தனுச அக்டோபர் மாத ராசி பலன் 2022 | October Matha dhanusu Rasi Palan 2022

தனுச அக்டோபர் மாத பொதுப்பலன்கள் 2022
தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் அன்றாடத் தேவைகளை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். வருமானம் பெருகும். உபரி பணத்தை எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். இந்த மாதம் பணியிடத்தில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்கள் திறமைகளை பயன்படுத்தி வேலை செய்யும் இடத்தில் உங்கள் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். இந்த மாதம் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரித்து காணப்படும் அதன் மூலம் கல்வியில் பிரகாசிப்பார்கள். தாய் மற்றும் தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.
காதல் / குடும்பம்:
இந்த மாதம் காதலர்களிடையே உள்ள உறவு இனிமையாகவும் இணக்கமாகவும் காணப்படும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும். இந்த மாதம் திருமணமான தம்பதியர் மனமொத்து வாழ்வார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் ஹாஸ்யம் நிறைந்த மனப் போக்கை விரும்புவார்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்களுடைய நிதிநிலை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். யூக வணிகமான போரெக்ஸ் டிரேடிங் போன்ற முதலீடுகள் மூலம் நீங்கள் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். கடந்த கால முதலீடுகள் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை
வேலை:
இந்த மாதம் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கேற்ற அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்பை நாடும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் புதிய வேலை கிடைக்கப் பெறுவார்கள். நீங்கள் அரசு உத்தியோகத்தில் இருப்பவர் எனில் சிறப்பாக பணியாற்றி பணியிடத்தில் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
தொழில்:
உங்கள் தொழிலில் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண நீங்கள் சில புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். ஒரு சிலர் கூட்டுத் தொழிலில் விருப்பம் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. தொழில் சம்பந்தமான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெற இயலும்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாக செயலாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். தொழில் நடத்தும் சூழல் உங்களுக்கு அனுகூலமாகவும் சாதகமான பலன்களை பெற்றுத் தரும் வகையிலும் இருக்கும். புதிய வாடிக்கையாளர்களை சந்திப்பீர்கள். அவர்கள் மூலம் நீங்கள் ஆதாயமும் பெறுவீர்கள். அரசு உத்தியோகத்தில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்விற்கு லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். என்றாலும் சிறுசிறு உபாதைகள் வந்து போகும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. தியானம் மற்றும் நடைபயிற்சி மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். வீட்டில் உள்ள வயதானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் மாணவர்கள் ஆர்வமுடனும் ஊக்கத்துடனும் கல்வி பயில்வார்கள். ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு படிப்பில் வெற்றி காண்பார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதனை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கல்வியில் சிறந்து விளங்கி முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றி காண்பதுடன் வெளிநாட்டில் வேலையும் கிடைக்கப் பெறுவார்கள்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
9, 11, 14, 15, 12, 21, 22, 23, 27, 28, 30, 31.
அசுப நாட்கள்:
13, 17, 18, 19, 20, 24, 25, 26, 29.
