AstroVed Menu
AstroVed
search
search

ராகு கேது பெயர்ச்சி 2025

dateMay 9, 2025

வானியலின் படி, ராகுவும் கேதுவும் கிரகங்கள் அல்ல, மாறாக சூரியன் மற்றும் சந்திரன்  சந்திக்கும் சுற்றுப் பாதையை வெட்டும்  புள்ளிகள் ஆகும். ஜோதிடத்தில் அவை நிழல் கிரகங்கள் அல்லது சாயா கிரகங்கள்  என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிரகங்கள் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றன. இவை பின்னோக்கி நகரக் கூடிய தன்மை கொண்டவை. இந்த மே 18, 2025 அன்று மாலை 17:08 மணிக்கு மீன ராசியில் இருந்து சனியின் ஆட்சி வீடான கும்ப ராசிக்குள் ராகு பெயர்ச்சி ஆகிறார். கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசியில் கேது பெயர்ச்சி ஆகிறார்.

இந்த பெயர்ச்சி காலத்தில் ராகு மற்றும் கேது உங்கள் ராசிக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த பகுதிகளில் ராகு சாதகமான பலன்களைத் தருவார், எந்தெந்த விஷயங்களில் நீங்கள் போராடுவீர்கள்? என்று படித்து அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

ராகு பெயர்ச்சி பலன்

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் மேஷ ராசியினருக்கு,  ராகு உங்கள் ராசியில் இருந்து பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிப்பார். இது ராகுவிற்கு சாதகமான வீடாகும். எனவே நீங்கள் அதிக நன்மை பெறலாம். உங்கள் விருப்பங்கள் நிறைவேறலாம். உங்கள் சமூக தொடர்பு அல்லது நட்பு வட்டம் அதிகரிக்கலாம். நீங்கள் குடும்பத்தாருடன் இருப்பதை விட வெளியே அதிக நேரம் செலவிடலாம். உங்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறலாம்.  உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். பங்கு சந்தை விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் வருமானம் பெருகும். அதன் மூலம் உங்கள் நிதிநிலை மேம்படும்.

கேது பெயர்ச்சி பலன்

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் மேஷ ராசியினருக்கு கேது  உங்கள் ராசியில் இருந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்த வீடு அன்பு, கல்வி மற்றும் குழந்தைகளைக் குறிக்கும். எனவே இங்கு கேது சஞ்சரிப்பது மாணவர்களுக்கு நன்மை அளிக்கும். மற்றும் ஜோதிடம் ஆன்மிகம் போன்ற துறையினர் மேன்மை காணலாம். தந்திர-மந்திரத்திலும் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். காதலர்களுக்கு இடையே  அதிக தவறான புரிதல்கள் இருக்கலாம். நீங்கள் ஏமாற்றப்படலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள். இந்த நேரத்தில் குழந்தைகளைப் பற்றிய சில பிரச்சினைகள் எழலாம். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ரிஷபம்

ராகு பெயர்ச்சி பலன்

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் ரிஷப ராசியினருக்கு, ராகு உங்கள் ராசியில் இருந்து பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். பத்தாவது வீட்டில் ராகு இருப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்பட்டாலும், நீங்கள் வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பத்தில் ராகு இருந்தால், தொழில் மற்றும் வேலை சம்பந்தமான விஷயங்களில் பல மாற்றங்கள் ஏற்படலாம். சில சமயங்களில், தொழில் அல்லது வேலையில் முன்னேற்றம் ஏற்படலாம், சில சமயங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். ராகுவின் பலம் மற்றும் ஜாதகத்தில் இருக்கும் பிற கிரகங்களின் நிலைமைகளை பொறுத்து, பலன்கள் மாறுபடும். உங்கள் வேலையை மற்றவர்களிடம் ஒப்படைப்பதைத் தடுக்க வேண்டிய அவசியம் இருக்கும்; இல்லையெனில், பணியிடத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்களால் குடும்பத்திற்கென்று நேரம் ஒதுக்க இயலாமல்  போகலாம். இதனால்  உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கலாம்.

கேது பெயர்ச்சி பலன்

ரிஷப ராசியினருக்கு , கேது உங்கள் ராசியில் இருந்து  நான்காவது வீட்டில் சஞ்சரிப்பார். நீங்கள் சில  குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரும். அதன் காரணமாக வீட்டில் அமைதியின்மை காணப்படும்.  குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை .

மிதுனம்

ராகு பெயர்ச்சி பலன்

மிதுன ராசியினருக்கு ராகு உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிப்பார். சிலருக்கு திடீர் பணவரவு, பதவி உயர்வு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கலாம். சிலருக்கு எதிர்பாராத தொல்லைகளும் வரலாம். தந்தை, பெரியோர்களுடன் சண்டை, வாக்குவாதம் வரலாம். உங்கள் தந்தையின் உடல்நலத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் தொலை தூர பயணம் மேற்கொள்ள நேரலாம். அது ஆன்மீக மற்றும் புனித யாத்திரையாக இருக்கலாம். ஒரு சிலர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். ராகுவின் பெயர்ச்சியின் விளைவாக, நீங்கள் வேலையில் சில ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். நீங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றப்படலாம். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம்.

கேது பெயர்ச்சி பலன்

மிதுன ராசியினருக்கு, கேது உங்கள் ராசியில் இருந்து மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கும். பொதுவாக, கேது மூன்றாவது வீட்டின் வழியாக சஞ்சரிப்பது சாதகமானதாகக் கருதப்படுகிறது. மூன்றாம் வீட்டின் காரகமான தைரியம் மற்றும் துணிவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்கள் எழும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். மேலும் உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒரு சிலர் இந்த காலக்கட்டத்தில் சொத்து வாங்கலாம்.  

கடகம்

ராகு பெயர்ச்சி பலன்

கடக ராசியினருக்கு ராகு உங்கள் ராசியில் இருந்து எட்டாவது  வீட்டில் சஞ்சரிப்பார். கணவன் மனைவிக்கு இடையே சில பிரச்சினைகள் வரலாம். உங்களுக்கு திடீர் பணவரவு வரலாம். பிறருடைய சொத்தை நீங்கள் பெறலாம். வாழ்க்கைத் துணையின் தாய் உங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிடலாம். நீங்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.பங்கு வரத்தகத்தில் ஈடுபடுதல் கூடாது.  இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சில ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திக்கலாம். குறிப்பாக வயிறு சார்ந்த பிரச்சினைகள் வரலாம். வண்டி வாகனங்களை ஓட்டும் போது கவனம் தேவை. உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

கேது பெயர்ச்சி பலன்

கடக ராசியினருக்கு கேது, உங்கள் ராசியில் இருந்து இரண்டாவது வீட்டில் சஞ்சரிப்பார்.  இரண்டாவது வீடு உங்கள் தனம், வாக்கு  மற்றும் குடும்பத்தைக் குறிக்கும். இந்த வீட்டில் கேதுவின் பெயர்ச்சி இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். அதிக செலவுகள் காரணமாக பணத்தைச் சேமிக்க நீங்கள் சிரமப்படலாம், மேலும் உங்கள் குடும்பத்தைத் தவிர்க்க விரும்புவீர்கள். தற்போதைய சூழலை நீங்கள் கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

ராகு பெயர்ச்சி பலன்

சிம்ம  ராசியினருக்கு ராகு,  உங்கள் ராசியில் இருந்து ஏழாவது   வீட்டில் சஞ்சரிப்பார். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சில தவறான புரிந்துணர்வு எழலாம். வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் மூலம் அதனை சமாளிக்கலாம். உங்கள் உறவில் மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். இந்தக் காலக்கட்டத்தில் கூட்டுத் தொழிலை தவிர்க்க வேண்டும். உங்கள் நட்பு மற்றும் சகவாசத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  குறுக்கு வழியில் எதையும் அடைய முயலாதீர்கள். ​​நீங்கள் புதிய தொழில் திட்டங்களை தீட்டுவீர்கள். ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது மிக முக்கியம். இல்லையெனில், சிரமங்கள் எழும். ஒரு சிலருக்கு இடம் விட்டு இடம் செல்ல நேரிடும்.

கேது பெயர்ச்சி பலன்

சிம்ம ராசியினருக்கு கேது உங்கள் ராசியில் சஞ்சரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும். சிறிய ஆரோக்கிய பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உங்கள் மனதில் பற்றற்ற தன்மை இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை குறையும். தவறான புரிந்துணர்வு காணப்படும்.மனதில் ஆன்மீக நாட்டம் வளரும். தொழில் சுமாராக நடக்கும்.

கன்னி

ராகு பெயர்ச்சி பலன்

கன்னி  ராசியினருக்கு ராகு,  உங்கள் ராசியில் இருந்து ஆறாவது    வீட்டில் சஞ்சரிப்பார். இந்த இடம் சாதகமான இடமாக கருதப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் நன்மைகளை எதிர்பார்க்கலாம். உங்கள் பொருளாதார நிலை மேம்படும். கடந்த கால முதலீடுகள் மூலம் லாபம் காண்பீர்கள். நீங்கள் இது வரை சந்தித்து வந்த பிரச்சினைகள் குறையலாம். என்றாலும் பணியிடத்தில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். எதிரிகளால் சில சிக்கல்கள் ஏற்படலாம். தொழிலில் சில தடைகளை சந்திக்க நேரலாம். உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கேது பெயர்ச்சி பலன்

கன்னி ராசியினருக்கு, கேது உங்கள் ராசியில் இருந்து பன்னிரண்டாவது வீட்டில் சஞ்சரிப்பார்.  இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை, எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  உங்கள் செலவுகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளாக இருந்தாலும் அவை அவசியமான செலவுகளாகவும் இருக்கும். எனவே நீங்கள் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரலாம்.உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம்  எழக்கூடும், மேலும் தியானம், சாதனா மற்றும் பிற மன அமைதி தரும் பயிற்சிகளுக்கு நீங்கள் அதிக நேரம் ஒதுக்கலாம். உங்கள் வேலையில் உங்களுக்கு ஆர்வமின்மை இருக்கலாம். யாத்திரை செல்ல உங்களுக்கு வாய்ப்பு இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்

ராகு பெயர்ச்சி பலன்

துலாம் ராசியினருக்கு, ராகு,  உங்கள் ராசியில் இருந்து ஐந்தாம்  வீட்டில் சஞ்சரிப்பார். ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பது நேர்மறையான பலன்களைத் தரக்கூடும். பங்கு சந்தை மூலம் லாபம் கிடைக்கும். ஆனால் பந்தயம், சூதாட்டம், லாட்டரி   போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். 5 வது வீட்டில்  சாதகமான   ராகு  உங்கள் குழந்தைகளுடன் நல்ல ஒருங்கிணைப்பையும் உறவையும் கொண்டு வரலாம். நீங்கள் அவர்களுடன் ஒரு நல்ல புரிதலைப் பகிர்ந்து கொள்வீர்கள் மற்றும் அவர்களின் தேவைகளைக் கவனிப்பீர்கள். உங்கள் படைப்புத் திறன்கள் உங்கள் வழக்கமான வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.உங்கள் அறிவுத்திறன் வளரும். உங்கள் நினைவாற்றல் கூர்மையாக வளரும்.  வயிறு சார்ந்த பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம், எனவே உங்கள் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்துங்கள்.

கேது பெயர்ச்சி பலன்

துலாம் ராசியினருக்கு கேது உங்கள் ராசியில் இருந்து பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிப்பார். இது உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். என்றாலும் உறவு விஷயங்களில் குறிப்பாக காதலர்கள்  மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த கிரக நிலை  அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நீங்கள் உங்கள் ஆசைகளை மட்டுப்படுத்தி அவற்றை அடைவதில் கவனம் செலுத்துவீர்கள், மேலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.பணியிடச் சூழல் ஆதரவு அளிக்கும் வகையில் இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். உங்கள் மூத்த உடன்பிறப்புகளுடன் நீங்கள் சற்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

ராகு பெயர்ச்சி பலன்

விருச்சிக ராசியினருக்கு  ராகு, உங்கள் ராசியில் இருந்து நான்காவது வீட்டில் சஞ்சரிப்பார். இது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருத முடியாது, ஏனெனில் இந்த பெயர்ச்சியின் விளைவுகள் குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் பரஸ்பர நல்லிணக்கம் இல்லாமை மற்றும் அன்பின் உணர்வு குறைதல் ஏற்படலாம், இது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே தூரத்தை அதிகரிக்கக்கூடும். வீடு, சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் சில சிக்கல்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் வீடு வாங்குவது, விற்பது அல்லது சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளைச் சந்திக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் குறிப்பாக மார்பு சார்ந்த பிரச்சினைகளில் கவனம் தேவை.

கேது பெயர்ச்சி பலன்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, கேது உங்கள் ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். வீட்டில் பதற்றமும் மோதல்களும் ஏற்படும். நல்லிணக்கமின்மை இருக்கும். உங்கள் தந்தைக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம், இது உங்களை கவலையடையச் செய்யும். சொந்த தொழில் சிறப்பாக நடக்கும். பணியிடத்தில் அதிருப்திகரமான நிலை இருக்கும். உங்கள் வேலையை எச்சரிக்கையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பும் பதவி உயர்வு கிடைக்க தாமதம் ஆகலாம்.

தனுசு

ராகு பெயர்ச்சி பலன்

தனுசு ராசியினருக்கு,  ராகு உங்கள்  ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பார். மூன்றாம் வீட்டில் ராகு சாதகமான பலன்களை அளிப்பார்.எனவே  மூன்றாவது வீட்டில் இருக்கும் ராகு வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கும்.  குறுகிய பயணங்கள் இருக்கும். நட்புகள் வலுவடையும். அவர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் நண்பர்களால் சூழப்படுவீர்கள், அதாவது உங்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறவுகளை விட உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் உதவவும் விரும்புவீர்கள். நீங்கள் அவர்களுக்காக பணத்தையும் செலவிடுவீர்கள். உங்கள் வலிமையும் துணிச்சலும் வளரும். நீங்கள் ஆபத்துக்களை எடுக்க முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் ஆபத்துக்களை எடுப்பதன் மூலமும் நீங்கள் சம்பாதிக்கலாம். உங்கள் தகவல் தொடர்புத் திறன் மேம்படும். இது வேலையில் உங்களுக்கு பயனளிக்கும். உங்கள் சக ஊழியர்களில் சிலர் உங்களுக்கு தவறான புரிதல்களை ஏற்படுத்தலாம்.

கேது பெயர்ச்சி பலன்

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, கேது கிரகம் அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீகத்தைக் குறிக்கும் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பார்.பணியிடத்தில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரும். ஒரு சிலருக்கு இட மாற்றம் இருக்கலாம். இந்த காலகட்டம் ஆன்மீக  வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வர உங்களுக்கு வாய்ப்பளிக்கும். நீங்கள் நீண்ட யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். சாதனா, தியானம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு தனிமை உணர்வு இருக்கலாம்.

மகரம்

ராகு பெயர்ச்சி பலன்

மகர  ராசியினருக்கு ராகு,  உங்கள் ராசியில் இருந்து இரண்டாம்    வீட்டில் சஞ்சரிப்பார். இது தன ஸ்தானம் மற்றும் வாக்கு ஸ்தானம் ஆகும். குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.சொத்துக்கள், பண விஷயங்களில் பிரச்சனைகள் வரலாம்.பணம் விரயமாகும், எதிர்பாராத செலவுகள் வரலாம்.பண இழப்பு, தொழில் நஷ்டம் ஏற்படலாம்.உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. ​​உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனமாக இருக்க  வேண்டும். மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ஜாதகத்தில்  சாதகமான நிலையில் ராகு இருந்தால் நீங்கள் தடைகளை உடைத்து முன்னேறலாம். புதிதாக தொழில் தொடங்கலாம். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். சிறந்த பேச்சுத்திறன் வளரும்.

கேது பெயர்ச்சி பலன்

கேது உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிப்பார். எட்டாவது வீடு மறைமுகங்கள்,மர்மம் மற்றும் அமானுஷ்யங்களை குறிக்கும். உங்கள் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் ஜோதிடம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தலாம். இந்த நேரத்தில், நீங்கள் பண விஷயங்களில் எதிர்பாராத நன்மைகளைப் பெறலாம். அதே சமயத்தில்  மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல்  ஏற்படலாம். இந்த கேது சஞ்சாரத்தின்  போது, ​​நீங்கள் பித்தம் தொடர்பான பிரச்சினைகளை அனுபவிக்கலாம். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள்.

கும்பம்

ராகு பெயர்ச்சி பலன்

கும்ப ராசியினருக்கு ராகு,  உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பார். இது உங்கள் சிந்தனை மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களில் குறிப்பாக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு, பயம், குழப்பம், அதிருப்தி போன்ற உணர்வுகளைத் தரலாம். அதன் காரணமாக உங்கள் முடிவெடுக்கும் திறன்களும் மாறும். நீங்கள் விரைந்து யோசிக்கலாம் அவசர முடிவெடுப்பதால் அது பின்னர் தவறாக மாறக்கூடும்.உங்கள் பணயில்  பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிறரை நம்பி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். சொந்தமாக யோசித்து செயல்படுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மீது அக்கறை செலுத்துங்கள்.

கேது பெயர்ச்சி பலன்

கும்ப ராசிக்காரர்களுக்கு, கேதுவின் இந்த பெயர்ச்சி ஏழாவது வீட்டில் நிகழப் போகிறது, இது  கூட்டாண்மை மற்றும் திருமணத்தைக் குறிக்கும்  வீடாகும். இந்த பெயர்ச்சி உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள், பதட்டங்கள், மோதல்கள் மற்றும் பரஸ்பர ஈகோ பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இந்தக் காலக்கட்டம் தொழிலுக்கு குறிப்பாக கூட்டுத் தொழிலுக்கு சாதகமாக இல்லை. தொழில் சார்ந்த முடிவெடுக்க நிபுணர்களின் ஆலோசனை மேற்கொள்வது நல்லது.

மீனம்

ராகு பெயர்ச்சி பலன்

மீன ராசியினருக்கு ராகு, உங்கள் ராசியில் இருந்து பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் மூலம் நீங்கள் கலவையான பலன்களை அனுபவிக்கலாம். நீங்கள் ஆன்மீக காரியங்களுக்கு பணத்தை செலவு செய்யலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களை விட்டு விலகி இருக்க நேரலாம். இந்த காலக்கட்டத்தில்  நீங்கள் வெளிநாடு செல்ல நேரலாம். நீங்கள் தொழிலில் மேன்மை அடையலாம்.  நீங்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரலாம். திடீர் செலவுகள் அதிகரிக்கலாம்.

கேது பெயர்ச்சி பலன்

மீன ராசியினருக்கு கேது, உங்கள் ராசியில் இருந்து ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பார். கேது ஆறில் நன்மை அளிக்கும் என்றாலும் சில பாதக விளைவுகளையும்  நீங்கள் சந்திக்க நேரும். ,ஆறாம் வீடு என்பது நோய், கடன், எதிரி, வழக்கு போன்றவற்றை குறிக்கும் இடமாகும். கேது ஆறாம் வீட்டில் இருக்கும்போது, சிலருக்கு கடன், நோய், எதிரிகளால் தொல்லை போன்ற பிரச்சினைகள் வரலாம். அதே சமயம், சிலருக்கு தொழில் முன்னேற்றம், வழக்கு சாதகமாக முடிவது  போன்ற பலன்கள் கிடைக்கும்.உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் மற்றும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வரவை விட செலவு  அதிகமாக இருக்கும்.


banner

Leave a Reply