AstroVed Menu
AstroVed
search
search

மிதுனம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Mithuna Rasi Palan

dateSeptember 10, 2020

மிதுன ராசி பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசி நாதன் புதன், இந்த மாதம், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பது உங்களுக்கு நன்மையே தரும் எனலாம். இது உங்கள் பூர்வ புண்ணியப் பலனை, அதாவது, நீங்கள் செய்த நற்செயல்களின் நற்பலனை  அனுபவிக்கும் காலமாகும். இப்பொழுது உங்கள் அறிவுத் திறன் வெளிப்படும். தொழில் மூலம் வருமானம் பெருகும். குடும்பத்தினராலும், குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வழக்குகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் பெறும். எனினும், முயற்சிகளில் சில தடைகள் ஏற்படக்கூடும் ஆதலால், உங்கள் செயல்களில் வெற்றி பெற ஒரு முறைக்குப் பல முறை முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம். எதிலும் பொறுமையுடனும், கவனத்துடனும், விழிப்புடனும் செயல்படுவது நல்லது. எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதில் மிகவும் ஆழ்ந்து ஈடுபட வேண்டாம். ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்ந்து மிதமாக நடந்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில் சிலர், வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கலாம். அது போன்ற தருணங்களில், வாகனப் பயணங்களின் பொழுது கவனம் தேவை. குறிப்பாக, இரவு நேரப் பயணங்களையும், நீண்ட தூரப் பயணங்களையும் தவிர்த்து விடுவது நல்லது.இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் உணர்வுகள் இனிக்கும். காதலர்களுக்கிடையே அன்பும், ஆதரவும் பெருகும். புதிய காதல் முயற்சிகள் வெற்றியடையும். கணவன், மனைவிக்குள்ளும் ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் உறவுகளுடன் மிதமான போக்கைக் கடைபிடிப்பது நல்லது. 

நிதி:

நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக் கூடும். நீங்கள் செய்யும் தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்குமான நிதி வசதி, உங்களிடம் இருக்கும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சில சேமிப்புகளையும் நீங்கள் செய்யக்கூடும். 

வேலை:

இந்தக் காலகட்டத்தில், உங்கள் பணியில் ஒருவித நிலையற்ற தன்மை நிலவக்கூடும். ஒரே நேரத்தில், பல பணிகளையும் கவனிக்க நேரிடலாம். இதனால் உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கலாம். எனவே, இப்பொழுது உங்களுக்குத் தேவை பொறுமை தான். எனினும், உங்கள் அர்ப்பணிப்பு உணர்வுக்கும், செயல் திறனுக்கும் உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.

தொழில்:

உங்கள் தொழில் நல்ல முன்னேற்றத்துடன், ஒரு உயர்ந்த நிலையை அடையும் வாய்ப்புள்ளது. கூட்டாளிகளாலும் ஆதாயம் உண்டு.  இருப்பினும் தொழில் கூட்டாளிகளைக் கண்காணித்து, வழி நடத்திச் செல்வது நல்லது. பணியாட்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டாலும், அவர்களிடமும் கவனம் தேவை.

தொழில் வல்லுநர்கள்:

மிதுன ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம் வளர்ச்சி காணும் வாய்ப்புள்ளது. புதிய அணுகுமுறைகளால் உங்கள் தொழில் உயரும். தற்போதைய தேவைக்கேற்ப, உங்கள் செயல்திறனையும் நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள். இதனால் உங்கள் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள். புதிய வாடிக்கையாளர்களும் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். 

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலை மேம்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும், தற்பொழுது உரிய மருத்துவமும், தீர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, நரம்பு மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்கு, இந்த நேரத்தில் தீர்வு கிடைக்கக் கூடும். 

மாணவர்கள்:

மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பில் உங்கள் முழு கவனத்தையும்,  தனித்திறனையும் வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டிலும் உங்களில் சிலருக்கு ஆர்வம் அதிகரிக்கலாம். கடினமாக முயற்சி செய்தால், இந்தத் துறையிலும் நீங்கள் சாதனை புரியலாம். ஆசிரியர்களின் பாராட்டும் உங்களுக்குக் கிடைக்கும். 

சுப தினங்கள்  : 1,3,4,5,7,8,9,12,13,14,15,17,18,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 2,6,10,11,16,20,24,25,30

பரிகாரம்:

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் மகான் ஸ்ரீமத் ராமானுஜர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
புதன், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
ஏழை, முதியோர், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உதவி செய்தல். ஆலயங்களில் அன்னதானம் செய்தல்.


banner

Leave a Reply