AstroVed Menu
AstroVed
search
search
x

ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

dateAugust 29, 2023

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன.  ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது.  நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது.  கேது மோட்சகாரகன்  என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது.   இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின்  தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ரிஷப ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 11 ஆம் வீடாகிய  மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள்  ராசியிலிருந்து 5 ஆம்  வீடாகிய  கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப்  போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

உத்தியோகம்:-

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் உத்தியோக வாழ்க்கையில் பிரகாசிப்பார்கள். வளர்ச்சி காணப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். கூடுதல் பணிச்சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவற்றைச் சுமையாகக் கருதாமல், வளர்ச்சிக்கான கதவைத் திறக்கும் திறவுகோலாக கருதி  ஏற்றுக்கொண்டு உங்கள் திறனை நிரூபிக்க வேண்டும். கேது சஞ்சாரம் காரணமாக  அதிர்ஷ்டம் தாமதமாகும்.  இருப்பினும் தொடர்ச்சியான முயற்சி உங்கள் வாழ்க்கையில் தேவையான உயரங்களைத் தரும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை தகவமைத்துக் கொள்வது மேலும் பல அற்புதங்களைச் செய்யும்.

ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

 ராகு கேது பெயர்ச்சி 2023 பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க

காதல்/ குடும்ப உறவு :-

ஒற்றையர் உறவைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். காதலில் வெற்றி பெற இது சரியான நேரம் அல்ல, ஏனெனில் உறவுகள் அதிக ஆதரவாக இருக்காது. ஈகோ மோதலைத் தவிர்க்க வேண்டும்.  வதந்தி மற்றும் கிசுகிசுக்களை பரப்புவதில் ஈடுபடாதீர்கள். குடும்ப உறவு நன்றாக இருக்கும், கவனிப்பும் பிணைப்பும் தொடரும். இந்த காலகட்டத்தில் மூத்த சகோதர உறவுகள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம்.

திருமண வாழ்க்கை :-

தம்பதியர் உறவுகள் சிறப்பாகவும் ஆதரவாகவும் தோன்றினாலும் குழந்தைகளுடனான  உறவு கசப்பான அனுபவத்தைத் தரக்கூடும். அவர்களின் நடத்தை  கவலைக்குரிய காரணியாக இருக்கலாம். அவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் மற்றும் மிகவும் கண்டிப்புடன் இருக்கக்கூடாது. இது ஆரோக்கியமான உறவை நடத்த உதவும். திருமணமான தம்பதிகள் குழந்தை பிறப்பில் தாமதத்தை சந்திக்கலாம் தம்பதிகள் குழந்தைப் பேற்றுக்கு  மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

நிதிநிலை :- 

இந்த பெயர்ச்சிக் காலத்தில் நீங்கள் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் முந்தைய முதலீடுகள் அனைத்தும் உங்களுக்கு லாபத்தைத் தரும். பங்குச் சந்தை முதலீடுகள் சிறந்த லாபத்தைத் தரும் மற்றும் பிற முதலீடுகள் செல்வத் தரத்தை அதிகரிக்க உதவும் சாத்தியமான ஆதரவையும் அளிக்கும். ஆடம்பர மற்றும் பொருள் வசதிகளுக்காக அதிக செலவு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் கூட அதிக எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள், அவர்களின் தேவைகளுக்காக நீங்கள் அதிக செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வியாபார விரிவாக்கத்தை எதிர்பார்க்கலாம் மற்றும் அனைத்து கூட்டு முயற்சிகளும் வெற்றியைத் தரும். இந்த ஒப்பந்தங்களின் போது ஆவணங்களில்  எல்லாம் சரியாக  இருப்பதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் இது பாதுகாப்பான உணர்வைத் தரும்.

மாணவர்கள் :-  

மாணவர்களுக்கு கவனச் சிதறல் மற்றும் திசைதிரும்பும் வாய்ப்புகள் இருப்பதால் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மெதுவான முன்னேற்றம் இருக்கும், விடாமுயற்சியால் படிப்பில் சிறந்து விளங்க முடியும். இலக்கை அடைய பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பரீட்சைகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிலர் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லலாம். உயர் கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வருமானம் குறைவாக இருக்கும்.

ஆரோக்கியம் :- 

உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தற்போதுள்ள அனைத்து நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளும் குணமாகியிருப்பதை உணர்வீர்கள். பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் நோய்கள் குணமாகும். இந்த சஞ்சாரம் அனைத்து உடல்நலப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட உதவும். நீங்கள் அதிக எடை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த காலகட்டம் சிறந்த எடையை பராமரிக்க உதவும், அதே நேரத்தில் உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானத்தில் தீவிரமாக ஈடுபடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். . மேலும், தினசரி உணவு உட்கொள்ளலைக் கண்காணிக்கவும், சரியான உணவைச் சேர்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

பரிகாரங்கள் :-

1) விநாயகர் (கேதுவின் அதிபதி )மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி)ஆகியோரை தினமும் வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.

2) கடுமையான உணவு கட்டுப்பாட்டு முறையைப்  பின்பற்றவும் மற்றும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கலாம் மற்றும் வாரந்தோறும் ஒரு முறை பசுவிற்கு வாழைப்பழம் வழங்கலாம்.

3) சனிக்கிழமைகளில் அனுமனுக்கு உளுந்து வடையை  படைக்கவும்

4) தினமும் துர்கா மந்திரத்தை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.


banner

Leave a Reply