AstroVed Menu
AstroVed
search
search

நவகிரகங்கள் தான் நம் உறவினர்கள்

dateMay 18, 2023

இந்த உலகில் நாம் அனுபவிக்கும் நன்மை தீமை, இன்பம் துன்பம் என அனைத்தையும் நமக்கு நிர்ணயிப்பது நவகிரகங்கள் தான் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களின்  ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நமது வாழ்வின் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த நவகிரகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உறவுகளை குறிக்கும். அவற்றைப் பற்றிக் காண்போம்.

சூரியன்:

நவ கிரகங்களின் அரசனாக விளங்கும் சூரியன் நமது தந்தையைக் குறிக்கிறார். மற்றும் தந்தைவழி உறவினர்களையும் சூரியன் குறிக்கிறார். தந்தை வயதை ஒத்தவர்களையும் சூரியனே குறிக்கிறார். எனவே தான் சூரியனை தந்தைகாரகன் என்கிறோம்.

சந்திரன்:

சூரியன் தந்தை என்றால், குளுமை மிக்க சந்திரன் நமக்கு தாய் போல. தாய் வழி உறவுகளும் சந்திரனே. எனவே சந்திரனை மாத்ருகாரகன் என்கிறோம்.

செவ்வாய்:

நவகிரகங்களில் மூன்றாவதாக உள்ள செவ்வாயை சகோதரகாரகன் என்பார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை செவ்வாய் குறிக்கும். மற்றும் பெண்களுக்கு செவ்வாய்  கணவன் உறவைக் குறிக்கும். எனவே செவ்வாய் நமக்கு சகோதரகாரகன் ஆவார்.

புதன்:

 நவகிரகங்களில்  புதன்,  மாமன், மைத்துனர்களைக் குறிக்கும். அவர்களின் வழி உறவுகளையும் புதன் குறிக்கும். எனவே புதன் மாமன்காரகர் ஆவார்.

வியாழன் (குரு)

நவகிரகங்களில் ஐந்தாவதாக உள்ள வியாழன் (குரு), புத்திரர்களைக் குறிக்கும். எனவே தான் குரு புத்திரகாரகன் ஆவார்.

சுக்கிரன்:

நவகிரகங்களில் ஆறாவதாக உள்ள சுக்கிரன், மனைவி மற்றும் நண்பர்களைக் குறிக்கும். எனவே தான் சுக்கிரனை களத்திரகாரகன் என்பார்கள்.

சனி:

நவகிரகங்களில் ஏழாவதாக உள்ள சனி, நமக்குக் கீழ் பணிபுரியும். வேலையாட்களைக் குறிக்கும். இவரை ஆயுள் காரகன் என்று அழைப்பார்கள். 

ராகு:

நவகிரகங்களில் எட்டாவதாக இருக்கின்ற ராகு, தந்தை வழி தாத்தா மற்றும் பாட்டியைக் குறிக்கும்.

கேது:

நவகிரகங்களில் ஒன்பதாவதாக உள்ள கிரகமான கேது தாய் வழி தாத்தா, பாட்டியைக் குறிக்கும்.


banner

Leave a Reply