Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

முருகன் மூல மந்திரம் | Murugan Moola Manthiram Tamil

January 22, 2021 | Total Views : 5,975
Zoom In Zoom Out Print

முருகப்பெருமானின் மூல மந்திரத்தை ஜெபிப்பதால் ஏற்படும் பலன்கள்:

முருகன் வழிபாடு என்பது பழங்காலம் முதலே இருந்து வருகிறது. அதிலும் தமிழர்களுக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பானது நீண்ட நெடுங்கால பிணைப்பாகும். தமிழர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் முருகனை மறவாமல் கொண்டு சேர்த்து வருகின்றனர். அதன்படியே இன்று இலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் முருக வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. யாமிருக்க பயமேன் எனும் முருகப்பெருமான் எளியோரை காக்கும் தெய்வமாக விளங்குகிறார். முருகனை வணங்குவதற்கு எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும் கூட அவரது மூல மந்திரத்தை ஜெபித்து வணங்குவதன் வாயிலாக பல்வேறு விதமான பலன்களை பக்தர்கள் அடைய முடியும் என கருதப்படுகிறது.  இந்த மந்திரத்தை சிரத்தையோடு எத்தனை முறை ஜெபிக்கிறோமோ அதற்கான பலன்கள் கண்டிப்பாக வந்து சேரும் என கந்த குரு கவசத்தில் சொல்லப்பட்டுள்ளது. பல அற்புதமான சக்திகளை இந்த மந்திரத்தின் வாயிலாக நாம் பெற முடியும் என கூறப்படுகிறது. உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.

முருகன் மூல மந்திரம்:

ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ.

ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளால் எழுதப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம் பெற்றுள்ளது. மனதை ஒருமுகப்படுத்தி இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம் என கூறப்படுகிறது. எம பயமும் நீங்குகிறது. அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவுகிறது.  எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம்.

இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம் என கூறப்படுகிறது. கடும் தவத்தின் வாயிலாக சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த வேத சூட்சும ரகசியங்களை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். அந்த ரகசியங்களை முருகப்பெருமானே ஜோதி வடிவில் தோன்றி நமக்கு கற்பிப்பார் என்பது ஐதீகம். எத்தனை முறை இந்த மந்திரத்தை ஜெபிக்க முடியுமோ ஜெபித்து  முருகப்பெருமான மனதார வணங்கினால் அவரது அருளாசிகளைப் பெறலாம்.

முருகப்பெருமானை வழிபடுவதற்குரிய தினங்கள்:

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான எப்போது வேண்டுமானாலும் சிந்தையில் நிறுத்தி வணங்கி வழிபடலாம். இருந்த போதும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் முருகனுக்கு உகந்த தினங்களாக கருதப்படுகிறது. அன்றைய தினங்களில் வழிபடும் போது அவரது பரிபூரண அருள் நமக்கு கிடைக்கிறது. மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்களில் வழிபடுவதும் சிறப்பு. ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் கிடைக்கக் கூடிய பலன்கள் அளப்பரியது. சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. அது போன்று கார்த்திகை மாதம் முழுவதுமே முருகனுக்குரிய மாதம் என்பதால், விரதம் மேற்கொண்டு வழிபடுவதால் சிறந்த பலன்களை பெற முடியும்.

முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:

எளியோர்க்கு இறைவனான முருகப்பெருமானை வணங்குவதன் வாயிலாக நீண்ட கால நோய்கள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை நீங்கி, எதிரிகளே உருவாகமல் தடுக்கிறது. பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசுகள் போன்ற துஷ்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்குகிறது. நினைத்த காரியங்கள் அனைத்து தடையின்றி நிறைவேறுகிறது. திடீர் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறது முருகனின் அருள். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகிறது. கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, குடும்ப பிரச்னைகள் நீங்குகிறது. திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கிறது. தொழில், வியாபாரங்கள் சிறப்பான வளர்ச்சியை அடைகிறது. லாபங்கள் அதிகரிக்கிறது. இப்படி பல்வேறு பலன்களை நமக்கு வழங்குகிறது முருகப்பெருமானின் வழிபாடு. எனவே  முருகப்பெருமானை ஆத்மசுத்தியோடு வணங்கி அவரது அருளாசிகளைப் பெறுவோம்.

banner

Leave a Reply

Submit Comment