துலாம் ராசி - பொதுப்பலன்கள் கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் முழுவதுமாக முரண்பாடு மற்றும் பொருத்தமற்ற காலமாக இருந்ததற்குப் பின் இந்த 2019 ஆண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் புத்துணர்ச்சியாக உணருவீர்கள் வாழ்க்கையின் எல்லா முக்கியமான செயல்களுக்கும் தெய்வீக அருள் கிடைக்கும். முக்கியமான பணிகளைச் செய்வதில் நீங்கள் பரபரப்பாக இருப்பீர்கள். நீங்கள் இப்போது ஒரு அனுபவமிக்க பிரச்சாரகராக மாறி இருப்பீர்கள். மேலும் மற்றவர்களை விட வாழ்க்கையின் நுணுக்கங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். உங்களில் சிலர் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் தற்போது உங்களுடைய சில முக்கிய முடிவுகளை நீங்களே எடுப்பதற்கு தயாராகி விட்டிருப்பீர்கள். ஏதோ ஒரு கால கட்டத்தில் வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும். அது இந்த 2019ம் ஆண்டாக உங்களுக்கு இருக்கும். உங்கள் வழியில் எதிர்படும் அனைத்தையும் செய்வதற்கு இப்பொழுது நீங்கள் முழுமையாக தயாராகியிருப்பீர்கள். எந்த தடையும் இல்லாமல் கூர்ந்த அறிவுடன் விரைந்து செயல்படுங்கள்.
துலாம் ராசி - வேலை பணியைப் பொறுத்தவரை இந்த ஆண்டு முக்கியமான திருப்புமுனையை உங்களுக்கு வழங்கலாம். கடந்த நாட்களில் நிச்சயமற்ற தன்மைகளால் பைத்தியம் பிடித்தது போல் இருந்த உங்கள் நிலை இனி மாறிவிடும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் உறுதியாகவும் நிலையாகவும் இருப்பீர்கள். வெகுமதிகள் மற்றும் அங்கீகாரங்கள் உங்களுடைய வேலைக்கு வந்து சேரும். பணியில் முக்கியமான சூழ்நிலைகளை கையாளக் கடந்த கால அனுபவத்தை நீங்கள் பயன்படுத்துவீர்கள். உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் நல்லுறவு பேணுங்கள். கடந்த காலத்தில் இருந்ததைப் போன்று உங்கள் பணி அல்லது பணியிடத்தில் மிகவும் மன அழுத்தம் தரும் வகையில் இராது. நீங்கள் அலுவலகத்தில் ஆசுவாசத்துடன் இருக்க இயலும். காலவரை இலக்குகள் குறித்த தொல்லைகள் வரவிருக்கும் நாட்களில் காணப்படாது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பண லாபத்தைச் சம்பாதிப்பீர்கள்.
உங்கள் முயற்சிகளில் நல்ல பலன்களைப் பெற சுதர்சன ஹோமம்
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply