AstroVed Menu
AstroVed
search
search

கன்னி அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Kanni Rasi Palan

dateSeptember 11, 2020

கன்னி ராசி பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களின் ராசிநாதன் புதன், இந்த மாதம், அவர்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பது, யோகமான அமைப்பு எனக் கூறலாம். இந்தக் காலகட்டத்தில், பொதுவாக உங்கள் முயற்சிகள் அனைத்தும், பணம் ஈட்டுவதிலும், குடும்பத்தை வழி நடத்துவதிலும் இருக்கும் எனலாம். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தடைகளைச் சந்தித்தாலும், விடா முயற்சியால் வெற்றி பெறலாம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலரது குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்கக் கூடும். காதல் முயற்சிகள் வெற்றி அடையும். தந்தையால் அனுகூலம் உண்டு. வெளியூர், வெளிநாட்டுக் கல்வி அல்லது வேலை வாய்ப்பிற்காகச் செய்யும் முயற்சிகள் கை கூடும். ஆயினும், அளவுக்கு மீறிய சிந்தனை வீண் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். தவிர, வாகனப் பயணங்களில் கவனம் தேவை. குறிப்பாக, இரவு நேரப் பயணம், நீண்ட தூரப் பயணம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் சுகமான அனுபவமாக இருக்கக் கூடும். காதலர்களுக்கிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். புதிய காதல் முயற்சிகளும் கை கூடலாம். இல்லற வாழ்விலும் இன்பம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் பெருகும். இந்தக் காலம், தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள ஏற்றதாக அமையும். 

நிதி:

பொருளாதார நிலை ஏற்றம் தருவதாக இருந்தாலும், வரவுக்கேற்ப செலவினங்கள் இருக்கும் என்பதால், கவனம் தேவை. இப்பொழுது, சிறு மருத்துவ செலவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும் நீங்கள், வாழ்க்கை வசதிகளை அதிகரிக்க உரிய செலவுகளைச் செய்யக்கூடும். 

வேலை:

வேலை தொடர்பான விஷயங்களில் அமைதி நிலவும். பணிச்சுமை குறையும். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும். சில சிறு பிரச்சனைகள் தொடர்ந்தாலும், தெளிவாகச் செயல்பட்டு அவற்றை நீங்கள் நன்கு கையாள்வீர்கள். உயரதிகாரிகளும், உடன் பணிபுரிபவர்களும் கூட உங்களுக்குச் சாதகமாக மாறும் வாய்ப்புள்ளது. 

தொழில்:

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். கூட்டாளிகளால் லாபம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. உங்கள் தயாரிப்புகள் மக்களிடையே பிரபலமாவதன் காரணமாக, உங்கள் நிறுவனமும் பல வகையில் புகழ் பெறக் கூடும். போட்டியாளர்களையும் நீங்கள் வெல்வீர்கள்.

தொழில் வல்லுநர்கள்:

கன்னி ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம், நல்ல முன்னேற்றம் காணலாம். உங்கள் அறிவாலும், திறமையாலும், உங்கள் துறையில் நீங்கள் முன்னிலை வகிப்பீர்கள். தொழில் ரீதியான வருமானமும் அதிகரிக்கும். இருப்பினும், வருமானத்துக்கேற்ற செலவும் இருக்கும் என்பதால், சிக்கனம் தேவை. புதிய முதலீடுகளைத் தவிர்ப்பதும் நல்லது. 

ஆரோக்கியம்:

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும், நீண்ட நாட்களாக இருந்த வந்த ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கோளாறுகளுக்கும், உரிய மருத்துவமும், தீர்வும் கிடைக்கக் கூடும். எனினும், சில நேரங்களில் சிலருக்கு, எலும்பு, மூட்டு, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும் வாய்ப்புள்ளது. 

மாணவர்கள்:

இந்த மாதம் படிப்பில் அதிக கவனம் தேவை. கல்வியில் சிறு தடைகளையும், பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கலாம். பாடங்கள் படிப்பதை, எந்தக் காரணம் கொண்டும், தள்ளிப் போட வேண்டாம். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்டு நடப்பதும் நன்மை தரும். 

சுப தினங்கள் : 1,3,7,8,9,12,13,14,15,17,18,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 2,4,5,6,10,11,16,20,24,25,30,31

பரிகாரம்:

பகவான் ஸ்ரீமந் நாராயணன் மற்றும் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
புதன், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்தல், ஆலயங்களில் அன்னதானம் வழங்குதல். 
 


banner

Leave a Reply