சிம்மம் ராசி - பொதுப்பலன்கள்
சிம்ம ராசி அன்பர்களே! இது உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் மாதமாக இருக்கும். மனதில் திருப்தி நிலவும். வாழ்வில் முன்னேற்றம் காண முடியும். சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். இழந்த பெயரையும், நீங்கள் மீண்டும் பெற இயலும். இவை, உங்கள் வாழ்க்கையை மேலும் வளப்படுத்தும். உங்கள் முறையான திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படும். வாழ்வில் கடினமான பணிகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்று, நிறைவேற்றுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு, பெரிய அளவில் சாதனைகளையும் புரிவீர்கள். பணி நிமித்தமான பயணங்களையும், நீங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஆனால், நண்பர்களுடன் ஏற்படும் சிறு பிரச்சினைகள் குறித்து எரிச்சல் அடையாதீர்கள். அவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள சிறிது அவகாசம் அளியுங்கள். அண்டை அயலார் மற்றும் நெருக்கமானவர்களுடன், பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பழகுங்கள். உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும்.
சிம்மம் ராசி - காதல்/திருமணம்
காதலர்களுக்கு வழக்கமான மாதமாக இருக்கும். காதலில், உங்கள் பகட்டையோ, போலித்தனத்தையோ வெளிப்படுத்தாமல், உண்மையாக நடந்து கொள்வது, உறவை மேம்படுத்தும். இப்பொழுது சிலருக்கு புதிய காதல் மலரக் கூடும். குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு, தக்க துணை அமையும் வாய்ப்பும் உள்ளது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
சிம்மம் ராசி - நிதி
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சீராகும். நிதி ஆதாயங்கள் பெருகும். பணத்தை சேமிப்பதற்கான திட்டங்களை, நீங்கள் முறையாகச் செயல்படுத்தத் தொடங்குவீர்கள். இப்பொழுது நீங்கள் செய்யும் முதலீடுகள், லாபம் தரும். பிறருக்குக் கடனாகக் கொடுத்த தொகையையும், உங்களால் வசூல் செய்ய முடியும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன் பூஜை
சிம்மம் ராசி - வேலை
வேலை முன்னேற்றம் அனுகூலம் தரும். நீங்கள் பணியில் காட்டும் ஈடுபாடு நிர்வாகத்தின் பாராட்டைப் பெறும். உங்கள் திறமை, பதவி உயர்வையும் பெற்றுத் தரக் கூடும். ஆனால், சக பணியாளர்கள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால், அலுவலகத்தில் நீங்கள் வெளிப்படையாகப் பேசுவதும், நடந்து கொள்வதும் நல்லது.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பகவான் பூஜை
சிம்மம் ராசி - தொழில்
தொழிலில் எட்ட வேண்டிய இலக்குகளை முறையாக நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை அடைவதில் வெற்றியும் காண்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புகளைப் பெற, பயணங்களையும் மேற்கொள்வீர்கள். லாப நஷ்டங்களை நன்கு அலசி ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு, வியாபாரத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சிம்மம் ராசி - தொழில் வல்லுநர்
தொழில் வல்லுநர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ‘கடினமான பணிகளை எவ்வாறு செய்து முடிப்பது?’ என்ற கவலைகள் வேண்டாம். சற்று கூடுதல் கவனத்துடன் முயற்சி செய்தால், மற்ற பணிகளைச் செய்வது போலவே, இவற்றையும் உங்களால் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும். இந்த மாதம் நீங்கள் பயணங்கள் செய்ய நேரலாம். அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
சிம்மம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை நன்றாக இருக்கும். சிறு ஆரோக்கியப் பிரச்சினைகள் எழுந்தாலும், அவற்றைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. எனினும், எண்ணெய் மற்றும் துரித உணவு வகைகளைத் தவிர்க்கவும். பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இது, பணிகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் ஆற்றலை உங்களுக்கு அளிக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
சிம்மம் ராசி - மாணவர்கள்
கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். நேர்மையாகவும், கடினமாகவும் முயற்சி செய்து, விளையாட்டுத் துறையிலும் வெற்றி காண்பீர்கள். பெற்றோர்களும், உங்கள் முயற்சிகளுக்கு உதவியும், ஆதரவும் அளிப்பார்கள். பிரச்சினைகள் எதுவும் எழுந்தால், அவற்றைக் கவனமாகக் கையாள்வது நல்லது.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,12,14,15,17,18,19,22,23,24
அசுப தினங்கள்: 4,5,11,13,16,20,21,25,26,27,30

Leave a Reply