October Matha Magara Rasi Palan

மகர ராசி பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசி நாதன் சனி பகவான், உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால், நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய காலமாக இது அமையும். எதிலும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். பேச்சில் கவனம் தேவை. சோம்பலைத் தவிர்க்கவும். யாரிடமும் பகைமையை வளர்க்க வேண்டாம். யாரையும் முழுமையாக நம்பவும் வேண்டாம். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பிறருக்காக ஜாமீன் போன்றவற்றை அளிக்க வேண்டாம். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகலாம் என்பதால், வீண் விரயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழிலிலும் மந்த நிலை ஏற்படலாம். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவைப்படலாம். தாயுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவருடைய அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும், நெருக்கமும் பெருகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கை கூடும். சிலருடைய நீண்ட நாள் எண்ணங்கள் ஈடேறும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் விவகாரங்களில் கவனம் தேவை. காதலர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். இப்பொழுது, புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். சில தம்பதிகள் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்று மகிழ்வார்கள்.
நிதி:
பொருளாதார நிலை ஓரளவு நன்றாக இருக்கக் கூடும். இருப்பினும் பணம், கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
வேலை:
வேலையில் முன்னேற்றம் காணலாம். எனினும், பணிச்சுமை அதிகரிக்கும். சிலர், அலுவலகத்தில் பெரும் சவாலை சந்திக்க நேரிடலாம். அதை நீங்கள் உற்சாகத்துடன் எதிர்கொண்டு, ஏற்றுச் செயல்பட்டால், இந்த நேரத்தில் நீங்கள் சாதனை கூட செய்ய முடியும். கவனச் சிதறலைத் தவிர்த்து, உங்கள் பணியில் கண்ணும், கருத்துமாக இருப்பதும் நன்மை தரும்.
தொழில்:
தொழில் சீராகச் செல்லும். இருப்பினும் கூட்டாளிகள், பணியாட்கள் போன்றவர்களைக் கண்காணித்து வழி நடத்திச் செல்வது நன்மை தரும். வியாபாரம் தொடர்பாக, சிலர், வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். இந்த நேரத்தில், புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
தொழில் வல்லுநர்கள்:
இந்த மாதம், மகர ராசி தொழில் வல்லுநர்கள் கவனமாகச் செயல்படுவது அவசியம். சிறு பிரச்சனைகளையும், தடைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம், உங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பதும், காலத்திற்கு ஏற்ப, புதுமைகளைக் கற்பதும், அவற்றை முறையாகச் செயல்படுத்துவதும், உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொறுமையும், நிதானமும் இப்பொழுது உங்களுக்கு மிகவும் அவசியம் எனலாம்.
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆயினும், வீண் குழப்பம், பதட்டம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடலில் சிறு பிரச்சனை என்றாலும், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. தவறாமல் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வது, உடல் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, மன அமைதிக்கு வழி வகுக்கும்.
மாணவர்கள்:
இந்த மாதம் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் நலனிலும் உரிய அக்கறை தேவை. காதல் போன்ற தேவையற்ற விஷயங்களால், கவனச் சிதறல் ஏற்பட்டு, உங்கள் படிப்பு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்பதால், இவற்றைத் தவிர்ப்பது அவசியம். நல்ல நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பது நல்லது. ஆனால் அதே நேரம், தேவையற்ற நட்பைப் புறக்கணிப்பதும் அவசியம்.
சுப தினங்கள் : 1,3,4,5,12,15,17,18,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 2,6,10,11,13,14,16,20,24,25,30
பரிகாரம்:
- பகவான் ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜை, வழிபாடு மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
- முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல். ஆலயங்களில் அன்னதானம் செய்தல். காக்கைக்கு உணவு அளித்தல்.
