துலாம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Thulam Rasi Palan

துலாம் ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், பொதுவாக, ஒரு சோதனைக் காலமாக அமையக் கூடும். மற்றவர்களுடன் பழகும் பொழுதும், பிரச்சனைகளைச் சமாளிக்கும் பொழுதும், திறமையாகவும், நாசூக்காகவும் செயலாற்றுவது நல்லது. மாறிக் கொண்டே இருக்கும் உங்கள் சிந்தனைகள், உங்கள் பணிகளை செய்து முடிப்பதில் தடங்கல்கள் விளைவிக்கலாம். வேலையில், உயர் அதிகாரிகளிடமிருந்து அதிக நன்மைகளைப் பெற இயலாமல் போகலாம். உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இதுவும் உங்களுக்குச் சாதாரண பலங்களையே தரக்கூடும். வழக்கமான பணிகளைச் செய்யும் பொழுது, சில சமயங்களில், நீங்கள் தன்னம்பிக்கை இழந்து விடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில், அவசர முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது உங்கள் நற்பெயரைப் பாதித்து விடலாம். இத்துடன் கூட, உறவினர்களுடன் மிகத் தெளிவாகப் பேசவும். அவர்களைத் தொடர்பு கொள்ளும் பொழுதும், உங்கள் கருத்துகளைத் தெளிவாகத் தெரிவித்து விடவும். உங்களில் சிலர், தனிப்பட்ட பயணம் மெற்கொள்ளலாம். இது உங்களுக்கு மன அமைதி தரக் கூடும். மேலும், தியானப் பயிற்சியையும் மேற்கொள்ளவும். இது உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தும். உங்கள் தோற்றம், ஆரோக்கியம் போன்றவற்றிற்கு, இப்பொழுது நீங்கள் முக்கியத்துவம் அளிப்பீர்கள். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
துலாம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
உறவுகள் குறித்து நீங்கள் விசேஷ கவனம் செலுத்துவது நல்லது. இந்த நேரத்தில், உங்கள் கவலைக்கு முக்கிய காரணம், கருத்து வேறுபாடுகளாக இருக்கலாம். உங்கள் துணை அல்லது துணைவர், உங்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் போகலாம். இதனால் உங்களைத் தவிர்க்கலாம் அல்லது உங்கள் உறவை முறித்துக் கொள்ளவும் முயற்சிக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் பொறுமை காக்கவும். ஏனெனில், நீங்கள், உங்கள் மரியாதையைத் திரும்பிப் பெறுவதற்கு உகந்த காலம் இது. ஆனால், திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்வது போன்றவற்றை, இப்பொழுது ஒத்திப் போடுவது நல்லது.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
துலாம் ராசி நிதி:
நிதி, சொத்து தொடர்பான விஷயங்கள், இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கலாம். பயணம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செலவுகள் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், நன்கு சிந்தித்து, உங்கள் நிதிநிலையைச் சீர்படுத்திக் கொள்வது நன்மை தரும். இப்பொழுது, உங்கள் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். எனவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சேமிப்பு, முதலீடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தவும். தவிர, எந்த விஷயத்தையும் மற்றவர்கள் கோணத்திலிருந்து பார்க்க முயற்சிக்கவும். இதன் மூலம், அவர்களது உண்மையான நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
துலாம் ராசி வேலை:
வேலையில் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக் கூடும். சக தொழிலாளர்களுடன் சண்டை, சச்சரவு ஏற்படும் சாத்தியமும் உள்ளது. எனவே, அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைப் பராமரிப்பது நல்லது, தவிர, யாரையும் கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டாம். சில நேரங்களில் உங்கள் முயற்சிகளுக்கு, எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். இது, உங்களை நம்பிக்கை இழக்கச் செய்யலாம். எனவே, இந்தக் காலகட்டத்தில், நீங்கள் மிகக் கடுமையாக உழைப்பது அவசியம்.
துலாம் ராசி தொழில்:
இந்தக் காலத்தில், புதிய விஷயங்கள் குறித்து நீங்கள் நடைமுறை சாத்தியமாக யோசித்து, சரியான முடிவுகளை எடுக்கக் கூடும். உங்களது கடந்த கால நடவடிக்கைகள், நஷ்டங்கள் குறித்துக் கவலைப் பட வேண்டாம். ஏனெனின், உங்கள் சிந்தனைகளை புதிய முறையில் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. உங்கள் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் ஆற்றலையும் இது உங்களுக்கு அளிக்கக் கூடும். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும், நேர்மறை உணர்வுடன் செய்யுங்கள். தொழில் வாய்ப்புகள் மெதுவாகவே தோன்றலாம். எனவே நீங்கள் பொறுமையுடன் தொடர்ந்து முயற்சிப்பது அவசியம். அவ்வப்பொழுது, சில தைரியமான முடிவுகளை எடுப்பதும் அவசியம்.
துலாம் ராசி தொழில் வல்லுநர்கள்:
துலாம் ராசி தொழில் வல்லுநர்கள், முழு நம்பிக்கையுடன் இருப்பது அல்லது முழுவதுமாக நம்பிக்கையை இழந்து விடுவது, என்ற இரண்டு அதீத நிலைகளையும் தவிர்த்து, ஒரு சமமான அணுகுமுறையைக் கையாள்வது அவசியம். புதிய தொழில் அல்லது பெரிய திட்டங்கள் போன்றவற்றைத் தொடங்குவதற்கு, இது ஏற்ற காலமாக இருக்காது. தொழில் குறித்து, பிறருடன் பழகும் பொழுது, நாசூக்காக நடந்து கொள்ளவும். இது தேவையற்ற தகராறுகளைத் தவிர்க்க உதவும். மேலும், நல்ல வாய்ப்புகளை நீங்கள் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பதும், சாதகமற்ற நடவடிக்கைகளைத் தவிர்ப்பதும் அவசியம்.
துலாம் ராசி ஆரோக்கியம்:
உங்கள் உடல்நிலை குறித்து, நீங்கள் எந்தக் கவலையும் கொள்ளத் தேவை இருக்காது. ஆனால் மனக் கவலைகள் உங்களை வாட்டலாம். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தியானப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள். இதைத் தவறாமல் தினமும் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மை தரும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை
துலாம் ராசி மாணவர்கள்:
பாடங்களைப் படிப்பதற்கான சில பயனுள்ள வழிமுறைகளை, உங்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு இது சரியான நேரம் ஆகும். இந்தக் காலகட்டத்தில், பொதுவாக, நீங்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்பீர்கள். ஆனால் அதில் சில சிறு சிக்கல்கள் எழலாம். எனினும் அவற்றை நீங்கள் எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் செலவிடுங்கள். இது உங்கள் வழக்கமான வேலைகளுக்கு, வரவேற்கத்தக்க மாற்றாக அமையும். அதிகம் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். தவறாகப் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். இவை உங்கள் நற்பெயரைக் காப்பாற்ற உதவும்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1, 7, 10, 13, 17, 18, 24, 25, 27, 28
அசுப தினங்கள்: 3, 5, 9, 12, 19, 22, 29, 30
