AstroVed Menu
AstroVed
search
search

November Monthly Sagittarius Rasi Palangal 2019 Tamil

dateNovember 11, 2019

தனுசு ராசி - பொதுப்பலன்கள்

தனுசு ராசி அன்பர்களுக்கு, இது சுமாரான மாதமாக இருக்கும். மிதமான பலன்கள் கிடைக்கும். சூழ்நிலையில் சாதகத் தன்மை, குறைந்தே இருக்கும். உங்கள் முயற்சிகள் சாதாரண பலன்களையே அளிக்கும். மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முதலில் சாதாரணமாகத் தோன்றினாலும், நடைமுறையில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். சில பிரச்சினைகள், தீர்க்க முடியாதவைகளாகவே தோன்றலாம். பல தடைகளும் ஏற்படலாம். எனவே, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பிறரிடம் அளவோடு பழகுவதும் நல்லது. எந்தவித சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த கவலையும் ஏற்படலாம். சீரான நடத்தையுடன், நேர்மையாகப் பணியாற்றினால், உங்கள் தரம், ஊதியம் புகழ் அனைத்தும் உயரும் வாய்ப்புள்ளது. பிரச்சினைகளை சந்திக்கும் பொழுது, சிறிது அனுசரித்து நடந்து கொள்வதும் பயன் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். 

தனுசு ராசி - காதல்/திருமணம்

உங்கள் துணை, உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். காதல் துணையாக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, உங்களைப் புரிந்து கொள்வதற்கான உரிய அவகாசம் கொடுப்பது அவசியம். இதன் மூலம் உங்களால், குடும்பத் தேவைகளைப் தெளிவாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடக்க இயலும்.  பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரகன் பூஜை  

தனுசு ராசி - நிதி 

பொருளாதார நிலை சாதாரணமாக இருக்கும். சிறிது கஷ்டப்பட்டே, பண நெருக்கடிகளை சமாளிக்க வேண்டி வரும். செலவுகளைக் கண்காணிக்க, நீங்கள் மாதாந்திர பட்ஜெட் தயாரித்து அதன் படி நடப்பது நல்லது. ஆயினும், இப்பொழுது நீங்கள், பிறருக்குக் கொடுத்த பணத்தை வசூல் செய்வீர்கள். வங்கியில் கடன் தொகை பெறுவதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சனி பகவான் பூஜை  

தனுசு ராசி - வேலை

வேலை நிலவரம் அனுகூலம் தரும். நீங்கள் கடினமாக உழைத்து, உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்களது சிறப்பான பணி, உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும். சிலருக்கு திடீர் ஊதிய உயர்வு அல்லது சலுகைத் தொகை கிடைக்கலாம்; இது உங்களுக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை  

தனுசு ராசி - தொழில்

உங்கள் ஆற்றல் குறையும். தன்னம்பிக்கையும் குறையக் கூடும். தேவையற்ற செலவுகள் பெருகும். உங்கள் பேச்சின் காரணமாக சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், நீங்கள் பயன்படுத்தும் சொற்களில் கவனம் தேவை. எனினும், தொழிலில் ஏற்படும் தடைகளை மெதுவாகக் களைவீர்கள். சில முக்கியப் பணிகளை முடிப்பதற்காக, தொலை தூரப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புகளும் ஏற்படலாம். இது உங்கள் எதிர் காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். 

தனுசு ராசி - தொழில் வல்லுநர்

உங்கள் கவனிக்கும் திறன் மேம்படும். பிறருடன் தொழில் முறையில், நல்லுறவைப் பராமரிப்பீர்கள். மேலதிகாரிகளின் மூலம், நன்மைகள் கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களுடனும் பழக்கம் ஏற்படும். இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 

தனுசு ராசி - ஆரோக்கியம் 

தனுசு ராசி அன்பர்களின் உடல்நிலையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். உங்களுக்குப் பதட்டமும், உணர்ச்சி வசப்படும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

தனுசு ராசி - மாணவர்கள் 

இது, கல்வி சிறக்கும் காலமாகும். படிப்புடன்  கூட, விளையாட்டிலும் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். நீங்கள் விரும்பியபடி, மேற்படிப்பிலும் சேருவீர்கள். உங்கள் வெற்றி கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சில நேரங்களில், படிப்பில் எதிர்பார்க்கும் பலன்களை அடைய சிறிது பொறுமை தேவைப்படும்.  

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,12,14,15,22,23,24,28,29

அசுப தினங்கள்: 4,5,11,13,16,17,18,19,20,21,25,26,27,30


banner

Leave a Reply