மீனம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Meena Rasi Palan

மீன ராசி பொதுப்பலன்கள்:
மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசி நாதன் குரு பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால், தொழிலில் சிறு தடைகளையும், பிரச்சினைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். இந்தக் காலகட்டத்தில், எந்த விஷயத்திலும் மிகவும் ஆழ்ந்து இறங்காமல், அளவுடனும், கட்டுப்பாடுடனும் செயல் படுவது நல்லது. பொதுவாக, மனதில் தைரியம், உற்சாகம் பெருகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் எழுந்தாலும், பாசப்பிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் உங்கள் தேவைகள் தடையின்றி நிறைவேறும். சிலருக்குப் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கலாம். எதிர்பாராத அதிர்ஷ்டமும் சிலருக்கு உண்டு. குலதெய்வத்தின் அருளையும் நீங்கள் பெறும் வாய்ப்பு ஏற்படும். எனினும், தந்தையின் உடல் நிலை பாதிக்கப்படலாம். அவருடன் கருத்து வேறுபாடுகளும் வந்து நீங்கக்கூடும். தாயுடனும் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கலாம். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் சுகமான அனுபவமாக இருக்கக் கூடும். காதலர்களுக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். புதிய காதல் முயற்சிகளும் கைகூடலாம். எனினும், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். தம்பதிகள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம், தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
நிதி:
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் வந்து நீங்கும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய தொகை, தாமதமாகக் கிடைக்கக்கூடும். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கும், குடும்பத் தேவைகளுக்குமான பணம் கிடைப்பதில், எந்தத் தடையும் இருக்காது. எதிர்காலத்திற்குத் தேவையான சேமிப்பையும் நீங்கள் இப்பொழுது அதிகரிக்க முடியும்.
வேலை:
பணித்துறையில் இருப்பவர்கள், அவர்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய நேரம் இது. உங்கள் வேலைச்சுமை அதிகரிக்கலாம். சக ஊழியர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை கூறாமல் இருப்பதும் அவசியம். மேலும், உங்களைப் பற்றிய தவறான வதந்திகள் பரவ வாய்ப்புள்ளதால், எச்சரிக்கை தேவை.
தொழில்:
இந்த மாதம் வணிகத்தில் அதிக கவனம் தேவைப்படலாம். கூட்டாளிகளால் பிரச்சனைகள், விரையம் போன்றவை ஏற்படக்கூடும் என்பதால், அவர்கள் குறித்தும் எச்சரிக்கை தேவை. பணியாட்களைக் கண்காணித்து நடத்துவதும் அவசியம். மற்றவர்களை நம்பி முதலீடு செய்வதால், நஷ்டம் உண்டாகலாம், என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
தொழில் வல்லுநர்கள்:
மீன ராசி தொழில் வல்லுநர்கள், அதிக கவனத்துடன் செயலாற்ற வேண்டிய காலம் இது எனலாம். உங்கள் திறமைக்கு சவால்களும், சோதனைகளும் எழலாம். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கலாம். உங்களைப் பற்றி, தவறான வதந்திகளும் பரவக்கூடும். வாடிக்கையாளர்களிடமும் கவனமாக நடந்து கொள்வது அவசியம். இப்பொழுது உங்கள் தொழிலில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது மிகவும் அவசியம் எனலாம்.
ஆரோக்கியம்:
உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகளுக்கும், இந்த நேரத்தில் உரிய சிகிச்சை கிடைத்து, அவர்கள் உடல்நிலை சீரடையும் வாய்ப்புள்ளது. இருப்பினும், உணவுக் கட்டுப்பாடும், யோகா, தியானம் போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதும், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சோம்பலைத் தவிர்த்து, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நன்மை தரும். தேவையற்ற விவகாரங்களிலும், பொழுது போக்குகளிலும் பொன்னான காலத்தை வீணாக்கி விட வேண்டாம். பெற்றோர், ஆசிரியர் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
சுப தினங்கள் : 1,3,4,5,7,8,9,12,13,14,15,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 2,6,10,11,16,17,18,20,24,25,30
பரிகாரம்:
- திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் மற்றும் மகான் ஸ்ரீமத் ராமானுஜர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
- ஆலயங்களில் லட்டு தானம் செய்தல். கோவில்களுக்குத் திருப்பணி செய்தல்.
