
https://www.youtube.com/embed/TlvB1gBh5XA
காதல் / உறவுகள்
மீன ராசி (Meena Rasi) காதலர்களுக்கு இது ஏற்ற தருணம் கிடையாது. காதலுக்காக உங்களை இழக்காதீர்கள். உணர்ச்சி வசப்பட்டு பிரச்சினைக்கு ஆளாகாதீர்கள். அமைதியாக இருந்து அறிவுப்பூர்வமாக தீர்வு காணுங்கள். கூட இருப்பவர்களே குழி பறிக்கலாம். பிரச்சினைகளுக்கான உண்மையான காரணத்தை அடையாளம் காணுங்கள்.
கணவன் மனைவிக்குள் வாக்கு வாதம் ஏற்படும். கடந்த காலத்தை கிளறாதீர்கள். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை மேற்கொள்வதன் மூலம் அமைதி கிடைக்கும். மற்றவர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேளுங்கள் .இந்த ஆண்டு நீங்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள் . அதனால் உங்களின் இரக்க குணம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தையிலும் செயலிலும் கட்டுக்கோப்புடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒருவருக்கொருவர் பரிசுகள் தந்து ஆச்சரியப் படுத்தி அன்பை பரிமாறிக் கொள்வீர்கள்.
நிதி நிலைமை
மீன ராசி (Meena Rasi) நேயர்களே நிதி நிலையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் சில சவால்களைச் சந்திக்க நேரிடும். நீங்கள் குடும்பத்திற்கு, மருத்துவ செலவிற்கு, குழந்தைகள் படிப்பிற்கு என செலவுகள் செய்ய நேரிடும். நற்காரியங்கள் மற்றும் தான தருமங்களுக்கெனவும் செலவு செய்வீர்கள். முதலீடுகள் செய்யும் போது கவனமாக செய்யவும். இந்த ஆண்டு முதலீட்டிற்கு சரியான நேரம் அல்ல. பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கலாம். பொழுதுபோக்குகள், இனிய பயணங்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான கூடுதல் செலவுகள் உங்கள் வங்கி இருப்பை கரைக்கலாம். சிலர் கடன் வாங்க நேரிடலாம். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிப்பார்கள். நிதி பற்றாக்குறையை தவிர்க்க பணத்தை கையாளுவதில் மிகவும் கவனமாக இருங்கள்.
மாணவர்கள்
மீன ராசி (Meena Rasi) மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படித்தால் தான் கல்வியில் வெற்றி பெற முடியும். நீங்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினம். கிடைக்கும் கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். நண்பர்களுடன் நல்லுறவு காணப்படும். உங்களில் சிலர் தீய பழக்கத்திற்கு ஆளாக நேரலாம். அதனால் உங்கள் படிப்பு பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு புதிய விஷயங்கள் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். வெளி நாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது சாத்தியமாகும். பெற்றோரின் ஆசி பெறுங்கள்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுப மற்றும் அசுப பலன்கள் இரண்டும் சேர்ந்தே காணப்படும்.கண்கள், வாய் புண்கள் அல்லது பற்கள் மற்றும் ஈறுகளில் வியாதிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. உணவில் கவனமாக இருங்கள். உணவு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தையின் உடல் நிலை சற்று கவலை தரும். உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கான மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு முறையையும் உடற்பயிற்சியையும் அவசியம் பின்பற்றுங்கள். மனதை அமைதியாக வைத்திருப்பதன் மூலம் பதட்டத்தைக் குறைக்கலாம். உங்களுக்கு தியானமும் ஓய்வும் அவசியம் தேவை.
ஓம் ஷம் சநேஸ்வராய நமஹஎன்ற சனி மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும். அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை அனுகூலமற்ற மாதங்கள் : ஆகஸ்ட் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், மற்றும் டிசம்பர்
Leave a Reply