AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

dateApril 9, 2025

பொதுப்பலன்:

உங்கள் ராசிக்கு 5 வது  வீடாகிய மிதுனத்தில் இந்த பெயர்ச்சி நடைபெறும். இந்த பெயர்ச்சி மே 15, 2025, அதிகாலை 2:30 மணியில் இருந்து  ஜூன் 2, 2026 வரை, இருக்கும். மேலும் இந்த காலக்கட்டத்தில் குருபகவான்  உங்கள் 1வது வீடு, 9வது வீடு மற்றும் 11வது வீட்டைப் பார்க்கிறார்.

இந்த  காலகட்டத்தில் நீங்கள் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். தொழிலில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி காணப்படலாம். உத்தியோகத்திலும் சிறப்பான நிலை இருக்கும். உங்கள் சக ஊழியர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துவதன் மூலம், நீங்கள் ஒரு அனுகூலமான பணிச் சூழலை வளர்ப்பீர்கள். பணியிடத்தில்  குழுப்பணி சிறப்பாக இருக்கும். மற்றும் பணியிடத்தில் நீங்கள்  வெளிப்படையான  தொடர்பு கொள்வீர்கள்.  இதனால் உங்கள் பங்களிப்பு வெளிப்படும். பணியிடத்தில் தனிப்பட்ட திருப்தி மலர்வதற்கும் இது உதவும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி நெருக்கடிகளை சந்திக்க வாய்ப்புள்ளது.  செலவு செய்வதற்கு முன் யோசித்து செயல்பட வேண்டியது அவசியம்.   தேவையற்ற வாங்குதல்களைத் தவிர்த்து, உண்மையில் தேவைப்படும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட உங்கள் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.  இது உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட முயற்சிகளில் நற்பலன்களை அளிக்கும்.

மாணவர்கள் சிறப்பான சாதனைகளை படைக்க அருமையான வாய்ப்பு அமையும். இது உங்கள் கல்வி மற்றும் கடின உழைப்பின் காலம் மற்றும்  கல்வியில் வெற்றி பெற இது ஒரு சிறந்த நேரம். உங்களின்  கல்வி முயற்சிகளுக்கு பெற்றோர்  மற்றும் ஆசிரியர் ஆதரவு எப்போதும் இருக்கும்.

உத்தியோகம்

உத்தியோகத்தின் மூலம் சிறந்த பலன்களை காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் முன்னேற்றம் காணலாம். உங்கள் சக பணியாளர்களுடனான தொடர்பை நீங்கள் மேம்படுத்திக்  கொள்வீர்கள். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். இது உங்களை உற்சாகப்படுத்தும். உங்கள் குழுவுடன் இணைந்து நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் கடமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஊதிய உயர்வும் நீங்கள் பெறலாம். உங்கள் விடா முயற்சிக்கான பலனாக இது அமையலாம். சுருக்கமாக, இந்தக் காலக்கட்டத்தில்  பெரிய வெற்றிகள் கிடைக்கும். உங்கள் எல்லா முயற்சிகளும் உங்களுக்கு மகிழ்ச்சியை பெற்றுத் தரும், உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கும். உங்கள் சக ஊழியர்களுடன் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நல்லுறவு உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரிதும் உதவும். உங்கள் உத்தியோக வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான நேரம்.

காதல்/ குடும்ப உறவு

வீட்டில் இருக்கும் மூத்தவர்களுடனான உறவு இணக்கமற்று இருக்கலாம்.  அதனால் நீங்கள் நினைக்கும் வகையில் உறவை அமைத்துக் கொள்ள இயலாமல் போகலாம்.  இதனால் நீங்கள் சோகம் மற்றும் ஏமாற்றத்தை சந்திக்கலாம். குழந்தைகளுடனான உறவு சுமுகமின்றி இருக்கலாம். அவர்களுடன் சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது. உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை பரஸ்பரம் வெளிப்படையாக இருந்து நல்ல உறவை வளர்க்க முயற்சி செய்யுங்கள். இது நீண்ட காலத்திற்கு நல்லுறவை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும்.

திருமண வாழ்க்கை

உங்கள் அன்றாட வாழ்க்கை பற்றிய உங்கள் விவாதங்கள் காரணமாக சில சவால்கள் எழலாம். அதனால் தவறான புரிந்துணர்வு இருக்கலாம். இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பீர்கள். ஒருவரின் கருத்து மற்றவரை புண்படுத்துவதாக அமையலாம்.  இருவருக்கும் இடையே எழும் வாக்குவாதம் காரணமாக சற்று சூடான சூழ்நிலை இருக்கலாம். அதிக குடும்ப பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கலாம். இருவரும் சமநிலையைக் கண்டறியப் போராடலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நிதி நெருக்கடி, சேமிப்பு மற்றும் செலவு பற்றிய கவலை மற்றும் மோதல்கள் எழலாம். இந்த காரணிகள் அனைத்தும் நீங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தை பாதிக்கலாம்.

நிதிநிலை

இந்த காலகட்டத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் சில சிக்கல்கள் இருக்கலாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.  தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் பண நெருக்கடிகளை சந்திக்க நேரும் என்பதால்  பட்ஜெட் அமைத்து செயல்பட வேண்டியது அவசியம். இந்தக் காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவ முன் வருவது கடினம். அந்த ஏமாற்றம் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கலாம். எனவே, நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்கள் தேவைகளை உணர்ந்து உங்கள் பண விஷயங்களில் தகவலறிந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் சக்தி மற்றும் திறன் அறிந்து  நடந்து கொள்ளுங்கள்.

மாணவர்கள்

ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள்  சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். இளங்கலை மாணவர்களும் சிறப்பாகப் படித்து கல்வி பயில்வார்கள். முதுகலைப் பட்டதாரி மாணவர்களிடையே உற்சாகமான போக்கு இருக்கலாம்.  மாணவர்கள் தத்தம் துறைகளில் முன்னேறலாம். வெளிநாட்டில்சென்று பயில நினைக்கும் மாணவர்களுக்கு இது ஏற்ற காலக் கட்டமாக இருக்கும். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் தங்களின்   ஆய்வறிக்கை தயாரிக்க  மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  அங்கீகாரம் பெறுவதற்குகடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படலாம்.

ஆரோக்கியம்

 பொதுவாகவே உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வீட்டு உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தியானமும் மற்றொரு முக்கிய அங்கமாகும். சுவாசப் பயிற்சி மேற்கொள்வது நல்லது.  தியானம், மனதை  ஒருமுகப்படுத்த உதவுகிறது. சரியான உணவுடன் தியானப் பயிற்சி  எடுத்துக் கொள்ளும்போது, ​​மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த அடித்தளம் அமைக்கப்படுகிறது. 


banner

Leave a Reply