Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

Meenam Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021

August 19, 2020 | Total Views : 1,236
Zoom In Zoom Out Print

கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 3ஆம் வீடு, 5ஆம் வீடு, மற்றும் 7 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 3 ஆம் வீடு என்பது, தகவல், தொடர்பு, துணிவு, இளைய உடன்பிறப்புக்கள் போன்றவற்றையும், 5 ஆம் வீடு என்பது, குழந்தைகள், பூர்வ புண்ணியம், அறிவாற்றல், அன்பு, ஊக வணிகம் ஆகியவற்றையும், 7 ஆம் வீடு என்பது, வாழ்க்கைத் துணை, திருமணம், தொழில், தொழில் கூட்டாளிகள் மற்றும் இன்பம் போன்றவற்றையும் குறிக்கிறது.

மீன ராசி அன்பர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும் பெயர்ச்சியாக இருக்கும். இந்தப் பெயர்சிக் காலத்தில் நீங்கள் பல நன்மைகளை அடைவீர்கள். உங்கள் செல்வமும், ஆரோக்கியமும் சிறந்து விளங்கும். இவற்றில் முன்னேற்றமும் ஏற்படும். கடுமையான நோய் நொடிகள் எதுவும் உங்களை அணுக வாய்ப்பில்லை. அப்படியே எதாவது சிறு நோய் அல்லது தொற்று ஏற்பட்டாலும். அது விரைவிலேயே குணமடைந்து விடும். ஸ்திரமான நிதிநிலை காணப்படும். வருமானம் கனிசமாக உயரும். அனைத்து விதங்களிலும் லாபங்களைக் காண்பீர்கள். முக்கியமாக உங்கள் முதலீடுகள் மூலமாக லாபங்களைக் காண்பீர்கள். பங்குச் சந்தை, ம்யூசுவல் ஃபண்ட் போன்ற ஊக அடிப்படையிலான முதலீடுகளும் நல்ல வருமானம் தரும். சிலருக்கு, திடீர் ஆதாயங்களும், எதிர்பாராத பண வரவுகளும் கூடக் கிடைக்கலாம்.

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பிறந்தோர்கள் உடனான உறவு முறையும் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் பொன்னனா நேரத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் செலவு செய்வீர்கள். குழந்தைகளும் உங்கள் அருகாமையை விரும்பி மன மகிழ்ச்சி அடைவார்கள். அலுவலகத்திலும் மேலதிகாரிகள், மற்றும் சக பணியாளர்களுடன் உறவு நன்றாக இருக்கும். அவர்கள் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். மேலும், தெரிந்தவர்கள், அண்டை அயலார், நண்பர்கள் போன்றவர்களும் உங்களிடம் ஆதரவாகப் பழகுவார்கள். மொத்தத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். நீங்கள் எதையும் புதுமையாகச் செய்வீர்கள். ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களது நற்பண்புகள் அதிகரிக்கும். நடக்கும் விஷயங்கள் யாவும் உங்களுக்கு சாதகமாக அமையும்.இந்த நேரத்தில், உங்கள் காதல் உணர்வுகளும் தலை தூக்கலாம். ஆண்களுக்குப் பெண்களிடமும், பெண்களுக்கு ஆண்களிடமும் ஆழ்ந்த ஈர்ப்பு உருவாகலாம்.

meenam-rasi-guru-peyarchi-palangal-tamil-2020-to-2021

வேலை, தொழில்

நீங்கள் பணி புரிபவராக இருந்தாலும், தொழில் அல்லது வியாபாரம் செய்பவராக உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் நீங்கள் திறமையுடன் பணியாற்றுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் நீங்கள் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். நீங்கள் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தாலும் இந்த பெயர்ச்சிக் காலக் கட்டங்களில் சவால்களை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் விற்பனையும், லாபமும் கணிசமாக இருக்கும்.

நிதி

உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர் வருமானமும் அதிகரிக்கும். பல வகையில் உங்களுக்கு பணம் வந்து சேரும். ஊக வணிகம் மூலமும் உங்களுக்கு பணம் வந்து சேரும். அசையா சொத்து வாங்குவதற்கும் இது உரிய நேரம் எனலாம். இது உங்கள் எதிர்காலத்திற்கும், நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இப்பொழுது, வீடு, நிலம், அல்லது வாகனம் போன்றவை வாங்குவது, புத்திசாலித்தனம் ஆகும். சொத்து, வாங்குவது விற்பது போன்றவையும் கணிசமான லாபம் தரும். எனவே, இந்தத் துறையில் முதலீடு செய்வது, நன்மை தரும்.

குடும்பம்

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள். உறவினர்களுடன் நீங்கள் சிறந்த உறவு முறை பரமரிப்பீர்கள். இது குடும்ப சூழ்நிலையை இனிமையாக்கும். குடும்பத்தின் மற்றும் உறவினர்களின் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

கல்வி

கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கனவுகள் யாவும் நனவாகக் காண்பார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மாணவர்களுக்கு உற்சாகத்தையும் அதன் மூலம் வெற்றியையும் அளிக்கும். கல்வி மற்றும் கலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். இந்தக் காலகட்டத்தில், உங்கள் திறமைகளையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். நீங்கள் பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். விளையாட்டு, கலாசிக்கல்சார நிகழ்ச்சிகள் போன்ற, கல்வி சாரா விஷயங்களிலும் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். அவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள். தவிர, பல துறைகளிலும் உங்கள் திறமை, புலமை போன்றவற்றை வெளிப்படுத்தவும், நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

காதலும், திருமண வாழ்க்கையும்

கணவன் மனைவி இடையே அபாரமான அன்பு, பாசம், பரிவு போன்ற உறவை வலுப்படுத்தும் உணர்வுகள் காணப்படும். இதன் மூலம் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். மீன ராசி காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக வெற்றிகரமாக ஆக்கிக் கொள்வார்கள். திருமணம் கால தாமதம் ஆகி விரக்தி அடைந்தவர்கள் கூட இப்பொழுது மண வாழ்க்கையில் ஈடுபடும் ஆசை கொள்வார்கள். இதன் காரணமாக அவர்கள், தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேடும் முயற்சியில் இறங்கலாம். தம்பதியினர் இடையே நிலவும் உறவிலும், மகிழ்ச்சியும், புரிதலும், நெருக்கமும் நிறைந்திருக்கும்.

ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும் என்றாலும் நீங்கள் தொற்று ஏற்படாத வண்ணம் உங்களை காத்துக் கொள்ள வேண்டும். எதாவது சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், நீங்கள் குணமடைந்து, அதிலிருந்து விரைந்து மீண்டு விடும் வாய்ப்பு அதிகம். எனவே வருமுன் காப்பது நல்லது என்பதை கருத்தில்கொண்டு அதற்கேற்ப உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரிப்பது, நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவும். இது போல, உங்கள் குடும்பத்தினரும் நல்ல உடல்நிலையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள் எனலாம்.

எளிய பரிகாரங்கள்

  • ‘ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் ஸஹ குரவே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
  • விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தைக் கேட்கவும்
  • உடல்நிலை அனுமதித்தால், வியாழக்கிழமைகளில் உபவாசம் எனப்படும் உண்ணா நோம்பு அனுசரிக்கவும்
  • பசுக்களுக்கு, வெல்லம், வாழைப்பழம் அளிக்கவும்
  • நன்கு கற்றறிந்தவர்கள், பண்டிதர்களைப் போற்றி மதிக்கவும். எந்த விதத்திலும் அவர்களுக்கு அவமரியாதை செய்யாமல் இருக்கவும்
  • வியாழக்கிழமைகளில், கொண்டக்கடலை தானம் செய்யவும்
banner

Leave a Reply

Submit Comment