விருச்சிகம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Viruchigam Rasi Palan 2020

விருச்சிக ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் நம்பிக்கைகள், கனவுகள் போன்றவற்றை துணிச்சலுடனும், உறுதியுடனும் நிறைவேற்றிக் கொள்வதற்கு உகந்த மாதமாக, இது இருக்கும். பல பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் உங்கள் திறன் காரணமாக, நீங்கள் வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். ஊக அடிப்படையிலான முதலீடுகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன் தரலாம். குடும்ப வாழ்க்கையிலும், உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கக் கூடும். சமுதாயத்தில் உங்கள் நற்பெயரும் உயரக்கூடும். உங்களில் சிலர், குடும்பத்துடன், வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொள்ளலாம். இது உங்கள் சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும். சமுதாயச் சேவை செய்வதிலும் நீங்கள் ஆர்வம் காட்டலாம். இது உங்களுக்கு மனத் திருப்தி அளிக்கும். சிலர் அமானுஷ்யமான கலைகள் சிலவற்றையும், உண்மையான ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் நீங்கள், உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டு விடக் கூடும். இது உங்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தலாம். எனவே, உணவு விஷயத்தில் கண்டிப்பாக இருக்கவும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
விருச்சிக ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
உங்களில் சிலருக்கு, உண்மையான காதல் துணை கிடைக்கும். இதன் மூலம், காதல் வாழ்க்கையில் நீங்கள் நன்கு முன்னேற முடியும். சிலருக்குத் தாமதமின்றி, திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெறும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணைவரை நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள். இது, மண வாழ்க்கையில் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு வழிகோலும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
விருச்சிக ராசி நிதி:
பொருளாதாரத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு நிவாரணம் தரும் காலமாக இது இருக்கக் கூடும். உங்களில் சிலர், குடும்பத் தேவைகளுக்காக, ஆடம்பரப் பொருட்களை வாங்கக் கூடும். இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம். ஊகத்தின் அடிப்படையிலான முதலீடுகள் உங்களைப் பெரிதும் ஈர்க்கக் கூடும். அதிக வருமானம், லாபம் போன்றவற்றை மனதில் கொண்டு, நீங்கள் இவற்றில் பெரும் பணத்தை முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது. சிலர், இந்த நேரத்தில், பல பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால், இதனால் அதிக செலவுகள் ஏற்படக்கூடும்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை
விருச்சிக ராசி வேலை:
இந்த நேரத்தில் சிலர், தேவையற்ற விஷயங்களில், தவறான அணுகுமுறையைக் கடைபிடிக்கக் கூடும். இருப்பினும், அலுவலப் பணிகளை நீங்கள் மிகவும் திறமையாகவே கையாளுவீர்கள். பலவகைப் பணிகளையும் நிறைவேற்றும் திறன் மற்றும் கடின உழைப்பு போன்றவற்றின் பயனாக, வேலை முன்னேற்றத்துக்கான தெளிவான பாதையை உங்களால் அமைத்துக் கொள்ள முடியும். கிரகங்களும் இப்பொழுது உங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் எனலாம்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சூரிய பகவான் பூஜை
விருச்சிக ராசி தொழில்:
தொழில் முனைவோர் சில புதிய திட்டங்களைத் துவக்கக் கூடும். இது அவர்கள் நன்மதிப்பை மேம்படுத்தும். தொழில் கூட்டளிக்குச் செய்து கொடுத்துள்ள, நிதி தொடர்பான சில வாக்குறுதிகளை, நீங்கள் உறுதியுடன் நிறைவேற்றுவீர்கள். சவால்களை எதிர்கொள்ளவும், நீங்கள் எப்பொழுதும் தயாராக இருப்பீர்கள். இது உங்கள் தொழில் வாய்ப்புகளை மேலும் அதிகரித்து, உங்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத்தரக் கூடும். ஆனால் உங்கள் உணர்வுகள் தேவையற்ற வகையில் இப்பொழுது தலை தூக்கலாம். இவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்வது நல்லது.
விருச்சிக ராசி தொழில் வல்லுநர்கள்:
விருச்சிக ராசி தொழில் வல்லுநர்கள், இந்த நேரத்தில், அறிவுபூர்வமாகப் பணியாற்றுவார்கள். உடனடியாகப் பிறரைத் தொடர்பு கொள்வது, அவருக்கு உரிய பதில் அளிப்பது போன்ற, உங்களது நடவடிக்கைகள், உங்களுக்கு நற்பலனை அளிக்கும். உங்கள் செயல்களும் வெற்றி பெறும். சமுதாய அளவில் சில தவறான புரிதல்களையும் நீங்கள் களையக்கூடும். ஆனால் இந்த நேரத்தில், உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயல்வது நலன் தரும்.
விருச்சிக ராசி ஆரோக்கியம்:
பலகீனம், சோர்வு போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்படலாம். சிலருக்கு உடல் வலி, வாய்வுத் தொல்லை போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம். இவை குறித்து விசேஷ கவனம் தேவை. உடலில் சிவப்பு அணுக்கள் குறைபாடு, ரத்த சோகை போன்றவையும் ஏற்படலாம். பச்சைக் காய்கறிகள், இலையுள்ள காய்கறிகள், பேரீச்சம்பழம், உலர்ந்த பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்வது, உடல் நலத்தை மேம்படுத்தும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை
விருச்சிக ராசி மாணவர்கள்:
இது உங்களுக்கு ஆதரவான காலமாக இருக்கும். விரைந்து கற்கும் திறன் கொண்ட உங்களால், இப்பொழுது பாடங்களை அதிவிரைவாக கிரகித்துக் கொள்ள முடியும். படிப்பதற்கும் நீங்கள் தேவையான நேரம் ஒதுக்குவீர்கள். இது எதிர்பார்த்த முன்னேற்றத்தை உங்களுக்கு அளிக்கும். சிலர், தங்கள் அணுகுமுறை மற்றும் நடத்தை மூலம், சக மாணவர்களிடம் ஆர்வத்தை உருவாக்கக் கூடும். இது அவர்களது சில குறைபாடுகளைக் களைந்து, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க உதவும். தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்க்கும் ‘ரேங்க்’ எனப்படும் உயர் தரத்தை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 6, 8, 9, 11, 13, 18, 23 28, 30
அசுப தினங்கள்: 4, 7, 12, 24, 26, 29
