மகரம் மார்ச் மாத பொதுப்பலன்கள் 2023
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் கவனம் முழுவதும் குடும்ப நலன் மற்றும் சேமிப்பு குறித்தாக இருக்கலாம். உங்கள் நிலைப்பாட்டை தக்க வைக்க குடும்பத்தில் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். இந்த மாதம் எதிலும் ஓர் நிலைத்தன்மை காண்பீர்கள். நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் அது சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்திற்காக அதிக அளவில் பணம் செலவு செய்ய நேரலாம்.
உத்தியோகம் :
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் மிதமான பலன்கள் இருக்கலாம். உங்கள் முயற்சிக்கேற்ற பலன் காண்பது அரிது. பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து அளிப்பதிலும் சில பிரச்சினைகள் இருக்கலாம். பெண் பணியாளர்கள் மூலம் மாதத்தின் முதற் பகுதியில் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். பிற்பகுதியில் நிலைமை சீராகும்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை
காதல் / குடும்ப உறவு :
உறவைப் பொறுத்தவரை இந்த மாதம் கலவையான பலன்கள் கிட்டும். ஆரம்ப காலத்தில் மகிழ்ச்சியும் பொழுதுபோக்கும் காணப்படும். தம்பதியர்களுக்கு இடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். குடும்பத்தில் அவ்வப்போது வாக்கு வாதங்கள் இருக்கலாம். என்றாலும் இந்த மாதம் உறவில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சந்திரன் பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் ஸ்திரமான நிதிநிலை இருக்கக் காண்பீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் இந்த மாதம் பயன் கிட்டாது. குடும்ப நலனுக்காக இந்த மாதம் பணத்தை செலவு செய்வீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியை விட முதல் பகுதியில் நல்ல வருமானம் பெரும் வகையில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் முழுவதும் மிதமான ஆரோக்கியம் காணப்படும். மாதத்தில் முதல் பாதியில் கால் வலியால் நீங்கள் அவதியுற நேரலாம். தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். அதனால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் இந்த மாத ஆரம்பத்தில் பாதிக்கப்படலாம். மாத இறுதியில் படிப்படியாக குணமாகலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
தொழில்:
மாதத்தின் முதல் பாதியில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும். மாத இறுதியில் தொழிலில் முன்னேற்றம் காணலாம். தகவல் தொழில் நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சில வீழ்ச்சிகளை சந்திக்க நேரலாம். வருமானம் குறையலாம். தொழில் ரீதியாக கடன் வாங்க நேரலாம்.
தொழிலில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை
தொழில் வல்லுனர்கள் :
இந்த மாதம் நீங்கள் மிதமான பலன்களைக் காண்பீர்கள். உங்கள் உழைப்பிற்கேற்ற பலன்களைக் காண்பது கடினமாக இருக்கலாம். என்றாலும் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவில் செயல்படும் மகர ராசி தொழில் வல்லுனர்கள் சிறந்த பலன்களைக் காண இயலும். ஐடி துறையில் இருப்பவர்கள் சில பதட்டமான தருணங்களைக் காண நேரலாம். சில தொழில் நுட்ப பிரச்சினைகள் காரணமாக உங்களுக்கு அளித்த பணிகளை குறித்த நேரத்தில் முடித்து அளிப்பதில் சிரமங்களை எதிர் கொள்வீர்கள்.
தொழிலில் முன்னேற்றம் காண : ராகு பூஜை
மாணவர்கள் :
.மாணவர்கள் இந்த மாதம் மிதமான பலன்களைக் காண்பார்கள். இந்த மாத ஆரம்பத்தில் சில தடைகளை சந்திப்பார்கள். கிரக நிலைகள் ஓரளவே சாதகமாக உள்ளது. மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கல்வி பயில முயல வேண்டும். இத்தகைய போராட்டங்களை கடக்க ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவது நல்லது.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

Leave a Reply