x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2018 – கும்பம் : Kumba Rasi 2018 (Aquarius)

பொதுப்பலன்கள்

கும்ப ராசி (Kumba Rasi) அன்பர்களே ! மொத்தத்தில் இந்த புத்தாண்டில் ஒட்டுமொத்த வருடமும் பெரும் முன்னேற்றம் காணும் வகையில் உள்ளது.இந்த ஆண்டு முழுவதும் தெய்வீக சக்தி மற்றும் ஆசீர்வாதம் உங்களை முன்னோக்கி செலுத்தும். சமூகத்தின் நலனுக்காக குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீங்கள் தொண்டு செய்யும் வேலைகளில் ஈடுபடுவீர்கள்.இந்த ஆண்டு வீட்டில் நடைபெறும் ஒரு நல்ல விழாவுடன் தொடங்கும். உங்களைச் சுற்றி மகிழ்ச்சி நிலவும். உங்களுக்கு நற்பெயர் கிட்டும். உங்கள் ஆசைகள் நிறைவேறும்.மே மற்றும் ஜூன் மாதங்களில், குறுகிய மற்றும் நீண்ட பயணங்களுக்கான வாய்ப்புள்ளது. இது உங்கள் விடுமுறைக்கான ஒரு குறுகிய பயணமாக இருக்கலாம் அல்லது வெளிநாட்டு விஜயமாகவும் இருக்கலாம். இந்த இட மாற்றமும் சூழலும் உங்களுக்கு ஆச்சரியத்தை அள்ளித் தரும். உங்கள் உடன்பிறப்புகள் நன்றாகச் செயல்படுவதோடு , உங்கள் வேலையில் அல்லது தொழிலிலும் உங்களுக்கு உதவலாம். அவர்களும் பயணம் மேற்கொள்ளலாம். வீட்டைப் பொறுத்தவரை அன்றாட நிகழ்வுகளில் கூட சூழ்நிலை கட்டுக்கடங்காமல் போகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் மோதல் ஏற்படலாம். உணர்ச்சி வசப்படாமல் சாதுர்யமாக கையாளுங்கள். உங்கள் செயலிலும் வார்த்தைகளிலும் நிதானத்தை கடைபிடித்தால் எளிதாக சமாளிக்கலாம் . உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது சக பணியாளர்களுடன் குழு அமைத்து மகிழ்வீர்கள்.இந்த ஆண்டு முழுவதும் உங்கள் தாயாரின் உடல் நிலையில் கவனம் வேண்டும். அவர் முறைப்படி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்கிறாரா என்று கவனிக்கவும்.குழந்தைப் பேறு அல்லது குழந்தையை தத்தெடுத்தல் தாமதமாகலாம் .

தொழில் / உத்தியோகம்

பொதுவாக இந்த ஆண்டு சில சிறிய குறைபாடுகள் இருந்தாலும் நீங்கள் நல்ல தொழில் வாய்ப்புகளை பெறுவது உறுதி. உங்கள் நற்பெயர் அதிகரிக்கும், மேலும் உங்கள் தொழில்முறை செயல்பாடுகளில் ஏற்படும் முன்னேற்றம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். புதிதான, ஆக்கபூர்வமான எண்ணங்கள் / உத்வேகம் போன்றவை தேக்க நிலையிலுள்ள உங்கள் தொழில்முறை சூழல்களைப் புதுப்பிக்க உதவும்.கூட்டாண்மை வணிகத்தில் உள்ளவர்கள் செழித்து வளர வாய்ப்பு இல்லை . அதனால் புதிய கூட்டு முயற்சிகளுக்கு இது சரியான ஆண்டு அல்ல.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடுதல் பொறுப்பு வழக்கப்படும். இது ஊக்கமளிப்பதாக இருக்கும். உங்கள் திறமையை வெளிபடுத்த நல்ல நேரம்.ஆண்டின் இடைப்பட்ட பகுதியில் உயர் அதிகாரிகளிடம் சில சிக்கல்கள் ஏற்படும். அலுவலகத்தில் சாதுர்யமாக நடந்து கொள்ளவும். அலுவலக விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள். ஜூன், ஜூலை, செப்டம்பர், மற்றும் அக்டோபர் மாதங்களில் பணியில் சுமுகமான முன்னேற்றம் இருக்காது.வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு பின் பிடித்தமான வேலை கிடைக்கலாம். இது தாமதமானால் நவம்பர்மாதம் முதல் கிடைக்கலாம். தூதர்கள், போலீஸ் / பாதுகாப்பு, நிர்வாகிகள், தலைவர்கள், அரசியல்வாதிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆலோசகர்கள், தத்துவவாதிகள், ஜோதிடர்கள், வானியல் நிபுணர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் ஆண்டு முழுவதும் வளம் பெறுவார்கள்.

kumba rasi

காதல் / உறவுகள்

கும்ப ராசி (Kumba Rasi) நேயர்களுக்கு இந்த ஆண்டு காதல் திருமணம் இரண்டையும் பொறுத்தவரை சுப அசுப பலன்கள் இரண்டும் கலந்து காணப்படும். உறவில் சில குறைபாடுகள் காணப்படும். உறவில் சலிப்பும் சோர்வும் ஏற்படலாம். புதுமையான அணுகுமுறை மற்றும் நன்றி வெளிபடுத்துதல் மூலம் உறவை சுமுகமாக்கிக் கொள்ளலாம். நீங்கள் தகவல்களை உங்கள் துனையாருடன் பரிமாறிக்கொள்ளவில்லை என்றால் உறவில் சுமுகம் இருக்காது. தவறாகப் புரிந்து கொள்வதற்கு இடம் அளிக்காதீர்கள் . மே முதல் அக்டோபர் வரை சுமுகமான உறவு இருக்கும். திருமணத்திற்கு தயாராய் இருப்பவர்களுக்கு மே மாதத்திற்குள் திருமணம் கை கூடும்.

நிதி நிலைமை

நிதி சூழ்நிலைகள் சாதகமாக மாறும். பணப் புழக்கம் அதிகரிக்கும். நீண்ட கால நிலுவையில் உள்ள கடன்கள் வந்து சேரும்.கடந்த ஆண்டு நீங்கள் கைப்பற்ற நினைத்த அனைத்தும் இப்பொழுது எளிதாகக் கிடைக்கும்.

சொத்து அல்லது வாகன சேர்க்கையால் திருப்தியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும். எந்த ஒரு ஆவணத்தையும் முழுவதுமாக படித்துப் பார்த்து அதில் கூறிய அனைத்தும் எழுத்து வடிவில் உள்ளதா என்று சரி பார்த்துக் கையெழுத்திடவும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய கடன்களை வாங்குவீர்கள். வழக்குகளில் தீர்வு கிடைக்க கால தாமதம் ஆகும். எனினும் மே முதல் ஆகஸ்ட் வரை உங்களுக்கு சாதகமான முன்னேற்றம் இருக்கும்.

மாணவர்கள்

கும்ப ராசி (Kumba Rasi) மாணவர்களே ! இந்த ஆண்டில் அதிலும் குறிப்பாக ஆண்டின் முதற் பாதியில் நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். கும்ப ரசி (Kumba Rasi) குழந்தைகள் இந்த ஆண்டு நன்கு படித்து சாதனை படைத்தது அதற்கு வெகுமதியும் பெறுவார்கள்.கவனம் சிதறாத வகையில் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உண்மையான நண்பர்கள் உங்களின் வெற்றிக்கு உறுதுணையாய் இருப்பார்கள்.ஒரு சில மாணவ மாணவியருக்கு ஞாபக மறதி காணப்படும். யோகா மற்றும் தியானம் மூலம் நினவாற்றலை வளர்த்துக்கொள்ள முடியும். வெளிநாட்டுக் கல்விக்கான ஆர்வமுள்ள இளைய வயதினர் மே மாதத்திற்குப் பிறகு வெற்றியை அடைவார்கள். பெற்றோரின் ஆசி பெறுங்கள்.

ஆரோக்கியம்

நல்ல ஆரோக்கியம் உங்களை நல்ல முறையில் செயல்பட வைக்கும். ஆண்டின் முதல் பாதியில் ஆரோக்கியத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாது.உங்கள் பழக்கம் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர இந்த ஆண்டு உதவும். ஆண்டின் பிற்பகுதியில் சிறு அளவிலான வியாதிகளின் காரணமாக சில அசௌகரியங்கள் ஏற்படலாம்.நீண்ட நாட்களாக நோய்வாய் பட்டவர்கள் இந்த ஆண்டில் குறிப்பாக பிற்பகுதியில் சற்று கடுமையான நிலைகளை சந்திக்க நேரிடும்.

 • உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்
 • தினமும் நேர்மறையான வார்த்தைகளை பயன் படுத்துங்கள்
 • நன்றியையும் பாராட்டுதலையும் வெளிப்படுத்துங்கள்
 • ஓம் கம் கணேஷாய நமஹ அல்லது ஓம் வக்ரதுண்டாய ஹும்

  என்ற கணேஷ மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.

  அனுகூலமான மாதங்கள் :
  ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல், மே, ஜூன், மற்றும் ஜூலை
  அனுகூலமற்ற மாதங்கள்: ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர்

  Leave a Reply