x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2019 – சிம்மம் : Simha Rasi 2019 (Leo)

சிம்ம ராசி – பொதுப்பலன்கள்

இந்த 2019 ஆம் ஆண்டு உங்கள் எதிர்காலத்திற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்கு உகந்த ஆண்டாக இருக்கும். உங்கள் அனைத்துத் துயரங்களும் முடிவுக்கு வரும். ஒன்றன்பின் ஒன்றாக உங்கள் இலக்குகளை அடைவதற்கு தயாராக இருங்கள். உங்களுடைய எழுச்சி தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் சிறியளவில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உறவினர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படலாம். திடீர் லாபங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளால் கடுமையான சூழ்நிலைகளைச் சமாளித்து நம்மால் முடியும் என்ற உறுதியோடு செயல்படுவீர்கள்

New Year Simha Rasi Palangal 2019 Tamil

சிம்ம ராசி – தொழில்

இந்த ஆண்டு உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். இருண்ட மேகங்கள் போல் இருந்த நிச்சயமற்ற தன்மை விரைவில் விலகிப் போகும். உங்கள் பணியிடத்தில் தன்னம்பிக்கையுடன் செயலப்டுவீர்கள். தொழில் செய்பவர்கள் லாபத்தை அனுபவிப்பார்கள். இந்த ஆண்டு கூட்டுத்தொழிலை சீரமைக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்களைத் தொடங்குவீர்கள். புதிய மனிதர்களிடம் பரிவர்த்தனைகள் செய்யும் போது கவனத்தோடு இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கம் சிறப்பாகத் தோன்றுகிறது. எனினும் ஏப்ரல் மாதத்தில் கவனக் குறைவு ஏற்படலாம். பின்னர் அதிலிருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். உங்கள் குறிக்கோள்களை அடைய முடியாமல் போகும் போது உங்களிடம் நீங்களே கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய மனோ திடத்தால் தடைகள் மற்றும் சோதனை காலங்களைக் கடப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் இந்த ஆண்டின் இரண்டாவது பகுதியில் எதிர்பார்க்கலாம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் மிகவும் கவனத்தோடும் புத்திசாலித்தனத்தோடும் இருக்க வேண்டி மாதங்களாகும்.

எதிரிகளை வென்று முன்னேற்றம் அடைய ஹனுமன் ஹோமம்


சிம்ம ராசி – நிதி நிலைமை

இந்த ஆண்டு, உங்கள் நிதி நிலைமையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ராகு கிரக நிலையின் காரணத்தால் மார்ச் 2019க்கு பிறகு நிதி மற்றும் பணத்தை கையாளும் விஷயங்களில் உங்கள் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் சவாரி போன்று பெரிய சவாலாக இருக்கும். மார்ச் 2019 க்குப் பின்னர் கடன்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தல், பங்குகள் மற்றும் திடீர் லாபங்கள் தரும் பகுதிகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தரும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். 2019 மே முதல் 2019 அக்டோபர் வரை உங்கள் குடும்பத்தின் நலனுக்காவும் நெருங்கிய நண்பர்களுக்காகவும் செலவு செய்ய நீங்கள் ஆட்படுத்தப்படுவீர்கள் . உங்களில் சிலர் கோவிலின் சீரமைப்பு போன்ற ஆன்மீக தொடர்புடைய வேலைகளில் ஈடுபடலாம். அதற்கு நீங்கள் கணிசமான அளவு பணத்தை செலவிடுவீர்கள். நீங்கள் செலவழித்த பணம் உங்கள் குடும்பத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு ஆசீர்வாதமாக விளங்கும்.

நிதி மேம்பாட்டிற்கு லட்சுமி குபேர ஹோமம்

சிம்ம ராசி – காதல் மற்றும் உறவுநிலை

திருமணமானவர்களுக்கு இந்த 2019 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். காதலை மறைத்து வைத்திருந்தவர்களின் காதல் வெளியுலகுக்கு தெரிய வரும். நீங்கள் சமீபத்தில் உங்கள் உறவை மாற்றியிருந்தால், உங்கள் பந்தத்தில் ஒரு மந்தநிலை ஏற்படும். வலுவான இணைப்பு நீடிக்கும். வலுவிழந்த உறவு சற்றே ஆட்டம் காணும். இயற்கையாகவே நீங்கள் போராடுபவராக இருப்பதால் உங்களை நீங்கள் தற்காத்துக்கொள்ள முடியும். எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். அவசர முடிவுகள் பிற்காலத்தில் தொந்தரவுகளைத் தரலாம். உங்கள் உறவில் நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்.

உறவு நிலை மேம்பட லட்சுமி நாராயண ஹோமம்

சிம்ம ராசி – ஆரோக்கியம்

நீங்கள் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சினைகளோடு இருந்தால் இந்த ஆண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கு இது உகந்த நேரம். தொடைகளில் அசௌகரியமோ அல்லது வலியோ ஏற்பட்டால் கவனமாக இருங்கள். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இடுப்பு பகுதி பற்றி ஜாக்கிரதையாக இருங்கள். யோகா பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுடன் இணைந்திருங்கள். இது ஒரு வழியில் உங்கள் உயர் ரத்த அழுத்தத்தைப் போக்கும். உங்கள் ஆரோக்கிய பிரச்சினைகளை மறக்கச் செய்யும். மருத்துவமனைக்கு நீங்கள் செல்வது படிப்படியாகக் குறையும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

உடல் நலம் மற்றும் மன நலம் மேம்பட காயத்ரி யந்திரம்

சிம்ம ராசி – மாணவர்கள்

நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு நீங்கள் தீவிரமாக படிப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் எளிதாக கவனச் சிதறலுக்கு ஆளாவீர்கள். மேல்நிலை வகுப்புகளில் இருப்போர் மற்றும் பட்டதாரிகளாக இருப்பவர்கள் தங்கள் படிப்பைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்க வேண்டும். இது அவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். பருவமுறை தேர்வு அல்லது கல்வியாண்டின் இறுதியில் பாடங்களின் முக்கிய பகுதிகளை மனப்பாடம் செய்வதை கடினமாக உணருவீர்கள். அதனால் பருவமுறை தேர்வு மற்றும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நன்றாகப் படியுங்கள்.

கவனச் சிதறல் ஏற்படாமல் தேர்வுகளில் வெற்றி பெற கணேச ஹோமம்

சாதகமான மாதங்கள்: ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர்
பாதகமான மாதங்கள்: பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர்

Leave a Reply