துலாம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Thulam Rasi Palan

துலாம் ராசி பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசி நாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருப்பதும், ராசிக்கு யோகாதிபதியான புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதும், யோகமான அமைப்பு ஆகும். இதனால் அதிர்ஷ்ட தேவதையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் எனலாம். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சரியான வழி காட்டுதல் கிடைக்கும். முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், அவற்றை நீங்கள் நன்கு சமாளித்து விடுவீர்கள். தாயுடன் சிறிய பிரச்சினைகள் எழக்கூடும் என்றாலும், பொதுவாக அவரது செயல்பாடுகள், உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலரது நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இருப்பினும் வீண் விரயங்களைத் தவிர்ப்பது நல்லது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்ந்து, எதிலும் மிதமாகச் செயல்படுவதும் நல்லது. குறிப்பாக, பேச்சில் கவனம் தேவை. இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் உறவுகள் சாதாரணமாகவே இருக்கும். காதலர்களுக்குள் அமைதி நிலவும். எனினும், புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் சிறு பிரச்சனைகள் எழுந்தாலும், அவர்களிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் காரணமாக, இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
நிதி:
பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடும். இருப்பினும், உங்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான நிதி, உங்களுக்கு தாராளமாகக் கிடைக்கும். வாழ்க்கை துணையின் வழியாகவும் வருமானம் வந்து சேரும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது, எதிர்காலத்திற்கு நல்லது.
வேலை:
இந்த நேரத்தில், பணிச்சுமை அதிகரித்தாலும், வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கக்கூடும். இருப்பினும். உங்கள் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும். உயரதிகாரிகளின் பாராட்டுகளும் உங்களைத் தேடி வரக்கூடும்.
தொழில்:
இந்த மாதம் வியாபாரத்தில் நிலையற்ற தன்மை நிலவக்கூடும். அதே நேரம், எதிர்பாராத முன்னேற்றங்களும் ஏற்படக்கூடும். குறிப்பாக, கூட்டாளிகளிடம் கவனம் தேவை. அவர்களை நன்கு கண்காணித்து, வழிநடத்திச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவதும் நல்லது. இந்த நேரத்தில் உங்களுக்குப் பொறுமை அவசியம்.
தொழில் வல்லுநர்கள்:
துலாம் ராசி தொழில் வல்லுநர்கள், அவர்கள் துறையில், சீரான முன்னேற்றம் காணலாம். உங்கள் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். அதே நேரம், நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். அந்த உழைப்புக்கு ஏற்ற வருமானமும் பெறுவீர்கள். இந்த நேரத்தில் தொழில் போட்டிகளும் அதிகரிக்கலாம். எனினும், உங்களை நிலை நிறுத்திக் கொள்ள, உற்சாகத்துடன் போராடி வெற்றி பெறுவீர்கள்.
ஆரோக்கியம்:
பொதுவாக, உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும், சிலருக்கு தோள் பட்டை, கழுத்து, கை தொடர்பான பிரச்சனைகள் வரலாம். தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்ப்பது நல்லது. இதனால் மன அழுத்தம், வீண் கவலை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, உங்கள் உடல் நிலை பாதிக்கப்படலாம். தவறாமல், யோகா, தியானம் போன்றவை செய்வது, உங்களுக்கு மன அமைதியை தரும்.
மாணவர்கள்:
இந்த மாதம், காதல் போன்ற தேவையற்ற விஷயங்களில் உங்கள் கவனம் திசை திரும்பாமல் பார்த்துக் கொள்ளவும். படிப்பதைத் தள்ளிப் போடாமல், அன்றைய பாடங்களை அன்றைக்கே படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவும். கடின உழைப்பு மட்டுமே உங்களை உயர்த்தும் என்பதை, மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டு படித்தால், கல்வியில் நீங்கள் சாதனை படைப்பதும் சாத்தியம் தான்!
சுப தினங்கள் : 1,3,4,5,9,12,13,14,15,17,18,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 2,6,7,8,10,11,16,20,24,25,30
பரிகாரம்:
பகவான் ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சுக்கிரன், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
ஏழைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் இதர தேவையான உதவிகள் புரிதல். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல். காக்கைக்கு உணவு அளித்தல்.
