கன்னி நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Kanni Rasi Palan

கன்னி ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:
கன்னி ராசி அன்பர்களுக்கு இது நன்மைகள் விளைவிக்கும் மாதமாக இருக்கக் கூடும். உங்களில் சிலர் ஏதாவது சொத்து வாங்கக் கூடும். இதன் மூலம் உங்களது நீண்ட நாள் ஆசை நிறைவேறலாம். தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளையும், நீங்கள் நன்றாகத் தீர்த்து வைப்பீர்கள். வேலையில், நிர்வாகம் அளிக்கும் சவாலான பணிகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். இப்பொழுது நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் சரி, அதனால் உங்களுக்கு நன்மையே விளையும் எனலாம். வாழ்க்கைத் துணையுடன் ஆரோக்கியமான உறவையும் நீங்கள் அனுபவிக்கலாம். பொதுவாகவே, இப்பொழுது, சந்தோஷமும், சிரிப்பும் உங்களைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் சமுதாய வாழ்க்கையும் சுமுகமாக இருக்கும். உங்கள் உறவினர்களிடமிருந்தும் உங்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். ஆனால் தேவையற்ற சில செலவுகள் ஏற்படக்கூடும். இதை நீங்கள் கூர்மையாகக் கவனிப்பது அவசியம். உங்களுக்குத் தீவிரமான உடல்நிலைப் பிரச்சனைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. சிறிய கோளாறுகள் இருந்தாலும், அவை எளிதில் சரியாகிவிடும். ஆனால் சில நேரங்களில், உங்களில் சிலரைக் கவலைகள் வாட்டலாம். தினசரி தியானம் செய்வதன் மூலம், இந்த நிலையைக் கட்டுக்குள் வைக்கலாம். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
கன்னி ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
உங்கள் காதல் உறவை, நல்ல முறையில் நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பேச்சு, தகவல் தொடர்பு இவற்றின் பயனாக, உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இனிமையாக நேரம் கழிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்புக்குரிய இடத்தையும் பெறுவீர்கள். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும், பொதுவாக, மிகச் சரியான பலன் தரும். உங்களில் சிலர், உல்லாசக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை
கன்னி ராசி நிதி:
உங்கள் பொருளாதார நிலை நன்றாகவே காணப்படுகிறது. பணம் தொடர்பான நடவடிக்கைகள் பெரும்பாலும் உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும். முதலீடுகளிலிருந்து வரும் லாபம் உங்களுக்குத் திருப்தி தரும். சொத்து ஒன்று வாங்குவதும், உங்களுக்கு அதிக மனநிறைவு தரக்கூடும். எனினும், இவ்வாறு வாங்குவதற்கு முன், ஆவணங்களை முழுமையாகச் சரி பார்ப்பது அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரிடலாம். சில நேரங்களில், பண விவகாரங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் உங்களுக்குக் கவலை அளிக்கலாம் என்பதால், நன்கு யோசித்துச் செலவு செய்யவும்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: சூரிய பகவான் பூஜை
கன்னி ராசி வேலை:
பணியில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் காலமாக இது இருக்கும். நீங்கள் தேவைக்கேற்றவாறு, பல வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளையும் எளிதில் எட்டுவீர்கள். அலுவலகத்தில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் அளிக்கும் ஆலோசகர் என்ற நிலையைக் கூட, இப்பொழுது நீங்கள் எட்டக்கூடும். உங்களது சில பணிகளை, சக ஊழியர்களிடம் பகிர்ந்தளியுங்கள். உங்கள் சார்பில் அவர்கள் அவற்றைச் செய்து முடிப்பார்கள்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை
கன்னி ராசி தொழில்:
புதிய தொழில் முயற்சிகளை இப்பொழுது நீங்கள் செய்யத் தொடங்கலாம். உங்கள் என்ணங்களை, இந்த நேரத்தில் உங்களால் மனதாரச் செயலாக்கவும் முடியும். சுதந்திரமாகச் செயலாற்ற முயலுங்கள். இதன் மூலம் விரும்பும் முன்னேற்றத்தை நீங்கள் அடையலாம். தொழில் தொடர்பாக சிலர் பயணங்களை மேற்கொள்ளலாம். இவை உரிய பலன் தருவதாக அமையும். ஆனால், பலன் கிடைப்பதற்காக நீங்கள் பொறுமையுடன் காத்திருப்பது அவசியம். மேலும், தொழிலில் சிறு சலசலப்புகள் எழலாம் என்பதால், குழப்பங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
கன்னி ராசி தொழில் வல்லுநர்கள்:
கன்னி ராசி தொழில் வல்லுநர்களுக்கு நலம் தரும் நேரம் இது. உங்கள் சிறந்த செயலாற்றல், உங்களது உற்பத்தித் திறனை நன்கு உயர்த்தும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுடனும் நீங்கள் சுமுகமான உறவைப் பராமரிப்பீர்கள். உங்களது பணிக்காக, உங்களுக்குப் பாராட்டு கிடைக்கலாம். கூடுதல் பொறுப்புக்களும் உங்களுக்கு அளிக்கப்படலாம். மேலும், உங்களது விரைவான செயலாற்றல் காரணமாக, வேலை பளுவிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். சிலருக்கு, வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.
கன்னி ராசி ஆரோக்கியம்:
நீங்கள் பொதுவாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஆனால் சிலர் ஜீரணப் பிரச்சனைகளால் பாதிக்கப்படக் கூடும். இதற்கு முக்கிய காரணம், எண்ணெய் பதார்த்தங்கள் மர்றும் ‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகள் தான் என்பதால், இவற்றை உட்கொள்வதைத் தவிக்கவும். இதற்கு பதிலாக, சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவும். தவிர, தியானம் செய்வதும், மனதை ஒருமுகப்படுத்தி, வேலையின் மீது முழு கவனம் செலுத்த உதவும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை
கன்னி ராசி மாணவர்கள்:
மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறும் காலம் இது. ஆனால் படிப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். இதனால், தற்போதும் சரி, வருங்காலத்திலும் சரி, உங்களுக்கு எந்த நன்மையும் விளையாமல் போகலாம். உங்கள் பாடங்களைப் படித்து முடிப்பதற்கு, பொதுமான நேரம் செலவழியுங்கள். உங்களது நட்பு ரீதியான நடத்தை, உங்களை, மேலும் சிறந்த மனிதராக மாற்றும்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 5, 6, 7, 8, 12, 17, 25, 26, 30
அசுப தினங்கள்: 2, 4, 11, 13, 19, 22, 29
