மேஷம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | october matha mesha rasi palan

மேஷ ராசி பொதுப்பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம், உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று இருப்பது, யோகமான அமைப்பு ஆகும். இப்பொழுது உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மனதில் தைரியம், உற்சாகம் பெருகும். உங்கள் அனைத்து செயல்களையும், நீங்கள் நன்கு திட்டமிட்டு, செயல்படுத்தி வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. உங்கள் பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கவும், நீங்கள் உரிய முயற்சி எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். பங்கு சந்தையிலும் லாபம் எதிர்பார்க்கலாம். தந்தையால் அனுகூலம் உண்டு. சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனினும் சில நேரங்களில், எதிர்பாராத தடைகளும், பிரச்சினைகளும் உருவாகலாம். தாய்க்கு மருத்துவ செலவுகளும் செய்ய நேரிடலாம். இருப்பினும், இவை அனைத்தையும் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களில் சிலருக்கு, இப்பொழுது, ஒரு சிறந்த வழிகாட்டி கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
பொதுவாக, காதல் இனிக்கும். இருப்பினும், காதலர்களுக்கிடையே, அவ்வப்பொழுது சிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக் கூடும். எனவே, தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு, விட்டு கொடுத்துச் செல்வது நல்லது.
நிதி:
உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கிக் கணக்கில் சேமிப்பும் கூடும். சிலருக்கு எதிர்பாராத தன வரவும் உண்டு. பொதுவாக உங்கள் வருமானம், உங்களது அனைத்துப் பொறுப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும்.
வேலை:
பணித்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்தி, வேலையில் இருந்து வந்த பல பிரச்சினைகளையும் நீங்கள் தீர்த்து வைக்கும் வாய்ப்புள்ளது. சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். பணியில் உங்கள் செயல்திறனும், அர்ப்பணிப்பும் உயரதிகாரிகளின் பாராட்டினைப் பெற்றுத் தரும்.
தொழில்:
உங்கள் தொழில் அபரிமிதமான வளர்ச்சி பெறும் காலம் இது எனலாம். எனவே, தொழில் துறையிலும் இப்பொழுது நீங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்களது புதிய தொழில் முயற்சிகளும் ஈடேறும். உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும், உங்களுக்குப் பெரும் நன்மையை விளைவிக்கும்.
தொழில் வல்லுநர்கள்:
மேஷ ராசி தொழில் வல்லுநர்கள், பல வகையிலும் முன்னேற்றம் காண்பார்கள். தொழிலில் இப்பொழுது உங்கள் தனித்திறன் வெளிப்படும். சிக்கலான பிரச்சனைகளைக் கூட, உங்கள் திறமையால் எளிமையாகக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். இதனால், உங்கள் துறையில் உங்களது புகழ் பெருகவும், வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்:
பொதுவாக உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்து சில உடல் உபாதைகளுக்கும், இப்பொழுது தீர்வு கிடைக்கக் கூடும். இருப்பினும், கோபம், மனப் பதட்டம், தலைவலி போன்ற பிரச்சனைகளால், சிலருக்கு ரத்தக் கொதிப்பு அதிகரிக்கக் கூடும். ஆகவே, கோபத்தைத் தவிர்ப்பது அவசியம். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதும் நன்மை தரும்.
மாணவர்கள்:
இந்த மாதம், மாணவர்களுக்குப் படிப்பில் மந்த நிலை காணப்படலாம். தேவையற்ற விஷயங்களில், கவனச் சிதறலும் ஏற்படலாம். எனவே நீங்கள், பாடங்களைத் தள்ளிப் போடாமல், உடனடியாகப் படித்து விடுவது நல்லது. நண்பர்களுடன் வெளியில் சென்று, நேரத்தை வீணடிப்பதையும் தவிர்ப்பது நல்லது. எனினும், உங்களுக்கு, பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு.
சுப தினங்கள் : 1,3,4,5,7,8,9,12,13,14,15,17,18,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 2,6,10,11,16,19,20,24,25,30
பரிகாரம்:
ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
செவ்வாய், சனி, குரு, ராகு, கேது முதலிய கிரக மூர்த்திகளுக்குப், பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
நாய்க்கு உணவளித்தல் மற்றும் பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்
