சிம்மம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Simmam Rasi Palan

சிம்ம ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களே! இது உங்களுக்குப் பல வகையிலும் பயனுள்ள மாதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை இயல்பாகச் செல்லும். ஆனால் பொறுமையுடன் செயல்படுவது, குடும்பத்தினருடன் நல்லுறவு பராமரிக்க உதவும். புதிதாகத் திருமணமான தம்பதியினர் சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மணமான சில பெண்களும் கருத்தரிக்கக் கூடும். உங்கள் குழந்தைகளும் முன்னேற்றம் காண்பார்கள். இது உங்கள் மன பாரத்தை நீக்கி, மகிழ்ச்சி தரும். பொதுவாக, வாழ்க்கை கவலைகள் இல்லாமல் செல்லும். இது உங்களுக்கு மன அமைதி தரும். பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிப்பதற்கும் இது உகந்த நேரம் ஆகும். இது உங்கள் வேலை முன்னேற்றத்துக்கு உதவும். பிறருடன் உல்லாசமாகக் கூடி மகிழும் பல கூட்டங்களில் நீங்கள் கலந்து கொள்வீர்கள். இது உங்களுக்கு, ஆழ்ந்த சமுதாயத் தொடர்பை ஏற்படுத்தும். பருவ மாற்றங்கள் காரணமாக, உங்கள் உடல்நிலையில் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் உரிய கவனம் தேவை. இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
சிம்ம ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் போன்ற நளினமான விஷயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையும். சில காதல் உறவுகள் திருமணத்திலும் முடியக் கூடும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் சிலருக்கு, ஏற்ற வரன்கள் கிடைக்கவும் கூடும். ஆனால், உங்கள் துணையை நீங்கள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது அவசியம். உங்கள் சமுதாயத் தொடர்புகளும் வேகமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம், சிலர் தங்கள் அன்பான வாழ்க்கைத் துணையைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பொறுமையைக் கடைபிடித்து, நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகளின் மீது கவனம் செலுத்தவும். இதுவே இப்பொழுது உங்களுக்குச் சிறந்ததாக அமையும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
சிம்ம ராசி நிதி:
உங்களுக்கு இப்பொழுது நிதி ஆதாயங்கள் ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்த்த படி, உங்கள் வங்கி இருப்பும் உயரலாம். இதன் மூலம், நீங்கள் வாங்கியுள்ள கடன்களையும் நீங்கள் படிப்படியாகத் திரும்பச் செலுத்தத் துவங்கலாம். உங்களில் சிலர், தீவிரத் தேடலுக்குப் பின்னர், ஏதாவது சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. நிதி தொடர்பாக சரியாக திட்டமிடுவது என்பது தான், இப்பொழுது உங்கள் வெற்றிக்கான ரகசியமாக இருக்கும்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை
சிம்ம ராசி வேலை:
உங்கள் நேர்மறை எண்ணங்கள், வேலையில் ஒருமுகப்பட்ட கவனம் செலுத்த உதவும். இருப்பினும், வேலை முன்னேற்றம் மெதுவாக இருக்கக்கூடும். உங்கள் உற்பத்தித் திறனையும், மற்றவர்களுடன் பழகும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும், சக பணியாளர்களுடன் வாத விவாதங்களைத் தவிர்த்து, அவர்களுடன் சுமுகமாக இருக்க முயலவும். மிக முக்கியமாக பணிகள் குறித்து, ரகசியம் காக்கவும்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை
சிம்ம ராசி தொழில்:
இந்தக் காலகட்டம், உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருக்கும். உரிய பலன்களை அடைவதற்கு, என்னேரமும் நீங்கள், பொறுமையுடனும், சீராகவும் நடந்து கொள்வது நல்லது. கிரக மாற்றங்களின் காரணமாக, சில நேரங்களில் நீங்கள் பொறுமை இழக்கும் வாய்ப்புள்ளது. இது தொழில் நடவடிக்கைகளில் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
சிம்ம ராசி தொழில் வல்லுநர்கள்:
சிம்ம ராசி தொழில் வல்லுநர்களுக்கு நன்மை ஏற்படக்கூடும். வேலை கடுமையாக இருக்கும். ஆனால் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுடன் இணைந்து பணியாற்றுவது, பணிகளை உரிய நேரத்தில் முடிக்க உதவும். இப்பொழுது உங்களுக்குப் பண லாபங்களும் கிடைக்கக் கூடும். தவிர, அலுவலகத்தில் சுமுக உறவைப் பராமரிக்கவும். இது உங்கள் எதிர்பார்ப்புக்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள உதவும்.
சிம்ம ராசி ஆரோக்கியம்:
தேவையற்ற மன அழுத்தத்திற்கு, நீங்கள் ஆட்படக் கூடும். நடப்பது எதையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு, மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இது உங்களுக்குத் தொல்லை தரலாம். ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் வலிமையை மேம்படுத்த, உலர்ந்த பழங்கள், பருவகாலப் பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள். தேவையான அளவு உறக்கமும், உடல்நிலையை மேம்படுத்தும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை
சிம்ம ராசி மாணவர்கள்:
உங்கள் கல்வி முயற்சிகள், இயல்பாக நடைபெறும். பாடங்களை நன்கு புரிந்து கொள்வதற்காக, ஆசிரியர்களிடமிருந்து சரியான வழிமுறைகளைக் கற்றுக் கொள்வது நல்லது. மீதியுள்ள நேரத்தை, நண்பர்களுடன் இனிமையாகச் செலவிடுவது, வழக்கமான வேலையிலிருந்து விலக்களித்து, மன மகிழ்ச்சி தரும். பள்ளி, கல்லூரியில், மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுதல், தவறாகப் பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்கவும். இது நீங்கள் ஒரு நல்ல மனிதராக வளர உதவும்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 3, 8, 11, 18, 24, 28, 30
அசுப தினங்கள்: 11, 15, 22, 27, 29
