மிதுனம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Mithunam Rasi Palan

மிதுன ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:
மிதுன ராசி அன்பர்களே! உங்களது பல விருப்பங்களை நிறைவேற்றும் பயனுள்ள மாதமாக இது இருக்கக் கூடும். பல நடவடிக்கைகளிலும் நீங்கள் முழுமையாக ஈடுபட்டிருப்பீர்கள். அதே சமயம், உங்கள் கடும் உழைப்பு, உங்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தரக்கூடும். ஆனால், இந்த நேரத்தில் நீங்கள் பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம் என்பதால், அதற்குத் தயாராக இருக்கவும். சிலர் அசையா சொத்து வாங்கும் வாய்ப்புள்ளது. இது உங்கள் முன்னேற்றத்தைக் குறிக்கும் எனலாம். உங்கள் பேச்சு, தகவல் தொடர்பு போன்றவற்றில் காணப்படும் வெளிப்படைத் தன்மை, உங்கள் செயல்களிலும் வெளிப்பட்டு, உங்களுக்கு நன்மை விளைவிக்கலாம். அண்டை அயலார்களும் சுமுகமாகப் பழகுவார்கள். உங்களுக்குத் தேவை ஏற்படும் பொழுது, உதவிகரமாகவும் இருப்பார்கள். உங்கள் சமுதாய வட்டத்தில், நீங்கள் சில சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம். சிலர், மன அமைதிக்காக, புனிதத் தலங்களுக்கும் செல்லலாம். இப்பொழுது உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு கவனித்துக் கொள்ளவும். குறிப்பாக, உங்கள் உணவு குறித்து, கவனமாக இருப்பது அவசியம். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
மிதுன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் விவகாரங்கள் உங்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும். நீங்கள் நெருங்கிப் பழகும் சிலர், உங்களிடம் அவர்களது காதலைத் தெரியப்படுத்துவார்கள். உங்கள் மனதிற்கு மிகவும் பிடித்தவரிடமிருந்து காதலுக்கான இப்படி ஒரு அழைப்பைப் பெறுவது, உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கலாம். இது தொடர்பாக, நீங்கள், நிச்சயமாக, உரிய அடுத்த நடவடிக்கை எடுக்கலாம். இதன் வழியாக, உங்களில் சிலர், தங்கள் தனி வாழ்க்கையில், முறையாக நிலைபெற முடியும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை
மிதுன ராசி நிதி:
பொருளாதார நிலை உங்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். முதலீடுகள் முலம், உங்களுக்கு ஆதாயம் வந்து சேரலாம். உங்கள் வங்கி இருப்புக்களும், கணிசமாக உயரலாம். அதே நேரம், சுப நிகழ்ச்சிகள், குடும்ப, சமுதாய நிகழ்ச்சிகள், தனிப்பட்ட தேவைகள் போன்றவற்றிற்காக, நீங்கள் பணம் செலவு செய்யக் கூடும்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: ராகு பகவான் பூஜை
மிதுன ராசி வேலை:
வேலையில் உங்களுக்குப் பாராட்டுதல்களும், நிதி ஆதாயங்களும் கிடைக்கக் கூடும். உயர் அதிகாரிகள், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் என இரு சாராருடனும் சுமுக உறவைப் பராமரிக்கவும். இது அலுவலகத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உயர் அதிகாரிகள், உங்களிடம், சில புதிய, சிறப்பான பொறுப்புகளை ஒப்படைக்கக் கூடும். இவை உங்களுக்கு சவாலான பணிகளாக இருக்கக் கூடும். உங்கள் செயல் திட்டம், உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தரும். அதே நேரம், உங்களது புதிய எண்ணங்கள், நீங்கள் வெற்றி பெற உதவும்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
மிதுன ராசி தொழில்:
இந்த நேரத்தில், சமுதாயத் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் முன்னுரிமை அளிப்பது நன்மை தரும். இது, உங்கள் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கக் கூடும். மேலும், உங்கள் இலக்குகளை எட்ட, நீங்கள் கடுமையாக உழைப்பதும் அவசியம். உங்கள் நிதிநிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு, சில வாய்ப்புகளும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், உணவில் எச்சரிக்கையாக இருக்கவும். இது, தொழிலில் நீங்கள் அதிக கவனம் செலுத்த உதவும்.
மிதுன ராசி தொழில் வல்லுநர்கள்:
மிதுன ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது முன்னேற்றமான காலமாக இருக்கக் கூடும். தேவைக்கேற்ப ஒரே நேரத்தில், நீங்கள், பல வேலைகளைச் செய்து முடிக்கக்கூடும். பணியிடத்தில் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து, நீங்கள் புகழ் பெறக்கூடும். உங்கள் எதிர்பார்ப்புகளையும் எளிதாகவே நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். உங்களது சில பணிகளையும், சக ஊழியர்களிடம் நீங்கள் ஒப்படைக்கக் கூடும். அவர்கள் இவற்றை, உங்கள் சார்பில் முறையாகச் செய்து முடிப்பார்கள். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள், உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரக் கூடும்.
மிதுன ராசி ஆரோக்கியம்:
உங்கள் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளவும். கால்சியம் குறைபாடு காரணமாக, சிலர், முட்டி வலியால் கஷ்டப்படலாம். வேறு சிலர், ஜீரணப் பிரச்சனைகளாலும் துன்பப்படலாம். தவிர, இந்த நேரத்தில் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை உங்களுக்கு மன அழுத்தம் தரக் கூடும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை
மிதுன ராசி மாணவர்கள்:
உங்கள் முயற்சி காரணமாக, தேர்வுகளில் உங்களுக்கு, எதிர்பார்த்த பலன் கிடைக்கலாம். உங்கள் பாடங்களை நீங்கள் முறையாகவும், நடைமுறையிலும் புறிந்து கொள்ளலாம். இது நீங்கள் விரும்பும் முன்னேற்றத்தை உங்களுக்கு அளிக்கக் கூடும். உலகில் தற்பொழுது நடைபெறும் சம்பவங்கள் குறித்து அறிந்து கொள்வதும், உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அறிவு பூர்வமான அணுகுமுறை, படிப்பில் உங்களுக்கு ஊக்கம் தரும். அதே நேரம், உங்கள் பரந்த மனப்பான்மை, விஷயங்களை எளிதில் புறிந்து கோள்ள உதவும்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 3, 5, 8, 11, 12, 15, 19, 24, 26, 29, 30
அசுப தினங்கள்: 2, 7, 10, 17, 22, 27, 28
