AstroVed Menu
AstroVed
search
search

சிம்மம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Simma Rasi Palan

dateSeptember 10, 2020

சிம்ம ராசி பொதுப்பலன்கள்:

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பது, குறிப்பாக, பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் தரும் எனலாம். குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. சிலர் தங்களது பழைய வாகனங்களைப் பழுது பார்த்து சரி செய்வார்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டாகலாம். ஆயினும் தாய் உடல் நலத்தில் கவனம் தேவை. அவருடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும் வாய்ப்பும் உள்ளது. தந்தையுடன் வாக்கு வாதங்கள் வரவும் வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையாக இருக்கவும். எதிரிகளாலும் சிறு பிரச்சினைகள் வந்து நீங்கக்கூடும். இந்த நேரத்தில் முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக இப்பொழுது, உங்கள் அனைத்து செயல்களிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. வெளியூர் பயணங்களாலும் ஆதாயம் உண்டு. இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் சுவைக்கும். காதலர்களுக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புதிய காதல் முயற்சிகளும் நிறைவேறக்கூடும். எனினும், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து மறையலாம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம், குடும்பத்தில் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். 

நிதி:

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணலாம். இந்த நேரத்தில் நீங்கள், பல வகையிலும், பணம் ஈட்டுவதற்கான திட்டங்களைத் தீட்டி செயல் படுத்தக்கூடும். இதனால் பணபுழக்கம் அதிகரிக்கும். எதிர் காலத்திற்குத் தேவையான பணத்தையும் நீங்கள் சேமிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல்களும் லாபம் தரலாம். 

வேலை:

வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கால நேரம் கருதாது, உங்கள் பணியை நீங்கள் திறம்பட நிறைவேற்றுவீர்கள். எனினும், உங்கள் உழைப்புக்கான மரியாதையும், அங்கீகாரமும் சிறிது கால தாமதத்திற்குப் பின்னரே கிடைக்கக்கூடும். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது அவசியம். அலுவலக விஷயங்கள் குறித்து, வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும்.

தொழில்:

இந்த மாதம், செய்யும் தொழிலில் கவனம் தேவைப்படலாம். கூட்டாளிகளால் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் செயலாற்றவும். கூட்டாளிகளையும், பணியாளர்களையும் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. அறிமுகமில்லாதவர்களை முழுமையாக நம்பிவிட வேண்டாம். இந்த நேரத்தில், புதிய முதலீடுகளைத் தவிர்ப்பதும் நல்லது. 

தொழில் வல்லுநர்கள்:

சிம்ம ராசி தொழில் வல்லுநர்கள், முன்னேற்றம் காணும் காலமாக இது அமையும். உங்கள் அறிவுத்திறனும், செயலாற்றலும் இந்த நேரத்தில் முழுமையாக வெளிப்படக் கூடும். நீங்கள் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு சாதனை படைக்கும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் துறையிலும் நீங்கள் பிரபலமடையக் கூடும். 

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவை இப்பொழுது தீரக்கூடும். சிலருக்கு நீண்ட நாட்களாக இருக்கும் உடல் நலக் குறைபாடுகளுக்கும், இப்பொழுது தீர்வு கிடைக்கக்கூடும். எனினும், இந்த நேரத்தில், உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பது அவசியம். யோகா, தியானம் செய்வதன் மூலமும், உங்கள் உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க முடியும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் தேவை. கல்வியைத் தவிர, மற்ற விஷயங்களில் உங்கள் கவனம் திசை திரும்பாமல் பார்த்து கொள்வது அவசியம். ஆசிரியர் மற்றும் பெரியோர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது .நல்ல நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதும் நன்மை தரும்.  

சுப தினங்கள்  : 4,5,7,8,9,12,13,14,15,17,18,19,21,22,23,26,27,28  
அசுப தினங்கள் : 1,2,3,6,10,11,16,20,24,25,29,30

பரிகாரம்:

சிவபெருமான் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சூரியன், குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல். ஆலயங்களில் அன்னதானம் செய்தல்.


banner

Leave a Reply