்க்கைத் துணை, உங்களது ஆசைகள் நிறைவேற உறுதுணையாக இருப்பார்.
நிதி:
பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், உங்கள் வருமானம், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கும் போதுமானதாக இருக்கும். மற்றவர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் எச்சரிக்கை தேவை. இப்பொழுது, சேமிப்புகளில் நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது.
வேலை:
வேலையில் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை கண்ணும் கருத்துமாக, சிறப்பாகச் செய்து, நற்பெயர் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் மதிக்கப்படும். மறைமுக எதிரிகளும் உங்கள் பாதையை விட்டு விலகுவார்கள்.
தொழில்:
இந்த மாதம் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும். உங்கள் கூட்டாளிகளும், பணியாளர்களும் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். உங்கள் நிறுவனம் மக்களிடையே பிரபலம் ஆகும். தொழில் மேம்பட்டு, நீங்கள் பல மடங்கு லாபம் ஈட்டும் வாய்ப்பும் உள்ளது.
தொழில் வல்லுநர்கள்:
தனுசு ராசி தொழில் வல்லுநர்களுக்கு, அவர்கள் தொழிலில், சாதகமான அமைப்புகள் உருவாகக்கூடும். தொழிலை விரிவு படுத்துவதற்கான உங்கள் முயற்சிகளும் நிறைவேறக் கூடும். தொழில் தொடர்பான புதிய நுணுக்கங்களை அறிந்து, செயல்படுத்தி அதில் வெற்றியும் பெறுவீர்கள். இதனால், தனவரவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்:
இதுவரை இருந்து வந்த உடல் கோளாறுகள் நீங்கக்கூடும். நீண்ட காலமாக ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தகுந்த மருத்துவர் மூலம் அது சரியாகக் கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை வழியாக நீங்கள் நலம் பெறும் வாய்ப்பும் உள்ளது. எப்பொழுதும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது மன அமைதி பெற்று, மகிழ்ச்சி அடையக்கூடும்.
மாணவர்கள்:
இந்த மாதம் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பிலிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் விலகி இருப்பதும் அவசியம். வீண் கோபம், மன அழுத்தம் போன்றவற்றைத் தவிர்த்து, நல்ல நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதற்கு, யோகா, தியானம் போன்ற பயிர்ச்சிகள் பயனுள்ளதாக அமையும்.
சுப தினங்கள் : 1,3,4,5,7,8,9,13,14,15,17,18,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 2,6,10,11,12, 16,20,24,25,30
பரிகாரம்:
ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ குருபகவான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல். நாய், பசு போன்றவற்றுக்கு உணவு அளித்தல்.
