Kanni Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - கன்னி குரு பெயர்ச்சி பலன்கள்

கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 9ஆம் வீடு, 11ஆம் வீடு, மற்றும் 1 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 9 ஆம் வீடு என்பது, அதிர்ஷ்டம், ஆன்மீகம், மதம் போன்றவற்றையும், 11 ஆம் வீடு என்பது, லாபம், விருப்பங்கள் நிறைவேறுதல், ஆதாயங்கள் ஆகியவற்றையும், 1 ஆம் வீடு என்பது, திறமைகள், குணநலன்கள், பொது வாழ்க்கை போன்றவற்றையும் குறிக்கிறது.
இந்த குரு பெயர்ச்சி கன்னி ராசி அன்பர்களுக்கு ஆன்மீகத் துறையில் அதிர்ஷ்டம் அளிக்கும் பெயர்ச்சியாக விளங்கும். உங்கள் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தியானம், மனவளக் கலை போன்றவற்றில் உங்கள் மனம் ஈடுபடும். நீங்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வீர்கள். சட்ட திட்டங்களை மதிப்பீர்கள். உங்கள் மனதில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற வகையில் உணர்வுகள் மேலோங்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் ஓத்துழைப்பு கிடைப்பது அரிதாக இருக்கும். இதனால் எழும் பிரச்சினைகள் காரணமாக உங்கள் மனதில் கவலை எழும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் என்பதால் லௌகீக நாட்டம் குறையும். அதன் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயம் சுமாராக இருக்கும். மனஅமைதி குறைந்து காணப்படும். உங்கள் தொழிலுக்கும் இது சாதகமான காலம் என்று கூற முடியாது. தொழில் கூட்டாளிகளுக்கிடையே சச்சரவுகளும் எழலாம். என்றாலும் இந்த காலக் கட்டத்தில் நீங்கள் அறிவார்ந்த வகையில் செயல்படுவீர்கள். இது உங்கள் நடவடிக்கைகளில் நன்கு வெளிப்படும். பூர்வ புண்ணியம் காரணமாக அதாவது உங்கள் முன் நல்ல வினைப் பயன் காரணமாக இப்பொழுது உங்களுக்குப் பல நன்மைகள் விளையும். இதனால் உங்களது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகும். படைப்புத்திறன், புதியனவற்றை நடைமுறைப்படுத்தும் திறன் போன்றவற்றை நீங்கள் சிறப்பாக வெளிப்படுத்துவீர்கள். பணித்துறையில் முன்னேற நீங்கள் கடுமையாக உழப்பீர்கள். இது வேலையில் உங்களுக்குச் சாதகமாக அமையும். தொற்று நோயினால் நீங்கள் பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து நீங்கள் விரைவிலேயே மீண்டு விடுவீர்கள்.
வேலை, தொழில்
பணி செய்யும் கன்னி ராசி அன்பர்கள் பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். என்றாலும் சக பணியாளர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாகத் தான் இருக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், இது கடினமாக நேரமாக இருக்கலாம். அடிக்கடி மன அமைதி இழக்க நேரிடும். வாடிக்கையாளர்களைக் கவனமாகக் கையாள வேண்டிய சூழல் இருக்கும். நீங்கள் அடிக்கடி கோப வசப்படுவீர்கள் என்பதால், வாடிக்கையாளர்களுடன் சில தகராறுகளும் எழலாம். தொழிலில் லாபம் சாராசரியாகவே இருக்கும்.
நிதி
கன்னி ராசி அன்பர்களின் நிதிநிலையைப் பொறுத்தவரை இந்தக் காலக் கட்டத்தில் சரளமான பணப் புழக்கம் இருக்காது. அதிக அளவில் வருமானம் ஈட்டுவதும் கடினமாக இருக்கும். பண விஷயங்களைப் பொறுத்தவரை இது சற்று சவாலான காலம் என்றே கூற வேண்டும். செலவுகளை கட்டுபடுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்கால நலன் கருதி சேமிக்க இயலும். பங்குகள், ஊக வணிகம் போன்றவை மூலம் நீங்கள் லாபம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது எனலாம்.
குடும்பம்
குடும்ப விவகாரங்கள் உங்களுக்கு திருப்தியோ, மன மகிழ்ச்சியோ அளிக்கும் விதத்தில் இருக்காது. குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவி உறவிலும் நல்லிணக்கம் இருக்க வாய்ப்பில்லை. கருத்து வேறுபாடுகளும், முரண்பாடு காரணமாக வாத விவாதங்களும் தலை தூக்கும் என்பதால், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மூத்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கல்வி
கன்னி ராசியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்த பலனைக் காண, தங்கள் திறமைகளை பயன்படுத்தியும், கடின முயற்சி செய்தும் வெற்றி காண வேண்டும். அவ்வாறு முயன்றால் நீங்கள் பாராட்டும், விருதும் பெறுவீர்கள். உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், தற்காலத் தொழில் நுட்ப முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளவும், இது சரியான நேரம் எனலாம். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுடனான சகவாசம் காரணமாக கவனச் சிதறல்களும், திசை திருப்புதல்களும் ஏற்படலாம். உங்கள் கல்வி முன்னேற்றத்தைத் தடை செய்யும் அனைத்து கவனச் சிதறல்களையும் ஒதுக்கி விட்டு, உங்கள் படிப்பின் மீது முழு கவனம் செலுத்துவது அவசியம் ஆகும்.
காதலும், திருமண வாழ்க்கையும்
உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் அன்பு காட்டினாலும் அதற்கான விளைவு நேநேகள் எதிர் பார்க்கும் வகையில் இருக்காது. இது உங்கள் மனதில் கோபத்தையும் வருத்தத்தையும் அளிக்கும். ஆனால் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், உங்கள் உறவை, நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். பரஸ்பரம் அனுசரித்துச் செல்வதும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் வாழ்க்கையை எளிதாகவும் இனிமையாகவும் ஆக்கும்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உடல் நிலையில் கவனம் தேவை. குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் கண்கள் அல்லது முகத்திலும் கூட, சில பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருக்கவும். ஆனால், நீங்கள் விரைவாக குணமடைந்து விடுவீர்கள். வருமுன் காப்பது நல்லது என்பதற்கேற்ப நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
எளிய பரிகாரங்கள்
- பகவான் தட்சிணாமூர்த்தியையும், சத்ய நாராயணரையும் வணங்கவும்
- ‘ஓம் அங்கீரோஜடாய வித்மஹே, வாசஸ்பதயே தீமஹி, தன்னோ குரு பிரசோதயாத்’ என்ற குரு காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்
- பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்ளவும்
- மஞ்சள் மலர்கள் தரும் செடிகளை வளர்க்கவும்
- மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்யவும்
- பெண்களையும், குழந்தைகளையும் மரியாதையாக நடத்தவும்
