மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025
பொதுப்பலன்
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது. நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது. கேது மோட்சகாரகன் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது. இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேஷ ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 12 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 6 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

உத்தியோகம் :-
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்கள் உத்தியோகத்தில் ஆதரவான நேரத்தைக் கொண்டிருக்கலாம். குறிப்பாக இந்தப் பெயர்ச்சி வரவேற்கத்தக்கது. ஏனென்றால் கடந்த பெயர்ச்சியில் உங்கள் ராசியில் ராகு சஞ்சாரம் காரணமாக உத்தியோகத்தில் பரபரப்பான நிலை இருந்தது. உங்கள் கடின உழைப்பு நம்பிக்கைக்குரிய முடிவுகளை வழங்கவில்லை. இந்த எதிர்மறை காரணிகள் விரைவில் முடிவடையும் மற்றும் உங்களுக்கு நல்ல விடிவு காலம் கிட்டும். வெளிநாட்டுத் தொடர்புடைய மாற்றம் சார்ந்த வேலைகள் அதிக வெற்றியையும் பலன்களையும் தரும். உங்கள் பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் இந்த பெயர்ச்சியில் முடிவுக்கு வரும். நீங்கள் பணியில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். தொழில் வல்லுநர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம் மற்றும் சிறப்பாகச் செயல்படலாம். கடன்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்த இது சிறந்த நேரம் அல்ல.
ராகு கேது பெயர்ச்சி 2023 பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க
காதல்/ குடும்ப உறவு :
திருமணம் ஆகாதவர்களுக்கு தக்க துணை கிடைக்க இது உகந்த நேரம். நீங்கள் சமூக ரீதியாக சுறுசுறுப்பாக செயல்படலாம் மற்றும் பிறருடனான உறவில் ஒரு பிணைப்பை பராமரிக்க விரும்புவீர்கள். அதே நேரத்தில் நீங்கள் இக்கட்டான நிலையில் இருக்கலாம் அல்லது உறவின் உண்மைத்தன்மையில் உங்களுக்கு அதிக சந்தேகம் வரலாம். இந்த எதிர்மறை எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும். குடும்ப ரீதியாக பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவும் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் உறவு நடுநிலையாகத் தோன்றலாம். மேலும் உங்கள் கருத்துக்களுக்கு எதிராக அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
திருமண வாழ்க்கை :-
இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடும், குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகளும் சரியாகி, வாழ்க்கைத் துணை உறவில் அக்கறையும் பாசமும் வளர ஆரம்பிக்கும். திருமணம் செய்ய விரும்புபவர்களும் சரியான துணையைக் கண்டுபிடிப்பார்கள். தற்போதைய தசா புத்தி காலம் மற்றும் கிரகங்களின் கோட்சாரம் தான் தீர்மானிக்கும் காரணிகள் என்பதால் தனிப்பட்ட ஜாதகமும் திருமண நிகழ்வுக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
நிதிநிலை :-
நிதிநிலையைப் பொறுத்தவரை வருமானம் இருக்கும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும் சேரும். ராகு ராசியிலிருந்து 12வது வீட்டில் சஞ்சரிப்பதால் அவர் உங்களை அதிக செலவு செய்ய வைக்கலாம், எனவே நீங்கள் நிதி விஷயங்களைக் கையாளும் போது கவனமாக இருங்கள். உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் கிடைக்கும் நிதியை வைத்து உங்கள் தேவைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்னும் கணக்கீடு செய்து, சரியான முறையில் நிதி விஷயங்கள் நடக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். முதலீடுகளும் லாபம் சார்ந்த முடிவுகளைத் தரலாம்.
மாணவர்கள் :-
மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். ஆராய்ச்சி அடிப்படையிலான படிப்பில் இருப்பவர்களுக்கு அதிக வெற்றி விகிதம் இருக்கும். இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு சிந்திக்கும் திறன் கூடுதல் நன்மையாக இருக்கும். அவர்களின் புதுமையான சிந்தனை அவர்களுக்கு வெற்றியைக் காட்டும். அது அவர்களின் படிப்பில் உயரத்தை அடையச் செய்யும். மருத்துவப் பரீட்சைக்குத் தயாராகுபவர்கள் தேர்வில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். கடந்த காலத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் தாமதங்கள் இந்த காலக் கடத்தில் இருக்காது மற்றும் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
ஆரோக்கியம் :-.
இந்த பெயர்ச்சி காலக் கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மருத்துவமனை செலவுகள் ஏற்படும். இது உங்களை அதிக செலவு செய்ய வைக்கும். எனவே உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது நல்லது. உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் மேம்படும். இரத்தக் கொதிப்பு மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம் உடனடி கவனம் செலுத்தினால் அது குணமாகும். தூக்கக் கோளாறுகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதால், நீங்கள் முறையான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
பரிகாரங்கள் :-
1) தினமும் விநாயகப் பெருமானையும், துர்க்கையையும் வழிபட்டு அவர்களின் அருளாசிகளைப் பெறுங்கள்.
2) ராகு மற்றும் கேதுவிற்கு வாரம் ஒருமுறை 100 கிராம் உளுந்து மற்றும் கொள்ளு படைக்கவும்.
3) முதியோர் இல்லங்களுக்கு மாதம் ஒருமுறை இனிப்பு வழங்குங்கள்.
4) தினமும் கணேஷ சூக்தம் மந்திரத்தை பாராயணம் செய்யவும் அல்லது கேட்கவும்.







