AstroVed Menu
AstroVed
search
search

தனுசு நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Dhanusu Rasi Palan 2020

dateOctober 8, 2020

தனுசு ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களுக்கு, இது, வளர்ச்சிக்கான மாதமாக இருக்கும். உங்கள் உண்மையான அணுகுமுறையும், நடவடிக்கைகளும், உங்களுக்கு விரைவான பலன்களை அளிக்கும். இப்பொழுது வேலை, தொழில் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம்; அல்லது, புதிய வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதார ரீதியாகவும் நீங்கள் நல்ல நிலையில் இருப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடன் தொடர்பை மேம்படுத்திக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். இதன் மூலம் அவர்களிடம், உங்கள் மதிப்பு உயரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும் வாய்ப்புள்ளது. குழந்தைகளின் முன்னேற்றமும், உங்களுக்கு நிம்மதி அளிக்கலாம். சமுதாய நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் நீங்கள் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இது உங்களுக்கு மனத்திருப்தி அளிக்கும். ஆனால் சொத்து வாங்குவது போன்றவற்றில் சில பிரச்சனைகள் எழலாம் அல்லது தாமதம் ஆகலாம் என்பதால், இவற்றை ஒத்திப் போடுவது நல்லது. உங்கள் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும் எனலாம். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள். 

தனுசு ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

உங்கள் நேர்மறையான அணுகுமுறை, அன்புக்குரியவர்களுடன் உங்கள் உண்மையான உறவுகளைத் தொடர உதவும். உங்கள் மனப்பூர்வமான முயற்சிகளும், உங்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணையை அடைவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தரக் கூடும். திருமணத்திற்கான சில வரன்கள், இந்த நேரத்தில் கைகூடி வரலாம். எனவே, உங்களில் சிலருக்கு திருமணம் நடைபெறும் வாய்ப்பும் உள்ளது.   

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை

தனுசு ராசி நிதி:

இந்த நேரத்தில் சிறந்த பொருளாதார முன்னேற்றம் ஏற்படக்கூடும். இதனால் இந்தக் காலகட்டம், உங்களுக்கு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கக்கூடும். பணம் தொடர்பான உங்களது முந்தைய நடவடிக்கைகள் அனைத்தும், இப்பொழுது சாதகமான பலன் தரலாம். உங்கள் முதலீடுகளும், லாபம் தரலாம். உங்கள் நெருங்கிய நண்பர் யாராவது உங்களிடமிருந்து பண உதவி பெறலாம். இதற்காக அவர் முறையான உறுதிமொழியையும் அளித்து விட்டே, இந்த உதவியைப் பெறக்கூடும்.   

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை

தனுசு ராசி வேலை:

வேலை முன்னேற்றம் உங்களுக்கு ஒரு நல்ல துவக்கமாக அமையும். உயர் அதிகாரிகள் அளிக்கும் பணிகளை, நீங்கள் கடும் முயற்சி செய்து நிறைவேற்றுவீர்கள். உங்கள் நேர்மையான உழைப்பு, உங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும். இதனால் உங்களிடம் புதிய பொறுப்புகளும் வந்து சேரும். இது உங்களை மிகவும் மும்முரமாகச் செயலாற்ற வைக்கும். உங்களில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். இது நீங்கள் இப்பொழுது பார்க்கும் வேலையை விட சிறந்ததாக இருக்கக் கூடும். ஆனால் உங்கள் நற்பெயரை நீண்ட காலம் காப்பாற்றிக் கொள்வதற்கு, இது போன்று நீங்கள் விடாமல் பணியாற்றுவது அவசியம்.  

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சூரிய பகவான் பூஜை

தனுசு ராசி தொழில்:

உங்கள் தொழில் முயற்சிகளில் குறிப்படத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. உங்கள் நம்பகத்தன்மை கணிசமான வளர்ச்சியை ஈட்டித் தரக்கூடும். மேலும், தொழில் கூட்டளிகளும், உங்கள் நடவடிக்கைகள் அனைத்துக்கும், அவர்களது முழு ஆதரவை வழங்குவார்கள். எனினும், தொழில் திட்டங்களை முடிவு செய்வதற்காக, பயணங்களை மேற்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.   

தனுசு ராசி தொழில் வல்லுநர்கள்:

தனுசு ராசி தொழில் வல்லுநர்களின் ஒவ்வொரு செயலுக்கும், இப்பொழுது, சாதகமான எதிர்விளைவு அல்லது பலன் ஏற்படும் எனலாம். உயர் அதிகாரிகளும், உங்களை முழுமையாக நம்புவார்கள். அவர்களுடன் நீங்கள் பயணங்களையும் மேற்கொள்ள வேண்டி வரும். எனவே இதற்கும் நீங்கள் தயாராக இருக்கவும். உங்கள் பணிக்காக உங்களுக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கலாம். இத்துடன் கூட லாபகரமான பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. 

தனுசு ராசி ஆரோக்கியம்:

உடல்நிலை சிறப்பாக இருக்கும். ஆனால் உட்கொள்ள வேண்டிய மருந்துகள் எவையேனும் இருந்தால், அவற்றைத் தவறாமல் உட்கொள்ளவும். சத்துள்ள உணவையும் உண்ணவும். இது உடலுக்குத், தேவையான ஆதரவை அளிக்கும். இத்துடன் தியானமும் செய்யவும். இது உங்களது ஒருமுகப்பட்ட கவனத்தை அதிகரிக்க உதவும். 

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை     

தனுசு ராசி மாணவர்கள்:

குறித்த நேரத்தில், மாணவர்கள், தங்கள் படிப்பை முடித்து விடுவார்கள். சமுதாய அளவிலான தகவல் தொடர்புகளில், நீங்கள் பங்கு கொள்வது அவசியம். இது நீங்கள் அறிவு பூர்வமாகச் சிந்திப்பதை மேம்படுத்தி, உங்கள் பணிகளையும், மற்றவர்களையும் நன்றாகக் கையாள உதவும். ஆனால் முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோர்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்ளவும் வேண்டாம். 
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை           

சுப தினங்கள்: 4, 7, 9, 11, 13, 19, 22, 25, 29
அசுப தினங்கள்: 2, 8, 12, 21, 25, 28
 


banner

Leave a Reply