November Matha Kadagam Rasi Palan
கடக ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்கள், தங்கள் பணிகளை நிம்மதியாகச் செய்து முடிக்க உதவும், சாதகமான மாதம் இது எனலாம். வேலையில் உங்கள் கடமைகளை நீங்கள் நன்றாகவே நிறைவேற்றுவீர்கள். இது அலுவலகத்திலும், சமுதாயத்திலும் உங்கள் புகழை மேம்படுத்தும். உங்களது தீர்க்கமான நடவடிக்கைகள், உங்கள் உத்யோக வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும். குடும்பத்தினர் மற்றும் அண்டை அயலார் ஆகியவர்களுடன் உங்கள் உறவு, சுமுக நிலையை அடையும். நீங்கள் உங்கள் எண்ணங்களை முறையாகக் கட்டுப்பாட்டில் வைத்து, புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். இது உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும். புதிய சமுதாயத் தொடர்புகளும், அது தொடர்பான நடவடிக்கைகளும், உங்களது அங்கீகாரத்தை அதிகரித்து, எதிர்காலத் தேவைகளுக்குத் துணை புரியும். உங்கள் ஆரோக்கியமும், அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடையும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
கடக ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் விவகாரங்கள் சாதாரணமாக இருக்கும். நீங்கள் முன் முயற்சி எடுத்து, உங்கள் காதலை, அன்புக்குரியவரிடம் தெரியப்படுத்தி விடுங்கள். ஆனால் அதே நேரத்தில், அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்ப வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கைத் துணைவர் கொடுக்கும் சில வேலைகளை, நீங்கள் மறந்தோ, உதாசீனப்படுத்தியோ விடலாம். இந்த விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, முக்கிய முடிவை எடுப்பதற்கும் இது உரிய தருணம் ஆகும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை
கடக ராசி நிதி:
உங்கள் வருமானம் சராசரியாக இருக்கும், ஆனால் செலவுகள் அதைவிட அதிகமாக இருக்கக் கூடும். எனவே நிதிநிலை உங்களுக்குத் திருப்தி அளிக்காமல் போகலாம். இருப்பினும், ஆன்மீக விஷயங்களுக்காக நீங்கள் செலவு செய்யக்கூடும். உங்களில் சிலர், நண்பர்களிடமிருந்து வர வேண்டிய தொகையை, வசூலிக்கவும் கூடும்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை
கடக ராசி வேலை:
பணியில் மெதுவான முன்னேற்றம் ஏற்படக்கூடும். அதிலும் சில தடைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சில நேரங்களில், உங்கள் என்ணங்களே உங்களைத் தொந்தரவு செய்யலாம். இதன் காரணமாக, நீங்கள் வேலையில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகலாம். சக பணியாளர்களுடன், வீணான வாத விவாதங்களைத் தவிர்க்கவும். இதற்கு பதிலாக உற்பத்தியைப் பெருக்குவதில் கவனம் செலுத்தவும். தவிர வேகமாகப் பணியாற்றவும் முயலவும். இது வேலைகளை விரைவாக முடிக்க உதவும். வேலை நிமித்தம் நீங்கள் பயணம் செல்ல நேரிடலாம். எனவே, அதற்குத் தயாராக இருக்கவும்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
கடக ராசி தொழில்:
உங்கள் நடவடிக்கைகள், தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கக் கூடும். உங்கள் தொழில் முயற்சிகள் பலவற்றைக் குறித்து, நீங்கள் பொறுமை காப்பது அவசியம். இது, சவாலான தருணங்களை வெற்றிகரமாகச் சமாளிக்க உதவும். தவிர, நீங்கள் சுதந்திரமாகச் செயல்படவும் முயற்சிக்கவும். இது உங்கள் திறமைகளை மேம்படுத்தி, தொழில் முன்னேற்றத்திற்கு உதவும். இப்பொழுது நீங்கள், தொழில் தொடர்பான சிறு பயணங்கள் செல்லலாம். இவை லாபகரமாக இருக்கும்.
கடக ராசி தொழில் வல்லுநர்கள்:
கடக ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது, வரவேற்கத்தக்க காலமாக இருக்கும். இந்த நேரத்தில், முயற்சிகளுக்குப் பின் உங்களுக்குப் பலன் கிடைக்கும். ஆனால் உயர் அதிகாரிகள், உங்களால் செய்ய முடிவதை விட அதிகம் எதிர்பார்க்கக் கூடும். ஆனால், பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான உங்கள் புதிய எண்ணங்களும், அணுகுமுறையும் வெற்றிகரமாக அமையக் கூடும். எனவே இவை பாராட்டுதல்களையும் பெறக்கூடும். உங்கள் செயல் திட்டமும், நிறுவனத்தின் குறிக்கோள்களுக்கு ஆதரவாக அமையும்.
கடக ராசி ஆரோக்கியம்:
உங்கள் உடல்நிலை சரியாகவே இருக்கும். இருப்பினும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவது, மேலும் ஆரோக்கியமாக வாழ உதவும். பருவகாலப் பழங்களை உட்கொள்வது, உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும். சக்தி தரும் பானங்களைப் பருகுவதும், உங்களுக்கு வலிமை சேர்க்கும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை
கடக ராசி மாணவர்கள்:
உங்கள் விருப்பங்கள் நிறைவேறக் கூடும். ஆனால் ஆரம்பத்தில், நிலைமை சவாலாக இருக்கலாம் என்பதால், அதை நீங்கள் தன்னம்பிக்கையுடன் கையாள்வது அவசியம். கல்வியில் நீங்கள் விரும்பும் இடத்தை எட்ட, நீங்கள் கடின முயற்சி செய்ய வேண்டும். இது உங்கள் இலக்குகளை எட்டவும் துணை புரியும். சோம்பேரித்தனத்தை கண்டிப்பாகத் தவிர்க்கவும். இது சில நேரங்களில், தடைகளை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை உருவாக்கி, நீங்கள் அடையக்கூடிய பலன்களைத் தாமதப் படுத்தலாம். ஆனால், உங்கள் அன்பான நடத்தை, உடனடிச் செயல்பாடு போன்றவை, மேலும் நல்ல பலன்களை அளிக்கக் கூடும்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 2, 5, 8, 11, 13, 17, 20, 24, 29
அசுப தினங்கள்: 1, 4, 10, 12, 22, 28, 30






