AstroVed Menu
AstroVed
search
search

Dhanusu Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020 -2021

dateAugust 19, 2020

கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 2 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 6ஆம் வீடு, 8ஆம் வீடு, மற்றும் 10 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 6 ஆம் வீடு என்பது, நோய், கடன், எதிரிகள் போன்றவற்றையும், 8 ஆம் வீடு என்பது, எதிர்பாராத ஆதாயங்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றையும், 10 ஆம் வீடு என்பது, வேலை, செயல்கள், கௌரவம் போன்றவற்றையும் குறிக்கிறது.

தனுசு ராசி அன்பர்களுக்கு, இந்தப் பெயர்ச்சி, வேலை, தொழில், குடும்பம், செல்வம், சொத்து போன்றவற்றிற்கு நன்மை தருவதாக அமையும். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள்; இதனால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். ஏதாவது பிரச்சனை எழுந்தாலும், உங்களால் அதைத், திறமையாகவும், நாசூக்காகவும் கையாள முடியும். செல்வம், சொத்து போன்றவற்றையும், உங்களால் சேர்க்க முடியும். இந்த நேரத்தில், திடீர் ஆதாயங்கள், எதிர்பாராத பணவரவு போன்றவற்றுக்கும் வாய்ப்பு உள்ளது! சிலரிடம் பரம்பரை சொத்தும் வந்து சேரக் கூடும். சிலர், குடும்ப அல்லது பரம்பரை சொத்துக்கு சட்டப்படியான வாரிசாகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இவை நிறைவேற, சிறிது காலதாமதம் ஆகக்கூடும்.

dhanusu-rasi-guru-peyarchi-palangal-tamil-2020-to-2021

பணியைப் பொறுத்தவரை, உங்கள் தீவிர முயற்சி, வேலையில் முன்னேற்றத்தைப் பெற்றுத் தரக் கூடும். இதனால் பதவி உயர்வு, உதிய உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவைக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகும். இந்த நேரத்தில் நீங்கள் பல சவாலான பணிகளை ஏற்று நிறைவேற்றுவீர்கள். இதனால் உங்கள் வேலை பளு அதிகரிக்கும் என்பது உண்மை தான். ஆனால், இதற்கான நற்பலன்கள் உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால், இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும்படி நடந்து கொள்ள வேண்டாம். பொது இடங்களில் உங்கள் கௌரவம், புகழ், அதிகாரம் ஆகியவை உயரக்கூடும். உங்கள் செயல்களுக்கும், நீங்கள் எதிர்பார்த்த படி, குறைந்த காலத்திலேயே பலன் கிடைக்கக் கூடும்.

இந்தப் பெயர்ச்சி காலத்தில் பரம்பரை சொத்து உங்களிடம் வர வாய்ப்பு உள்ளது என்றாலும், சொத்து எதையும் வாங்குவதற்கு வாய்ப்பு இல்லை. வீடு, நிலம் வாங்குவது, விற்பது போன்றவற்றில் நீங்கள் ஈடுபட்டால், அதானால் அதிக நஷ்டம் ஏற்படக்கூடும். வாகனம் வாங்குவதிலும், இதே நிலைதான். மேலும் அதில் தாமதமும் ஏற்படலாம். எனினும், உங்கள் வீட்டை நீங்கள் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம். வாகனங்களையும் அடிக்கடி சரி செய்ய வேண்டியிருக்கலாம்.

வேலை, தொழில்

நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள் அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொண்டு நீங்கள் முன்னேற உங்களுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பார்கள். உங்கள் திறமை வெளிப்படும் வகையில் பணியாற்றி நீங்களும் உங்கள் உற்பத்தித் திறனை பெருக்கிக் கொள்வீர்கள்.தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் தனுசு ராசி அன்பர்களுக்கு சுமாரான பலன்களே கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் இருக்காது என்றாலும், நீங்கள் எதிர்பார்த்த லாபம் இப்பொழுது கிடைக்காமல் போகலாம். சிறு விஷயங்களுக்குக் கூட, உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.

நிதி

உங்கள் வருமானம் பெருமளவில் இருக்கும் என்று கூற இயலாது. லாபமும் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். செலவுகளைக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரும். வீடு, வாகனம் ஆகியவற்றைப் பழுது பார்ப்பதற்காக, நீங்கள் செலவுகளை செய்ய வேண்டி வரலாம். பணம், சேமிப்பு போன்றவற்றின் மதிப்பை உணர்ந்து, அவற்றை நன்கு நிர்வகிப்பதற்கு ஏற்ற தருணம் இது எனலாம்.

குடும்பம்

குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும அளிப்பார்கள். என்றாலும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க நீங்கள் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தாய் மற்றும் தாய் ஸ்தானத்தில் இருப்பவர்களிடம் சிறிது கவனமாகப் பழக வேண்டும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நீங்கள் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

கல்வி

தனுசு ராசி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தீயசகவாசத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் சிறிது கவனமுடன் இருக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்திப் பாடங்களை படிப்பதன் மூலம் தடைகளைத் தாண்டி நீங்கள் சிறப்பாக செயல் பட இயலும். மேலும், கல்வி விஷயத்தில், அவசரப்பட்டு, திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம்.

காதலும், திருமண வாழ்க்கையும்

தனுசு ராசி காதலர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாக இருக்கும். உங்கள் காதலுக்கு பெற்றோர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சில தடைகளை நீங்கள் எதிர் கொள்ள நேரும். திருமணமான தம்பதிகள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சொந்தமாக முடிவெடுப்பதை விட, மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நலன் தரும்.

ஆரோக்கியம்

இந்தப் பெயர்ச்சி காலக் கட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வீட்டில் வயதில் மூத்தவர்கள் இருந்தால் அவர்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை தேவை.

 

எளிய பரிகாரங்கள்

  • பகவான் விஷ்ணுவையும், சிவபெருமானையும் வழிபடவும்
  • மஞ்சள் நிற நீல மாணிக்கக் கல்லை (ஸஃபையர்) வலது கை, ஆள்காட்டி விரலில் அணியவும்
  • பெண்கள் தங்கள் கணவரிடம் அதிக அன்பும், மரியாதையும் காட்டவும்
  • மூத்த உடன்பிறப்புக்களுடன் சுமுக உறவுடன் இருக்கவும்
  • குழந்தைகளிடம் அன்பும், பாசமும் காட்டவும்
  • கீழ்க்கண்டவற்றை, மற்றவர்களுக்கு தானம் செய்யவும்: குங்குமம், மஞ்சள், தங்க நகைகள் அல்லது தங்க நிற நகைகள், பருப்பு வகைகள், மஞ்சள் துணி, உப்பு, சுத்தமான நெய், மஞ்சள் பூக்கள், புஷ்பராகம், புத்தகங்கள்

banner

Leave a Reply

  • S.marimuthu


    Sir.dhanusu rasi.pooradam.34. merrieage .palan sollunga

    November 13, 2020

  • Gopinath e


    Send guru peyarchi for dhansu rasi and health predictions

    October 9, 2020