துலாம அக்டோபர் மாத ராசி பலன் 2022 | October Matha thulam Rasi Palan 2022

துலாம அக்டோபர் மாத பொதுப்பலன்கள் 2022
துலாம் ராசி அன்பர்களே! குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தங்கள் வேலையில் ஆழ்ந்து மூழ்கி இருக்கும் காரணத்தால் ஒருவருக்கொருவர் கலந்து உறவாட நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும். இது குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற அதிருப்திகரமான சூழ்நிலையை உருவாக்கும். இந்த மாதம் உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சீராக இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும்.
காதல் / குடும்பம்:
காலம் கனிய வேண்டும் என்று திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் தாமதமாகி திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் மனதிற்கு பிடித்த வரன் அமையும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தம்பதிகள் இருவரும் கருத்தொருமித்து வாழ்வீர்கள். குடும்ப உறவுகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினார் போல நீங்கள் வாங்கிய கடனுக்கு கலங்கிய காலம் இந்த மாதம் தொடராது. நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இது ஏற்ற நேரமாக இருக்கும். பணம் குறித்த முக்கிய விஷயங்கள் அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட விஷயங்களில் யோசிக்காமல் எந்தவொரு அவசர முடிவையும் இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிட்டும். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். நீங்கள் தனியார் துறையில் பணியில் இருப்பவர் எனில் சிறப்பாகப் பணியாற்றி குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் அரசுத் துறையில் பணியில் இருப்பவர் எனில் உங்களின் உத்தியோகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும்.
தொழில்:
தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் மூலம் நல்ல லாபம் கிட்டும். முன்னேற்றமும் வளர்ச்சியும் காண்பீர்கள். கல்வித்துறை, மற்றும் பொழுதுபோக்குத் துறை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். பலசரக்கு மற்றும் காய்கறி வியாபாரம் செய்பவர்கள் தங்கள் விற்பனை அதிகரிக்கக் காண்பார்கள். தரகு தொழில் செய்பவர்களிக்கு தங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும்.
தொழில் வல்லுனர்கள்:
நீங்கள் தனியார் துறையில் உத்தியோகத்தில் இருப்பவர் எனில் சக பணியாளர்களிடம் கவனமாகப் பழக வேண்டும். தொழில் செய்யுமிடத்தில் வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாக்கு வாத்தை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது நன்மை பயக்கும். சுயமாக தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் கனிசமான அளவு தன வருவாயை காண்பார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக பணிகள் காரணமாக நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். உடலுக்கு தேவையான சக்திகளில் பற்றாகுறை காணப்படலாம். நடைபயிற்சி செய்தல் மற்றும் தியானம் மூலம் உடல் நலம் மற்றும் மனநலம் புத்துணர்ச்சி அடையும். ஆரோக்கியமான உடல் நலனுக்கு ஆரோக்கியமான சாத்வீக உணவுகளை எடுத்துக்கொள்வது நலம் பயக்கும்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனை கிட்டும். அதனை பின்பற்றுவதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற்று சிறந்த முறையில் தேர்ச்சி அடைய இயலும். பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை
சுப நாட்கள்:
1, 2, 5, 20, 21, 22, 23, 26, 27, 28, 30, 31.
அசுப நாட்கள்:
3, 4, 13, 14, 15, 18, 19, 24, 25, 26, 29.
