கும்பம் அக்டோபர் மாத ராசி பலன் 2022 | October Matha kumbam Rasi Palan 2022

கும்பம் அக்டோபர் மாத பொதுப்பலன்கள் 2022
வீட்டில் உள்ள வயது மூத்தவர்களுடம் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். அரசு உத்தியோகத்தில் பணியில் உள்ளவர்கள் சிறப்பாகப் பணியாற்றி அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவார்கள். நிதிநிலையைப் பொறுத்தவரை சாதகமான நிலை காணப்படும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் குடும்பத் தொழிலை விரிவு படுத்த பணத்தை முதலீடு செய்வீர்கள்.
காதல் / குடும்பம்:
இந்த மாதம் காதலை தெரிவித்து காதலில் வெற்றி பெற உகந்த காலகட்டம் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தம்பதிகள் மலை பிரதேசங்களுக்கு இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள். தாய் மற்றும் தந்தையுடன் சுமூகமான உறவு நீடிக்கும். குழந்தைகளுடன் பற்று பாசம் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் நிறைந்து காணப்படும்.
காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை ஏற்றம் மிகுந்து காணப்படும். கடந்த கால முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பங்கு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திருமண விழா மற்றும் வளைகாப்பு போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்வதால் சுப விரயங்கள் ஏற்படலாம்.
நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை
வேலை:
வெளிநாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் வருமானமும் உயரும். அரசு உத்தியோகத்தில் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சக பணியாளர்கள் உங்களுடன் அனுசரனையுடன் நடந்து கொள்வார்கள். அவர்களால் உங்களுக்கு உதவியும் கிடைக்கும்.
தொழில்:
ஒரு சிலர் அச்சகம் சம்மந்தப்பட்ட புதிய தொழில் தொடங்க முதலீடுகளை மேற்கொள்வீர்கள். ஆயத்த ஆடை சம்மந்தப்பட்ட தொழிலை விரிவாக்கம் செய்வதற்காகவும் புதிய முதலீடுகளை செய்வீர்கள். கூட்டுத்தொழில் தொடங்க இது ஏற்ற மாதம் ஆகும். ஏற்றுமதி சார்ந்த கூட்டுத் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் தகவல் தொடர்புத் துறையில் வேலை தேடும் தொழில் வல்லுனர்களுக்கு தாங்களின் விருப்பப்படி வேலை கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் தங்களின் உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு அங்கேயே வேலையில் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெரிய அளவிலான உடல் நல பாதிப்புகள் ஏதும் காணப்படாது. உங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள அதிகாலை நடைபயிற்சியையும், தியானத்தையும் தினமும் மேற்கொள்ள வேண்டும். தாயாருக்கு சுவாசம் சம்மந்தப்பட்ட உடல் நல குறைவு ஏற்படலாம். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் பிரகாசிப்பார்கள். இந்த மாதம் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை தரும் மாதமாக இருக்கும். வெளி நாட்டில் உயர்கல்வி சேர்ந்தவர்களுக்கு கல்விகட்டண உதவிப் பணத்துடன் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
1, 2, 5, 6, 7, 9, 11, 12, 14, 15, 16, 17, 30, 31.
அசுப நாட்கள்:
3, 4, 8, 10, 13, 23, 24, 25, 26, 29,
