AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Mrishaba Rasi Palan

dateSeptember 10, 2020

ரிஷப ராசி பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசி நாதன் சுக்கிரன், உங்களது ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரிப்பது, உங்களுக்கு நன்மையே விளைவிக்கும் எனலாம். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். முயற்சி திருவினையாக்கும். சிலரது நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தாயின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். சகோதர, சகோதரிகளாலும் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களும் நன்மை தரக்கூடும். மாணவர்களும் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். சிலருக்கு வாகன யோகமும் உண்டு. எனினும், வெறும் சுக போகங்களில் ஆழ்ந்துவிட வேண்டாம். குடும்ப விஷயங்களிலும், குழந்தைகள் உடல் நலனிலும் கவனம் தேவை. கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் இருப்பது குடும்பத்திற்கு நன்மை தரும். உங்கள் முயற்சிகளில், சிறு தடைகளும், பிரச்சினைகளும் வந்து நீங்கலாம். சிலருக்கு, தந்தையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும் வாய்ப்புள்ளது.இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் விவகாரங்களில் கவனம் தேவை. காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். எனவே, தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்கள் துணை அல்லது துணைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது, அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

நிதி:

நிதி நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடும். சிலர், பணப் பற்றாக்குறை காரணமாக, கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. எனினும், நீண்ட நாட்களாக வங்கிக் கடனுக்கு முயற்சிப்பவர்கள் சிலருக்கு, அந்தக் கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாதப் பிற்பகுதியில், நிலுவையில் இருக்கும் தொகை உங்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்பும் உள்ளது.

வேலை:

பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் தனித்திறன் வெளிப்படும். உயரதிகாரிகளின் அறிவுரையும், ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் சிலருக்கு நல்ல வழிகாட்டியும் கிடைக்கக்கூடும். எனினும், சக ஊழியர்களிடம் கவனம் தேவை. அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில்:

இந்தக் காலகட்டத்தில், தொழிலில் அதிக கவனம் தேவைப்படும். யாரையும் முழுமையாக நம்பிவிட வேண்டாம். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். குறிப்பாக, கூட்டாளிகளால் விரையம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களைக் கண்காணித்து, வழி நடத்திச் செல்வது அவசியம்.

தொழில் வல்லுநர்கள்:

ரிஷப ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம், புதிய தொழில் உத்திகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் நீங்கள், உங்கள் அறிவையும், திறமையையும் மேம்படுத்திக் கொள்ளலாம். உங்கள் ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும், உங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி, உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஆரோக்கியம்:

உடல் நிலையில் சிறு பிரச்சனைகள் வந்து நீங்கக் கூடும். குறிப்பாக, வயிறு, உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. எந்தவித ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டாலும், சுய மருத்துவம் பார்ப்பதை விட்டு, உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

மாணவர்கள்:

இந்த மாதம் மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் சிறு உடல்நிலைக் கோளாறுகள் வந்து நீங்கும் வாய்ப்புள்ளதால், எச்சரிக்கை தேவை. நண்பர்களுடனான உறவு, மிதமாக இருப்பது நல்லது. ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களின் அறிவுரையைக் கேட்டு, அவர்களிடம், அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வதும் நன்மை தரும்.

சுப தினங்கள்  : 1,3,4,5,7,8,9,12,13,14,15,17,18,19,26,27,28,29

அசுப தினங்கள் : 2,6,10,11,16,20,21,22,23,24,25,30

பரிகாரம்:

பகவான் ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சுக்கிரன், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.

ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.


banner

Leave a Reply