AstroVed Menu
AstroVed
search
search

கடகம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Kadagam Rasi Palan

dateSeptember 10, 2020

கடக ராசி பொதுப்பலன்கள்:

கடக ராசி அன்பர்களின் ராசி நாதன் சந்திரன், இந்த மாதம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பது, உங்களுக்கு நன்மைகள் விளைவிக்கும் எனலாம். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொதுவாக உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். உங்களை வாட்டும் பிரச்சனைகள் தீரத், தேவையான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். சகோதர சகோதரிகளாலும் நன்மை உண்டு. பொதுவாக இந்த நேரத்தில், அதிர்ஷ்ட தேவதையின் ஆசி உங்களுக்கு உண்டு எனலாம். உங்கள் பேச்சுத் திறனால் அனைவரையும் கவர்ந்து இழுப்பீர்கள் என்றாலும், இப்பொழுது அதிக பேச்சைத் தவிர்ப்பது நல்லது. உடல் நிலையில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கக்கூடும். மேலும், குழந்தைகள் உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், அவர்கள் குறித்தும் கவனம் தேவை. மறைமுக எதிரிகளாலும் பிரச்சனை உருவாக வாய்ப்பு உள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்கவும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

இந்த நேரத்தில், காதல் இனிக்காமல் போகலாம். காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். ஆகவே, புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், இல்லறம் இனிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பும், ஆதரவும் பெருகும். இருப்பினும், மற்றவர் எவரும் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். 

நிதி:

நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட தேவைகளையும், குடும்பத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமான வருமானம், உங்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும். மேலும், எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தையும் இப்பொழுது நீங்கள் சேமிக்க முடியும். 

வேலை:

அலுவலகத்தில் சிறு பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கலாம். எனவே வேலையில் உள்ளவர்கள், தங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எனினும், நீண்ட நாட்களாக சரியான வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு, புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

தொழில்:

இந்தக் காலகட்டத்தில், தொழிலில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிய நுணுக்கங்களையும், அணுகு முறைகளையும் புகுத்தி, வியாபாரத்தை நீங்கள்  மேம்படுத்துவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். ஊழியர்களும் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். புதிய முதலீடுகளும் லாபம் தரக்கூடும். 

தொழில் வல்லுநர்கள்:

கடக ராசி தொழில் வல்லுநர்களின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும், அவர்களுக்கு இப்பொழுது நல்ல பலன்களைப் பெற்றுத் தரும். செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். தொழில் போட்டி அதிகரிக்கும் என்றாலும்,. உங்கள் அதீத ஆற்றலாலும், விடா முயற்சிகளாலும், உங்களுக்கே வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையும் பலரது பாராட்டைப் பெறும். 

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிறு பிரச்சனை என்றாலும், அதை ஒதுக்கி விடாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய ஆலோசனை பெறுவது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும் வாய்ப்புள்ளதால், கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்து விடுவது அவசியம். 

மாணவர்கள்:

இந்த மாதம், மாணவர்களின் கல்வி முயற்சிகள் சராசரியான பலன் தரும். பாடங்கள் படிப்பதைத் தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. நண்பர்களுடனான தேவையற்ற பேச்சுக்களையும், வெளியில் சுற்றுவதையும் விட்டு விட்டு, படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பதும் நலம் விளைவிக்கும். 

சுப தினங்கள் : 1,3,4,5,7,8,9,12,13,14,15,17,18,19,21,22,23,28,29
அசுப தினங்கள் : 2,6,10,11,16,20,24,25,26,27,30

பரிகாரம்:

திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி மற்றும் மகான் ஸ்ரீமத் ராமானுஜர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சந்திரன், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
வியாழக்கிழமைகளில் குருபகவான் ஆலயங்களில், லட்டு தானம் செய்தல்


banner

Leave a Reply