x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2019 – மிதுனம் : Mithuna Rasi 2019 (Gemini)

மிதுன ராசி – பொதுப்பலன்கள்

இந்த ஆண்டு நீங்கள் ஒரு ரோலர் கோஸ்டரில் சவாரி செய்வது போல் இருக்கும். நீங்கள் தைரியமாக இருப்பீர்கள். புத்துணர்வோடு செயல்படுவீர்கள்.சவாலான சூழல்களை நன்கு கையாள்வீர்கள். சில நேரங்களில் நீங்கள் மந்தமாக இருப்பீர்கள். நிமிர்ந்து எழுங்கள். விழிப்புணர்வு மற்றும் புத்திசாலித்தனத்துடன் சூழ்நிலைகளைக் கையாள்வதில் தான் உங்கள் திறமை அடங்கியுள்ளது. நீங்கள் திறமைசாலியாக விளங்குவீர்கள். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆனால், ஏதோ ஓரிடத்தில் நீங்கள் சமூகத்தில் இருந்து வெட்கப்பட்டு ஒதுங்கி இருப்பீர்கள். இந்த ஆண்டில் நீண்ட நிலுவையிலுள்ள திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நீங்கள் சோர்வாக உணரும் போது அதிலிருந்து மீண்டு வருவதற்குச் சிறிது நேரம் ஆகலாம். இந்த ஆண்டு ஒரு புத்திசாலி எதிராளியுடன் போட்டி போடும் படி இருக்கும். மகிழ்ச்சி தரும் விரும்பிய இடங்களுக்கு செல்வதை தவிர்த்திடுங்கள். குறிப்பாக அதிக மக்கள் கூடும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது.

Mithuna Rasi Palan 2019

மிதுன ராசி – அன்பு மற்றும் உறவுநிலை

இந்த ஆண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பார்கள். இது உங்கள் பொறுப்பை மேலும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் வெளியிடங்களுக்கு பயணம் செல்ல திட்டமிடலாம். ஆரம்பத்தில், நீங்கள் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பின்னர், நீங்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் தாயை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் கழுத்து, தோள்பட்டை, அல்லது அடிவயிறு தொடர்பான சில உடல்நல பிரச்சினைகளை உங்கள் தாய் எதிர்கொள்ள நேரிடலாம். உங்கள் மூத்த சகோதரர் உங்களுக்கு கை கொடுத்து உதவுவார். இளைய உடன் பிறப்புகளுடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். சிறந்த முறையில் கலந்து ஆலோசிப்பதால் இந்தப் பிரச்சினை தீரும். உங்களது வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கத் துணையாக இருப்பார். அவர் / அவள் உங்களுடைய நடவடிக்கைகளை பக்கத்தில் இருந்து கண்காணிப்பார். நிறையப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதிலும் நீங்கள் வீட்டில் நிம்மதியை அடைவீர்கள். வீட்டில் இருக்கும் மூத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள். நம்பிக்கைகுரியவராக இருக்க முயற்சி செய்யுங்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக் கணேச ஹோமம்

மிதுன ராசி – நிதி நிலைமை

இந்த ஆண்டு, உங்கள் நிதிநிலைமையில் பற்றாக்குறை இருக்காது. வீட்டிலும் வெளியிலும் உங்களுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களுக்கு பாசத்தோடு பணத்தை செலவீடுவிர்கள். நீங்கள் இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் கையை விட்டு அதிக அளவில் பணம் செலவாகும்.. அவ்வப்போது பணம் கிடைத்தாலும் ஆக்கப்பூர்வமான காரணங்களுக்குச் செலவழிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவிடப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. சில பேர் உங்களைப் புகழ்ந்து பேசி உங்களிடமிருந்து பணம் பெற உங்களை கவர முயற்சி செய்வார்கள். உங்களுடைய கோபம் எரிச்சல், பொறாமை மற்றும் அகங்காரத்தால் பணத்தை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அனைத்து உணர்ச்சிப்பூர்வமான அம்சங்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.

புத்திசாலித்தனமாகச் சிந்தித்து விழிப்புடன் செலவிடுங்கள். மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் உங்களின் பிற அத்தியாவசிய உடைமைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பாதுகாப்பது சிறந்தது. உங்கள் பெயரில் வேறு யாரையும் கடன் வாங்க அனுமதிக்காதீர்கள். யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு யாருக்கும் வழங்காதீர்கள். முக்கியமான பரிவர்த்தனைகள் செய்வதற்கு மே மற்றும் ஜுலை மாதங்கள் சாதகமாக உள்ளது. முதலீடு செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டு இருந்தால் அத்திட்டங்களை மார்ச் மாதத்தின் மத்தியில் செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு தள்ளிப்போடுங்கள். மொத்தத்தில் இந்த வருடம் எதிர்காலத்தில் லாபங்களைப் பெற பண விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

செல்வச் செழிப்பு மேம்பட லஷ்மி ஹோமம்

மிதுன ராசி – வேலை

உங்களுடைய பணியிடங்களில் உங்களது முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் சலுகைகள், பதவி உயர்வு மற்றும் உங்கள் தரத்தில் மேம்பாடு ஏற்படலாம். உங்களில் சிலர் கண்டிப்பான நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் பதவி உயர்வு பெறலாம். அந்த மாற்றங்களை நீங்கள் விரும்பாவிட்டாலும், நீங்கள் உங்களுக்கு அளிக்கப்படும் வருமானத்தில் திருப்தி அடைவீர்கள். உங்கள் தொழிலில் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு இருங்கள். உங்கள் மேல் அதிகாரிகளையோ அல்லது சக ஊழியர்களையோ எதிர்க்க வேண்டாம். உங்கள் அறிவுரைகள் ஊழியர்கள் மற்றும் அலுவலகத்தின் வளர்ச்சிக்காகக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஆண்டு அலுவலகத்திலும் தொழிலிலும் அதிக பணிச் சுமைகள் காணப்படும். நீங்கள் ஒரே இடத்தில் உட்காரத் திட்டமிட்டு இருந்தால் எந்த ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும் இருக்காது. அதற்குப் பதிலாக வேறு இடங்களுக்குச் செல்லுங்கள். இது உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாகவும் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தையும் தரும். சில சுவாரஸ்யமான காரியங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அதைச் செயல்படுத்தும்போது, ​​அது வெற்றிகரமாக இருக்கும். உங்கள் குழுவையும் உங்கள் கீழ் பணிபுரிபவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். நீங்கள் ஒரு புதிய வரவாகவோ அல்லது ஒரு குழுவில் கீழ் நிலையில் பணிபுரிபவராகவே இருந்தால் நேரம் தவறாமையை கடைப்பிடித்து உங்கள் கடமைகளை சரியான நேரத்தில் செயல்படுத்துங்கள்.

தொழில் வளர்ச்சி மேம்பட கால பைரவர் ஹோமம்

மிதுன ராசி – மாணவர்கள்

கல்வியில் உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்படலாம். கல்வியில் கவனம் செலுத்துங்கள். சிறப்பான மதிப்பெண்களைப் பெற கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு அக்கறையோடு படிப்பது நல்லது. உங்கள் அனைத்து முயற்சிகளும் எப்பொழுதுமே வீண் ஆகாது. நம்பிக்கையோடு இருங்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சிறப்பானதொரு சூழலை ஏற்படுத்தித் தர கோரப்படுகிறார்கள். இது குழந்தைகளின் மன நிலையை மாற்றியமைத்துப் படிப்பில் தீவிரமாக ஈடுபட உதவி செய்யும். கல்லூரி மாணவர்கள் சிறப்பு படிப்புகளில் தீவிரமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய உண்மையான முயற்சிகள் நல்ல பாராட்டுகளை பெற்றுத்தரும். முதுகலை அல்லது ஒரு குறிப்பிட்ட பாடப் பகுதியில் ஆராய்ச்சி செய்பவராக நீங்கள் இருந்தால் உங்களுடைய ஆராய்ச்சியை முழு திருப்தியோடு முடிப்பீர்கள். கலையில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் துறையில் நிபுணத்துவம் பெற இது மிகச்சிறந்த நேரமாகும். நீங்கள் ஒரு நல்ல ஆசிரியரை அல்லது ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வீர்கள். அவரால் சிறந்த அறிவைப் பெறுவீர்கள்.

கல்வியில் வெற்றிக்கு சரஸ்வதி ஹோமம்

மிதுன ராசி – ஆரோக்கியம்

உங்கள் உடல்நிலை இந்த ஆண்டு நன்றாக இருக்கும். அதிக எடை, முழங்கால் வலி மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான சீர்குலைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உடலை நன்கு பராமரிப்பதற்கும் உடல் ரீதியான சிக்கல்களில் இருந்து வெளியே வரவும் உடற் பயிற்சி மையங்களில் இணைந்து உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சரீர உழைப்பு மேற்கொள்ளாதவர்கள் உடற்பயிற்சி செய்து தங்களை மீட்டுக்கொள்ள உகந்த நேரம். சமீபத்தில் உங்கள் உடல் எடை படிப்படியாக அதிகரித்து இருப்பதை நீங்கள் கவனித்திருந்தால் உடனடியாக உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள். இதனால் பின் விளைவுகளைத் தவிர்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலை அதிகம் வருத்திக்கொள்ள வேண்டாம். உடல்நலத்திற்காகச் செலவழிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் இது முக்கியமான நேரமாகும்.

நல்ல ஆரோக்கியத்தைப் பெற கணேச ஹோமம்

சாதகமான மாதங்கள்: பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், செப்டம்பர், டிசம்பர்
பாதகமான மாதங்கள்: ஜனவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர்

Leave a Reply