மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு சஞ்சாரம் உங்கள் ராசியில் இருந்து 9 வது வீடான மீன ராசியிலும், கேது சஞ்சாரம் உங்கள் ராசியில் இருந்து 3ம் வீடான கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும் டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும். இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும். .
இந்த பெயர்ச்சி மூலம் நீங்கள் பெறும் பலன்களைப் பார்க்கலாமா?
பொதுப்பலன்
புதிய நண்பர்களைப் பெற்று சமூக வட்டத்தை விரிவு படுத்துவீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய தொழிலைத் தொடங்கலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகம்
வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றாலும் நிதானம் .தேவை. உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். அதற்கேற்ற பலனையும் பெறுவீர்கள். தொழிலில் சில சவால்கள் இருந்தாலும் அதனை நீங்கள் சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழில் சிறக்கும்.
காதல்/ குடும்ப வாழ்க்கை
தந்தை மற்றும் இளைய உடன்பிறந்த உறவுகள் தேவையற்ற மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன, எனவே தயவுசெய்து அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் பிரச்சினை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
நிதிநிலை
நிதிநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கவனமாகக் கையாள வேண்டும். உங்களின் கடந்தகால முதலீடுகள் மூலம் சிறந்த வருமானத்தை பெறலாம். பங்கு சந்தை மூலம் நல்ல லாபம் மற்றும் ஆதாயம் காண்பீர்கள். அதன் மூலம் உங்கள் நிதிநிலை மேம்படும். உங்கள் முதலீடுகள் அனைத்தும், உங்கள் நிதி வளர்ச்சிக்கு பங்களிக்க வாய்ப்புள்ளது. பண வரவு அதிகம் இருந்தாலும் நீங்கள் அதிக ஆடம்பர செலவுகளை மேற்கொள்ளலாம். எனவே கவனமாக இருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு அதிக செலவுகள் இருக்கலாம்,
மாணவர்கள்
இந்த காலகட்டத்தில் மாணவர்கள் கவனச்சிதறல்களுக்கு ஆளாகலாம். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி உங்கள் படிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வழிகாட்டுதலுக்காகவும் ஆதரவிற்காகவும் உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை நம்புங்கள். அவர்களின் ஊக்கம் ஒரு சக்திவாய்ந்த உந்துதலாக இருக்கும்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடந்த கால உபாதைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். உங்கள் சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள யோகா மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சி, மேற்கொள்ளுங்கள். உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரங்கள்:-
1) தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி விநாயகர்) மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.
2)காய்கறி உணவைப் பின்பற்றலாம் மற்றும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கலாம் மற்றும் வாரந்தோறும் ஒரு முறை பசுவிற்கு வாழைப்பழம் வழங்கலாம்.
3) சனிக்கிழமைகளில் அனுமனுக்கு உளுந்து வடை படைக்கவும்
4) தினமும் துர்கா மந்திரத்தை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

Leave a Reply