புத்தாண்டு ராசி பலன்கள் 2018 - கன்னி : Kanni Rasi 2018 (Virgo)

பொதுப்பலன்கள்
கன்னி ராசி (Kanni Rasi) அன்பர்களே ! இந்த ஆண்டில் உங்கள் குண நலமும் நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும். உங்கள் மதிப்பும் சமூக அந்தஸ்தும் உயரும். குடும்பத்தாருடன் நல்லுறவு வலுப்படும், மகிழ்ச்சி பொங்கும். உடன் பிறந்தாருடன் நல்லுறவு காணப்படும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் இணக்கத்துடன் இருப்பதற்கு உணர்ச்சிப்பூர்வமான பூசல்களை தவிர்க்கவும். பயணங்களால் நன்மை ஏற்படும். உங்களின் சமூகச் செயல்கள் மகிழ்ச்சியையும் புதிய நட்பையும் பெற்றுத் தரும். ஆன்மீகப் பயணத்தினால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிப்ரவரி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஜூன், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் உங்கள் தந்தையாரின் உடல் நிலையில் சற்று பாதிப்பு இருக்கும். நீங்கள் பெற்றோராயிருப்பின் உங்களுள் சிலரின் குழந்தைகள் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்காக வெளி நாட்டிற்கு பயணம் செல்வார்கள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைத்தல் போன்ற பல ஆச்சரியங்களை கொண்டு வரப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாக அமையப் போகின்றது.
தொழில் / உத்தியோகம்
உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த புத்தாண்டு நல்ல லாபத்தை பெற்றுத் தரும். உங்களின் உற்சாகமான வேலைக்காக பாராட்டப்படுவீர்கள். போட்டியாளர்களை வெல்வீர்கள். உங்கள் அனைத்துச் செயல்களிலும் வெற்றி காண்பீர்கள்.இந்த ஆண்டு முதலீடுகளை செய்வதற்கு சாதகமானதாக இருக்கும். திடீர் லாபங்கள் அல்லது எதிர்பாராத பண வரவுகள் ஏற்படலாம். நீங்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அடிக்கடி பயணங்களைச் சந்திக்கலாம். ஜூலை முதல் செப்டம்பர் வரை உங்கள் பணியில் மந்தமான நிலை காணப்படும். கல்வி, தகவல் தொழில் நுட்பம் , தகவல் தொடர்பு, விவசாயம் போன்ற துறைகளில் உள்ள கன்னி ராசி (Kanni Rasi) அன்பர்கள் ஆண்டு முழுவதும் வளர்ச்சி காண்பார்கள்
காதல் / உறவுகள்
மொத்தத்தில் காதலர்களுக்கு இந்தப் புத்தாண்டு நல்ல ஆண்டு. காதலர்கள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் இருப்பார்கள். சிலருக்கு புதிய உறவுகள் கிட்டும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். நீங்கள் நம்பகமானவர்களாகவும் உண்மையான அன்பு உள்ளவர்களாகவும் இருப்பீர்கள். மொத்தத்தில் நீங்கள் காதலில் எச்சரிக்கையாக இருப்பீர்கள். நீங்கள் உங்களை மிகைபடுத்தி காட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
தம்பதிகள் ஆண்டு தொடக்கத்தில் வாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் வாழ்க்கை துணையிடம் அவநம்பிக்கை ஆகியவற்றை சந்திப்பீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்கள் வாழ்கை துணை உடல் நலம் பாதிக்கபட்டு அதனால் இன்பத்தை இழக்கலாம். பொறுமையுடனும் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் அமைதி கிடைக்கும். கேளிக்கை, விருந்து, பயணங்கள், நன்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அள்ளித் தரும். மே முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டங்களில் உங்கள் வாழக்கைத் துணையுடன் சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதனால் பேச்சில் கவனம் அவசியம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி பேசுங்கள்.
தினமும் நல்லதையே நினையுங்கள்
ஆன்மீக குருவின் ஆசி பெற்றிடுங்கள்
உடல் ஊனமுற்றோருக்கு உதவும் காரியங்களில் பங்கு பெறுங்கள்
சிறந்த அணுகுமுறையைக் கையாளுங்கள்
மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையுடன் இருங்கள்

https://www.youtube.com/embed/TlvB1gBh5XA
நிதி நிலைமை
இந்த புத்தாண்டு பண வரவையும் வருமான உயர்வும் உங்களுக்கு தரும். இந்த புத்தாண்டு தொடக்கத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பழைய முதலீடுகள் மற்றும் வியாபாரத்தின் மூலம் திருப்தியான பண வரவு இருக்கும். மேலும் பல வகையிலும் பண வரவு இருக்கும். பூர்வீகச் சொத்துகளும் கிடைக்கலாம். மே மாதத்திற்குப் பிறகு முதலீடு செய்வதை தவிர்க்கவும். நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்களுக்காகவும் மற்றும் பிறருக்கான சேவைகளுக்காகவும் பணம் செலவு செய்வீர்கள்.
மாணவர்கள்
உங்கள் திறமைகளையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள பல சந்தர்ப்பங்கள் அமையும். உங்கள் கடின உழைப்பிற்கு ஆண்டு முழுவதும் பலன் கிட்டும். புதிய பொழுதுபோக்குகளில் ஆர்வமாக இருப்பீர்கள். விலையாட்டு துறையினருக்கு கௌரவம் கிட்டும். உயர் படிப்பு விரும்புவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். பெற்றோரின் ஆசி பெறுங்கள்.
ஆரோக்கியம்
மொத்தத்தில் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். முன்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து சிறுது சிறிதாக மீள்வீர்கள் . மே மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை, உங்கள் உடல் நிலை பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகளும் இருக்கலாம். நீண்ட நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர் ஆலோசனை பெறவும். ஆன்மீக ஈடுபாடு உங்கள் மன நிலையை மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்கும். எதிர் மறை எண்ணங்கள் மறைந்து உடலும் மனதும் புத்துணர்ச்சி பெறும்.
செய்யவேண்டியவை
ஓம் சநேஸ்வராய நமஹ அல்லது ஓம் வஜ்ர தேஹாய நமஹஎன்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும் அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல் மே மற்றும் நவம்பர் அனுகூலமற்ற மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் டிசம்பர்

Leave a Reply
palpandi
Sasi paiyarchi palan
December 17, 2017
Sujatha
Same palangal for women also or it differs.
May 13, 2018