கும்பம் அக்டோபர் மாத ராசி பலன் 2020 | October Matha Kumba Rasi Palan

கும்ப ராசி பொதுப்பலன்கள்:
கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால், தேவையற்ற, வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களுக்குப் பணம் தொடர்பான வாக்குறுதி அளிப்பது, பிறருக்காக ஜாமீன் கையெழுத்திடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எனினும், மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தை நன்கு நடத்துவதற்குத் தேவையான வருமானம் வந்து சேரும். சிலருக்கு, நீண்ட நாட்களாக முயற்சித்துக் கொண்டிருக்கும் வங்கிக் கடன் கிடைக்கும். இல்லறம் இனிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளாலும் சந்தோஷம் உண்டாகும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. எனினும், தாய் உடல் நலனில் கவனம் தேவைப்படலாம். தாயுடன் கருத்து வேறுபாடுகளும் வந்து நீங்கலாம். தந்தையுடனும் சிறு மனஸ்தாபங்கள் வந்து போகலாம். தொழிலில் சிறு பிரச்சனைகள், தடைகள் போன்றவற்றைச் சந்தித்தாலும், அதில் முன்னேற்றம் உண்டு.இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் இனிக்கும். காதலர்களுக்குள் இணக்கம் அதிகரிக்கும். புதிய காதல் முயற்சிகளும் கைகூடும் வாய்ப்புள்ளது. இல்லற வாழ்க்கையும் இனிமையாகவே செல்லும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் பெருகும். சில தம்பதியினர், வெளியிடங்களுக்குச் சுற்றுலா சென்று மகிழ்வார்கள்.
நிதி:
பொருளாதார நிலை உயரக் கூடும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத் துணை வழியில் வருமானமும் உண்டு. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணமும், இப்பொழுது கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத தன வரவும், அசையும் அல்லது அசையா சொத்து சேர்க்கையும் கூட, சிலருக்கு உண்டு.
வேலை:
இந்த மாதம் பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்கள் கடின உழைப்பு, உங்களது உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்றுத்தரக் கூடும். உங்கள் வருமானமும் உயரக்கூடும். உங்கள் திறமையும் மற்றவர்களது பாராட்டு பெறும். இருப்பினும், உடன் பணிபுரிபவர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
தொழில்:
தொழிலில் நல்ல வருமானம் உண்டு. எனினும், புதிய முதலீடுகளைத் தவிர்த்து விட்டு, தற்பொழுது உள்ள நிலையையே தொடர்வது நல்லது. இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கவும் உதவும். இந்த நேரத்தில், ஆலயத் திருப்பணிகளுக்கும், ஏழைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தர்மம் செய்வது மிகவும் நல்லது. இது உங்களை விரய சனி மற்றும் வரவிருக்கும் விரய குருவின் பாதிப்புகளிலிருந்து காப்பாற்றும்.
தொழில் வல்லுநர்கள்:
கும்ப ராசி தொழில் வல்லுநர்கள் இந்தக் காலகட்டத்தில், நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் தனித் திறனால் உங்களை நீங்களே மேம்படுத்தி கொள்வீர்கள். உங்கள் திறமை மற்றவர்களின் பாராட்டையும் பெறக்கூடும். உங்கள் துறையில் நீங்கள் புகழ் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையையும், ஆணவத்தையும் தவிர்ப்பது அவசியம்.
ஆரோக்கியம்:
இந்த நேரத்தில், பொதுவாக, உங்கள் உடல் நலம் மேம்படும் எனலாம். எனினும் சிலருக்கு, குளிர்ச்சி தொடர்பான உபாதைகளும், காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகளும் வந்து நீங்கும் வாய்ப்புள்ளது. வீண் மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க, உங்கள் உடல் ஆரோக்கியத்திலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நன்மை தரும். யோகா, தியானம் போன்றவற்றைப் பயில்வதும் நல்லது.
மாணவர்கள்:
படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். தேர்வுகளில் சிலர் அதிக மதிப்பெண் எடுத்து சாதனையும் புரியக்கூடும். விளையாட்டிலும் உங்களில் சிலரது திறமை பளிச்சிடும். எனினும் உடல் நலனில் அக்கறை தேவை. ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடந்து கொள்வதும் நன்மை தரும்.
சுப தினங்கள் : 1,3,4,5,7,8,9,12,13,14,17,18,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 2,6,10,11,15,16,20,24,25,30
பரிகாரம்:
- ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நாகராஜர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
- ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்தல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.
