மகரம அக்டோபர் மாத ராசி பலன் 2022 | October Matha Magaram Rasi Palan 2022

மகரம அக்டோபர் மாத பொதுப்பலன்கள் 2022
இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தம்பதிகள் கருத்து வேற்றுமை நீங்கி ஒன்றுபட்டு வாழ்வார்கள். புதிய நண்பர்களின் தொடர்புகள் கிட்டும். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் மூலம் ஆதாயங்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும். உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
காதல் / குடும்பம்:
இந்த மாதம் காதலர்களுக்கு அனுகூலமான மாதமாக இருக்கும். காதல் துணை இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும். திருமணமான தம்பதிகள் இருவரும் கருத்தொருமித்து வாழ்வார்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள வயதில் மூத்த உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை ஓரளவு சீராக இருக்கும். நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். தொழில் மூலம் பண வரவு அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மூலம் உங்களுக்கு பண உதவி கிட்டும், வீடு கட்டுதல் மற்றும் வீடு புனரமைத்தல் மூலம் செலவுகளை நீங்கள் மேற்கொள்வீர்கள்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை மிதமான பலன்கள் கிட்டும். பணியிடத்தில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலை மாற்றம் அல்லது புதிய வேலை தேடுபவர்களுக்கு இது சாதகமான மாதமாக இருக்கும். அரசுத் துறையில் இருப்பவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் அதற்குரிய பலனைப் பெற நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
தொழில்:
சுய தொழில் செய்யும் மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் லாபம் எதிர்பார்க்கலாம். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களும் தொழில் மூலம் ஆதாயம் காண இயலும். இணையம் சம்மந்தப்பட்ட வணிகம் செய்பவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். தரகு சம்மந்தப்பட்ட வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிட்டும். நீங்கள் அரசுத் துறைசார்ந்த தொழில் செய்பவர் என்றால் தொழில் செய்யும் இடத்தில் சாதனைகள் புரிந்து பாராட்டுக்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் தனியார் துறையில் இருப்பவர் என்றால் உங்களுக்கு உயர் பதவி நாடி வரும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதிக பணிச்சுமை காரணமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக உணரலாம். சிலர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இருப்பினும், தியானம் மற்றும் உடற்பயிற்சி உங்கள் உடலையும் மனதையும் புதுப்பிக்க உதவும்.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
பள்ளி மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரித்து, அவர்கள் நன்றாகப் படிக்கவும், வகுப்பில் உயர் பதவிகளைப் பெறவும் உதவும். அதேபோல், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் உயர்கல்வி பயில்பவர்கள் தங்கள் படிப்புகளில் சிறந்து விளங்கலாம். அதேபோல், ஆராய்ச்சி மாணவர்களும், அவர்களின் விடாமுயற்சியால் வெற்றி பெறலாம்.
கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
7, 9, 10, 14, 15, 16, 17, 20.
அசுப நாட்கள்:
8, 18, 19, 21, 22, 23, 29.
