தனுசு மார்ச் மாத பொதுப்பலன்கள் 2023
தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் கவனம் முழுவதும் உங்கள் வசதிகள், வீடு மற்றும் தாய் சம்பந்தமான விஷயங்களில் இருக்கலாம். குழந்தைகள் பற்றிய கவலை இருக்கும். அவர்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் தந்தை அல்லது ஆசானிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குறுகிய தூரப் பயணங்களை நீங்கள் மேற்கொள்ள நேரலாம்.
உத்தியோகம் :
இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். பணியிடத்தில் வசதிகளும் முன்னேற்றமும் காணப்படலாம். உங்கள் பணிக்கான அங்கீகாரம் நீங்கள் பெறுவீர்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்கள் பணிக்கு அங்கீகாரம் தருவார்கள். கடந்த காலங்களின் முயற்சிகள் இந்த மாதம் நற்பலன்களை அளிக்கும். பெண் பணியாளர்கள் மாதத்தின் முதல் பகுதியில் பயனுறுவார்கள். உத்தியோத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டலாம்.
காதல் / குடும்ப உறவு :
உறவைப் பொறுத்த வரை இந்த மாதம் சாதாரண பலன்கள் கிட்டும். மாதத்தின் முதல் பகுதியில் உறவில் மகிழ்ச்சியும் பிணைப்பும் இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல புரிந்துணர்வு இருக்கலாம். என்றாலும் உங்கள் வார்ததைகளில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கலாம். என்றாலும் பங்குச் சந்தை முதலீடுகள் எதிர்பார்த்த லாபங்களை அளிக்காது. இந்த மாதம் நீங்கள் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணமற்ற வகையிலும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும். மாதத்தின் முதல் பாதியில் அதிர்ஷ்டம் மூலம் உங்களுக்கு வருமானம் பெருகும். குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். பெண் நண்பர்கள் மூலம் பொருளாதார ஆதாயம் பெறுவீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கலாம். உங்கள் உடல் நலம் குறித்த பிரச்சினைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் தாயின் உடல் நலம் குறித்த கவலை இருக்கலாம். கண்கள் மற்றும் தொண்டை சார்ந்த பிரச்சினைகளால் அவதியுற நேரலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
தொழில் :
ஆட்டோ மொபைல் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் அதிக வாடிக்கையாளர்கள் மற்றும் அதிக வருமானம் பெறுவார்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கலாம். தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கலாம். நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பது நல்லது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் வாடிக்கையாளர்களுடன் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.
தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை
தொழில் வல்லுனர்கள் :
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடைபெறும். நீங்கள் தொழிலில் பிறருக்கு வழிகாட்டியாக இருக்கலாம். முன்னேற்றம் காணலாம். வருமானம் பெருகலாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரலாம். தொழில் செய்யும் இடத்தில் உங்கள் பேச்சில் கவனம் தேவை.
தொழிலில் முன்னேற்றம் காண : பிருகஸ்பதி பூஜை
மாணவர்கள் :
மாணவர்கள் கலவி மற்றும் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள். கடின உழைப்பை மேற்கொண்டு தேர்வுகளை சிறப்புற எழுதுவார்கள். கிரக நிலைகளும் அவர்களுக்கு சாதகமாக உள்ளது. பிரகாசமான எதிர்காலம் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது ஞாபக சக்தி மற்றும் கவனத்திரன் அதிகரிக்க ஹயக்ரீவர் மற்றும் புதன் கிரக வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

Leave a Reply